விஸ்வரூப செய்திகள் 22/7-1

0
22

♈ 🇮🇳    8am -22-7-2017-saturday*   🇮🇳 ♈🇮🇳  *vishwarubam news*

♈ 🇮🇳  இந்திய எல்லை பகுதிக்குள் சீனா அத்துமீறி வருவதை கண்டித்து அந்நாட்டு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என சிலிகுரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்— vishwarubam news

♈ 🇮🇳  லண்டன்: உங்களுக்கே தெரியாமல் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள தகவல்கள் திருடப்படும் என்ற அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது. இது பேஸ்புக் செட் அப்பில் உள்ள குறைபாடு என்று கூறப்படுகிறது.இதனால் வேறொருவர் உங்கள் அக்கவுண்ட்டில் ஊடுவ முடியும். இது தொடர்பாக லண்டனிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு பல்வேறு ஷாக்கிங் தகவல்கள் உள்ளன— vishwarubam news

♈ 🇮  பிரிட்டனின் முதல் பெண் தலைமை நீதிபதி பதவியேற்பு

♈ 🇮  திருவண்ணாமலையில் ஸ்டாலின் ஆய்வு

♈ 🇮  அமெரிக்க வான் தாக்குதல்: 15 ஆப்கன் போலீசார் பலி

♈ 🇮  இந்தியாவில் டாக்டர்கள் எண்ணிக்கை குறைவு: சுகாதார துறை தகவல்

♈ 🇮  மேற்கு வங்கத்தில் நாகப்பாம்புகளுடன் பக்தர்கள் பேரணி—vishwarubam news

♈ 🇮  அமர்நாத் யாத்திரை:ஒரே நாளில் 4650 பேர் தரிசனம்

♈ 🇮  டில்லியில் ஜனாதிபதி ஆட்சி : பா.ஜ., எம்.பி. வலியுறுத்தல்—vishwarubam news

♈ 🇮  வெளியுறவு அமைச்சக புதிய செய்தித் தொடர்பாளராக ராவீஷ் குமார் நியமனம்

♈ 🇮  வெளிநாட்டு வங்கிகளில் ரூ.19,000 கோடி கறுப்பு பணம்

♈ 🇮🇳 நெல்லை அருகே விஷம் குடித்து கணவன் மனைவி தற்கொலை—vishwarubam news

♈ 🇮  தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே,ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., ஆகிய அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகளில் இருந்து,ஆண்டுதோறும், தமிழகத்தின் தேவைக்காக,192 டி.எம்.சி., நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும். முறைப்படி தண்ணீர் வழங்காமல், கர்நாடக அரசு மறுத்து வருகிறது.தென் மேற்கு பருவமழை துவங்கியதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து துவங்கியது. இதையடுத்து, காவிரியில், வினாடிக்கு, 4,000 கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டது. இது, சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு வருகிறது.கர்நாடகாவில், சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், நான்கு அணைகளுக்கும் நீர்வரத்து அபரிமிதமாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், நான்கு அணைகளும் விரைவில் நிரம்ப வாய்ப்பு உள்ளது.அதே நேரம், காவிரியில் நீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது. நான்கு அணைகளில் இருந்தும், வினாடிக்கு, 3,707 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது.இதனால், மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் சரியும் என,பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்- vishwarubam news

♈ 🇮  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.77 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.94 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஜூலை -22) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது

♈ 🇮  கொழும்பு : நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேரை இலங்கை கப்பற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுக கப்பற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும் மீனவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்

♈ 🇮🇳 மணிக்கு 600 கி.மீ. வேக ரயில்களை இயக்குவது தொடர்பாக ஆப்பிள் தொழிற்நுட்ப நிறுவனத்துடன் பேசி வருகிறோம் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு கூறினார்.— vishwarubam news

♈ 🇮  திண்டிவனம் அருகே மருத்துவர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை

♈ 🇮  இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்க தலைவர் ேக.பி.ராமலிங்கம் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக கடந்த ஜூன் 30ம் தேதி திருச்சியில் திமுக விவசாய அணி, இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம், காங்கிரஸ்,இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக,விடுதலை சிறுத்தைகள், உழவர் உழைப்பாளர் கட்சி நிர்வாகிகள் கலந்து பேசி எடுத்த முடிவின்படி தமிழகம் முழுவதும் வருகிற ஆகஸ்ட் 16ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் பேரணி,ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்— vishwarubam news

♈ 🇮  ஆலந்தூர்: காஞ்சிபுரம் மாவட்டம் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பாக,ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் வழங்குதல் விழா நேற்று முன்தினம் நங்கநல்லூரில் நடந்தது. காஞ்சி மாவட்ட ரசிகர் மன்றத் தலைவர் கே.ஆர்.ஆனந்தன் தலைமை தாங்கினார். ஆலந்தூர் பகுதி தலைவர் இளமாறன் முன்னிலை வகித்தார். உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டார். இதில்,உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாநிலத் தலைவரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்பட ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

  • ♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

189total visits.