விஸ்வரூப செய்திகள் 2/6-1

0
18

♈🇮🇳   *9am-2-6-2017-friday*  🇮🇳♈*  *vishwarubam news*

♈🇮🇳   அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஓவர் சவுண்டால் இப்போது ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுதான் தமிழக அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாகிவிட்டதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சி நடுங்கி போயுள்ளார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்

♈🇮🇳   இத்தாலியை சேர்ந்த நிறுவனம் காபி மிஷின் கொண்ட ஸ்மார்ட்போன் உறையை தயாரித்துள்ளது-இத்தாலியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் Mokase என்ற பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் உறையை தயாரித்துள்ளது. இந்த உறை மற்ற ஸ்மார்ட்போன் உறைகள் போல போனை பாதுகாக்க மட்டுமல்ல; காபி மிஷினாகவும் செயல்படும். பணியில் இருக்கும் போது திடீரென காபி குடிக்க தோன்றினால் எழுந்து சென்று குடித்து வர சோம்பல் படுவார்கள் சிலர். சிலர், காபி மிஷினை எங்கே தேடி செல்வது என விட்டுவிடுவார்கள். இதுபோன்ற கவலைகள் இனி வேண்டாம்; ஸ்மார்ட்போன் உறையிலே காபி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உறையை வாங்கி மாட்டிக்கொண்டு,அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். வழங்கப்படும் காபி காப்சூல்களை உறைக்குள் போட வேண்டும். இந்த காப்சூல் தண்ணீரும் காபித்தூளும் கலந்து உருவாக்கப்பட்டது. பின் அதிலிருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால் போதும். 50-60டிகிரி செல்சியஸில் சூடான காபி தயாராகிவிடும். ஒரு காப்சூலுக்கு 25 மி.லி. காபி கிடைக்கும். இந்த காபி மிஷின் ஸ்மார்ட்போன் உறையின் விலை ரூ.3,600க்கு விற்கப்படுகிறது. மேலும் அனைத்து தரப்பு ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த் உறை வடிவமைக்கப்பட்டுள்ளது

♈🇮🇳   தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மகனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளார். பேரன் பிறந்ததால் ‘தாத்தா’வாக பதவி உயர்வு பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் முதல்வர்

♈🇮🇳   நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான, சி.பி.ஐ.,யின் அதிகாரிகள் போல் நடித்து, மோசடி செய்த நபர்களுக்கு, அந்த அமைப்பின் ஊழியரே போலி அடையாள அட்டைகள் தயாரித்து கொடுத்துள்ள அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது

🇮🇳   வாடிக்கையாளர்கள், தங்களின் வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமல், வேறு வங்கிக்கு மாறும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது குறித்து, ரிசர்வ் வங்கி வட்டாரம் கூறியதாவது: தற்போது, மொபைல் போன் எண்ணை மாற்றாமல்,வேறு நிறுவனத்தின் சேவைக்கு, வாடிக்கையாளர்கள் மாறும் வசதி உள்ளது. இதே போல, ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி.,வாடிக்கையாளர்கள், வேறு நிறுவனங்களுக்கு மாறும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, வங்கி வாடிக்கையாளர்களும், அவர்களது கணக்கு எண்ணை மாற்றாமல்,வேறு பொதுத் துறை வங்கிக்கோ அல்லது தனியார் வங்கிக்கோ மாற,வழிவகை செய்வது பற்றி, ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. வங்கிகளில், தற்போது வாடிக்கையாளர் கணக்கு எண்ணுடன், ‘ஆதார்’கார்டு எண் இணைக்கப்பட்டு வருகிறது. அதனாலும், மொபைல் போன் வழி பணப் பரிவர்த்தனை பிரபலமாகி வருவதாலும், இது சாத்தியமாகும்.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது

♈🇮🇳   தேனி மாவட்டம் கம்பம் காட்டுப்பள்ளிசாலையில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கல்வீச்சு சம்பவமும் நிகழ்ந்தது. மோதலை கட்டுப்படுத்த முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்

♈🇮🇳   செயின்ட்பீட்டர்ஸ் பர்க் : கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலை அமைப்பது உட்பட 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்தியா ரஷ்யா இடையே கையெழுத்தானது

♈🇮🇳   சென்னை சில்க்ஸ் கட்டடம் தீ விபத்து நிகழ்ந்த சம்பவத்தில் காப்பீடு பணம் கிடைப்பதில் சிக்கல் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை சில்க்ஸ் நிறுவனம் ரூ.10 கோடிக்கு காப்பீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்நிறுவனம் கட்டட விதி மீறலில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுவதால் ரூ.10 கோடி காப்பீடு பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

♈🇮🇳   வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, காங்கிரசைச் சேர்ந்த, கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது, சமூக ஆர்வலர் ராமமூர்த்தி கவுடா என்பவர், வருமான வரித்துறையில் புகார் செய்துள்ளார்

♈🇮🇳   பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள் இன்று வெளியாகிறது

♈🇮🇳   சென்னை சில்க்ஸ் தீயை அணைக்க மட்டும் ரூ.30 லட்சம் செலவு

♈🇮🇳   பஸ் ஊழியர் ஊதியம்; இன்று பேச்சுவார்த்தை

♈🇮🇳   சமீபத்தில் டில்லி சென்ற முதல்வர் பழனிச்சாமி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், அருகில் உள்ள பல மாநிலங்களுக்கும் சென்றார். அங்குள்ள பிரதிசித்தி பெற்ற கோவில்கள் அனைத்துக்கும் சென்று விட்டு, டில்லி திரும்பியவர், பிரதமர் மோடியை சந்தித்து விட்டு, தமிழகம் திரும்பினார். வேண்டுதல்களுக்காக அப்படிச் சென்றதாக, சக அமைச்சர்களிடம் கூறிய அவர், ஒவ்வொரு அமைச்சராக, நான் கண்டுகளித்து வந்த அனைத்து கோவில்களுக்கும் சென்று வாருங்கள் என, யோசனை கூறியுள்ளார்.முதல்வரின் கருத்தை ஏற்றுக் கொண்டு, முதல் நபராக டில்லி சென்றிருக்கும் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அங்கு, முதல்வர் போலவே,ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, அருகில் உள்ள மாநிலங்கள் அனைத்திலும் உள்ள கோவில்களுக்கு சென்று வருகிறார். டில்லியில், தனியார் ஹெலிகாப்டரை அமர்த்திக் கொண்டிருக்கும் அவர், கோவில் கோவிலாக சுத்தி வருகிறார்.முதல்வர் பழனிச்சாமி கேட்டுக் கொண்டதன் பேரிலேயே டில்லியில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று வருகிறார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, டில்லியில் இருந்து திரும்பியதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொல்லும் அமைச்சர், டில்லிக்கு சென்று, அங்கிருக்கும் கோவில்களுக்கு சென்று வர உத்தரவிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இப்படி ராஜேந்திர பாலாஜி, திருப்பதி சென்றபோதுதான், அங்கு, திருப்பதி – திருமலை தேவஸ்தான அதிகாரிகள், ராஜேந்திர பாலாஜியிடம் சண்டையிட்டதாக பரபரப்பு கிளம்பியது

♈🇮🇳   அரசு சட்டக் கல்லுாரிகளில், சட்டம் படிப்பதற்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது.புதிதாக அறிவிக்கப்பட்ட, மூன்று கல்லுாரிகள் உட்பட, ஒன்பது அரசு சட்டக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இந்த ஆண்டு எந்த வயதினரும், சட்டம் படிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்கள்,இன்று முதல் வினியோகிக்கப்படுகின்றன. சென்னை அடையாறு சட்ட பல்கலை மற்றும் அந்தந்த சட்டக் கல்லுாரிகளில், விண்ணப்பங்களை பெறலாம். மற்றும் விழுப்புரம், ராமநாதபுரம், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் கிடைக்கும்

♈🇮🇳   கோவை : போத்தனூர் அருகே வெள்ளலூர் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். வெள்ளளூர் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே யானை சுற்றித்திரிவதால் பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

♈🇮🇳   தி.நகர் உஸ்மான் சாலையில் 3வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்

♈🇮🇳   கோவையில் யானை தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

♈🇮🇳   பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: டிரம்ப் அதிரடி

♈🇮🇳   ஞாயிற்றுக்கிழமை அன்று கவிக்கோ அப்துல் ரகுமானின் இறுதிச் சடங்கு : உறவினர்கள் தகவல்

♈🇮🇳   சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிப்பு பணிகள் : அதிகாரிகள் ஆய்வு

♈🇮🇳   சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிப்பதற்கு ஆயத்த பணிகள் தீவிரம்

♈🇮🇳   உஸ்மான் சாலை மேம்பாலத்தில்3வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்

♈🇮🇳   டெல்லியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு

♈🇮🇳   டிஜிபி பட்டியலுக்கு தற்காலிக அங்கீகாரம்

♈🇮🇳   பாஜ தொழிலதிபர்கள் லாபத்துக்காக எருமைகளுக்கு விலக்கு மத்திய அரசு திட்டம்-மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:  இறைச்சிக்காக பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையில் இருந்து எருமைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஏனெனில் பாஜ.வுக்கு நெருக்கமான சிலர் எருமை இறைச்சி ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் அவர்கள் இந்த முடிவை எடுக்க உள்ளனர்.  நாட்டில் உள்ள மொத்த ஓட்டுகளில் வெறும் 29 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்று ஆட்சியில் அமர்ந்த பாஜ ஒட்டுமொத்த மக்களையும் கொடூரமாக நடத்த முயற்சி செய்கிறார்கள். ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்ய அவர்கள் யார்? ஒருவர் என்ன ஆடை அணிய வேண்டும் என்று முடிவு செய்ய அவர்கள் யார்? இதெல்லாம் அவர்களின் தனிப்பட்ட விருப்பம்

♈🇮🇳   ‘பாகிஸ்தானுடன் நெருங்கிய ராணுவ தொடர்பு இல்லை’-பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: பாகிஸ்தானுடன் நெருங்கிய ராணுவ தொடர்பு இல்லை.  எனவே இந்தியாவுடனான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கிய தொடர்பிலா இருக்கிறது?  காஷ்மீர் எப்போதும் இந்தியாவுக்கு சொந்தமானது. அங்கு தீவிரவாதத்தை பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை தடுக்க பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இன்னும் ஒருவாரத்தில் இந்தியாவை உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்

 

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

 

139total visits.