விஸ்வரூப செய்திகள் 2/6-2

0
17

♈🇮🇳   *12pm-2-6-2017-friday*  🇮🇳♈*  *vishwarubam news*

♈🇮🇳  அடிப்படை அறிவியல் அறிவே இல்லாமல் ஆண் மயிலின் கண்ணீரால்தான் பெண் மயில் கர்ப்பமடைகிறது என்று உளறிய ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியை ஊர் உலகமே கழுவிக் கழுவி ஊற்றி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு மடத்தனமான கருத்துக்களை மூளைக்குள் பதுக்கி வைத்திருந்த இவர் எப்படி நீதிபதியாக செயல்பட்டார் என்பதுதான் அனைவரின் ஆச்சரியமாகவும் இருக்கிறது
♈🇮🇳   விஸ்வரூபம் பத்திரிக்கை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்களத்தூர் வார்டு எண் .7 கிருஷ்ணா ரோடு மிகவும் பரபரப்பாக இயங்க கூடிய சாலையாகும். இங்கு தான் பல அடுக்கு மாடி குடியிருப்பு, கிராம நிர்வாக அலுவலகம், அரசு தொடக்கப்பள்ளி, நியாய விலை கடை, வரி வசூல் மையம், திருமண மண்டபம் என இச்சாலையில் அமைந்துள்ளது. இங்கு பல மாதங்களாக ஒவர்லோடு காரணமாக மின் விநியோகம் சீராக இல்லை,அடிக்கடி இரவு நேரங்களில் மின் தட்டுப்பாடு காரணமாக விலையுர்ந்த மின் சாதனப்பொருட்கள் சேதம் என அன்றாடம் மக்கள் மிகச் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல முறை பெருங்களத்தூர் துணை மின் நிலையத்திலும், உயர் அதிகாரிகளிடமும் மின் விநியோகம் சீராக கிடைக்க அதிக மின்திறன் கொண்ட உயர்மின் அழுத்த  டிரான்ஷ்ஃபார்மர் எங்கள் பகுதியில் அமைத்து தர வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆனால் இன்று வரை ஏனோ மின்வாரியம்எங்கள் பகுதியில் டிரான்ஷ்ஃபார்மர் அமைத்து தரவில்லை.இந்நிலையில் தான் புதிய எண் 36 கிருஷ்ணா ரோட்டில் மின்சாரம் சீராக இல்லமால் ஒவர்லோடு பிரச்சனை மற்றும்  பேரூராட்சி நிர்வாகத்தால் முறையாக அங்கீகாரம் கூட பெறமால் கட்டப்பட்ட ஆஸ்னா வணிக வளாக கட்டிடத்திற்கு உயர் மின் அழுத்த மின் இணைப்பு முறைகேடாக உதவி பொறியாளர் திரு.வெங்கடேசன் அவர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.இந்த ஆஷ்ணா வணிக வளாக கட்டிடம்உள்ளூர் திட்ட குழும அனுமதியின்றியும், முறையான கட்டிட வரைப்பட திட்ட அனுமதி இன்றியும், கட்டப்பட்ட கட்டிடம் ஆகும், மேலும் எந்த துறையிலும் முறையான அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடமாகும். இக்கட்டிடத்திற்கு உயர் மின் அழுத்த மின் இணைப்பு வேண்டி மனு அளிக்கப்பட்டிருந்தது. இதையறிந்த ,பொதுமக்களாகிய நாங்கள் முதலில் எங்கள் பகுதியில் டிரான்ஷ்ஃபார்மர் அமைத்துவிட்டு,பின்பு ஆஷ்ணா  வணிக வளாக கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என உதவி பொறியாளர் திரு.வெங்கடேசன்அவர்களிடம்ஆட்சேபனை மனு அளித்தோம். ஆனால் அதை கொஞ்சம் கூட செவிசாய்க்கமால் கையூட்டாக பல இலட்சங்களை உதவி பொறியாளர் திரு.வெங்கடேசன் அவர்கள் பெற்றுக்கொண்டு ,மின் இணைப்புஆஸ்னா வணிக வளாக கட்டிடத்திற்குமின்வாரிய சட்ட  திட்டங்களுக்கு மாறாக டிரான்ஸ்பார்மர் அமைக்கமால்  வழங்கிவிட்டார்.இதனால் இந்த கோடை காலத்தில் சொல்ல முடியாத அளவில் நாங்கள் சிரமம் அடைகிறோம். மின் விநியோகம் (Low voltage High voltage ) என மாறி மாறி வருவதால் விலையுர்ந்த மின்சாதன பொருட்கள் பழுதடைவதுடன், அச்சாதனங்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலையும் உருவாகியுள்ளது. மேலும் அடிக்கடி இரவு நேரங்களில் மின் தட்டுப்பாடு வேறு. இப்போதுவணிக வளாகத்தில் ஆஷ்ணா மகளிர் விடுதி என புதியதாக தொடங்கப்பட்டுள்ளது

♈🇮🇳  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு மகனுடன் சிகிச்சைக்கு வந்த வேலடிமடையைச் சேர்ந்த ராஜா என்பவரை, பயிற்சி எஸ்.ஐ., க்கள் முத்து செல்வம், இப்ராகிம் சுல்தான் சரமாரியாக தாக்கினர். இருநாட்களுக்கு முன் மகனுக்கு காய்ச்சல் அதிகமானதால் இரவு அரசு மருத்துவமனைக்கு வந்த ராஜா, டாக்டரிடம் ஊசி போடச் சொல்லி கெஞ்சியுள்ளார். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டியவரை பயிற்சி எஸ்.ஐ.,க்கள் பரிசோதனைக்கு அழைத்து வந்தால் அவரை பரிசோதித்தனர். அதனை சிறுவனின் தந்தை தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த முத்து செல்வம், இப்ராகிம் சுல்தான் இருவரும் ராஜாவை சரமாரியாக அடித்து மருத்துவமனையை விட்டு வெளியே விரட்டினர். தந்தையை அடிக்காதீர்கள் என்று சிறுவன் கெஞ்சியும் அவரை விரட்டியடித்தனர்

♈🇮🇳  பாகிஸ்தானின் லக்ஷர் இ தொய் அமைப்பால் சிறப்பு பயிற்சி பெற்ற பயங்கரவாதி ஹசியா அனன் இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது

♈🇮🇳  தூத்துக்குடியில் வாகன சோதனையின் போது, ரூ.5 கோடி 5கிலோ மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரித்ததில், இந்த ஹெராயின் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவிற்கு கடத்த முயன்றது தெரிய வந்துள்ளது

♈🇮🇳   கோவையில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.59,100வனத்துறை மூலம் உடனே வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

♈🇮🇳   காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் யுனெஸ்கோ குழு ஆய்வு

♈🇮🇳   ‘பே வாட்ச்’ ஆங்கில திரைப்படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

♈🇮🇳   சென்னையில் கருணாநிதியின்94வது பிறந்தநாள் விழா

♈🇮🇳   மதுக்கடை மீதான தாக்குதல் குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

♈🇮🇳   தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது

♈🇮🇳   தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

♈🇮🇳   கவிக்கோ அப்துல் ரகுமான் உடலுக்கு திருமாவளவன் அஞ்சலி

♈🇮🇳   கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவுக்கு கி.வீரமணி இரங்கல்

♈🇮🇳   சுகோய்-30 போர் விமான விபத்தில் உயிரிழந்த விமானி உடலுக்கு அஞ்சலி

♈🇮🇳   தேச துரோக வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்

♈🇮🇳   பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கேரளா வருகை

♈🇮🇳   பாலில் ரசாயனம் கலப்பது பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

♈🇮🇳   மகாராஷ்டிராவில் பாலை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

♈🇮🇳   இளையராஜாவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் வாழ்த்து

♈🇮🇳   அப்துல் ரகுமான் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

♈🇮🇳   கோவை: ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டம்

♈🇮🇳   கோவை யானை தாக்கி 4 பேர் பலி: சம்பவ இடத்தில் கலெக்டர் ஆய்வு

♈🇮🇳   பங்குச்சந்தைகளில் அதிரடி உயர்வு : சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சம்

♈🇮🇳   இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.34

♈🇮🇳   கருணாநிதிக்கு த.மா.கா., தலைவர் வாசன் வாழ்த்து

♈🇮🇳   கடலூர்: வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க மக்கள் எதிர்ப்பு

♈🇮🇳   சென்னை சில்க்ஸ் இடிப்பு : கலெக்டர் ஆய்வு

♈🇮🇳   குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

♈🇮🇳   சென்னை ராயபுரம் போக்குவரத்து காவல்துறை இன்று வாகன ஓட்டிகளை மடக்கி அபராதம் விதித்து வசூலித்து வருகின்றனராம். அதற்கான ரசீதில் காவலரே கையெழுத்து போட்டுவிடுகிறாராம் .எதற்கு என்ற விவரங்கள் ஏதும் சொல்வதில்லையாம் .இதனால் வாகன ஓட்டுகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது – வடசென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் நிலத்தடி நீர்ருக்கு போர் போடுபவர்களின் வீடுகளுக்கு சென்று வசூல் வேட்டை நடத்துகிறாராம் . சோழாவரம் காவல் எல்லையில் ஒரு விபத்து சம்பவத்தில் பெர்மிட் இல்லாமல் ஓடிய டிராக்டர் ஒன்றை 20000- இருபதாயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்டு விடுவித்ததாக புகார் எழுந்துள்ளது. செங்குன்றம் ஆர் டி ஓ 1500- சோழாவரம் காவல் நிலையத்திற்கு 6000- லஞ்சம் கொடுத்து ஒரு வாகனத்தை ஒருவர் மீட்டேடுத்தாராம்

♈🇮🇳   எல்லையில் அத்துமீறி தாக்கும் பாகிஸ்தான், இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது போல், அந்நாட்டு தூதருக்கு மத்திய அரசும் சம்மன் அனுப்ப வேண்டும் என பாதுகாப்பு நிபுணர்கள் கூறியள்ளனர்

♈🇮🇳   அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தமிழ் நாட்டில் முதலிடமும், அகில இந்தியாவில் 21 ஆவது இடமும் பெற்ற பிரதாப் முருகனுக்கு வைகோ நேரில் பாராட்டு தெரிவித்தார். அப்போது வைகோவிடம் பேசிய பிரதாப் முருகன்,தமிழகத்தின் எதிர்கால நலனுக்கும்,நேர்மையான நிர்வாகத்திற்கும் தன்னை அர்ப்பணிப்பேன் என்று கூறினார்

♈🇮🇳    *மாதவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ் குமார் தீவிர கண்காணிப்பு பணியால் கூடாரத்தை காலி செய்யும் குற்றவாளிகள்..!*

*காவல்துறைக்கு தன்னார்வ சமூக ஆர்வலர்கள் பாராட்டு..!*

——————

மாதவரம் புழல் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில்  வீடுபுகுந்து 106-சவரன் நகைகளை கொள்ளையடித்து பிடிபட்ட ராஜா (எ) முருகேசன், சிவக்குமார், சதீஷ் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது …

குற்றப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ் குமாரின் பரிந்துரையின் பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையர் நடவடிக்கை
♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

 

646total visits.