விஸ்வரூப செய்திகள் 27/6-2

0
8

♈🇮🇳   *12pm-27-6-2017-tuesday*  ♈🇮🇳  *vishwarubam news*

♈🇮🇳   குற்றாலம் அருவிகளில் வெள்ளம் : குளிக்கத் தடை

♈🇮🇳   ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.64.41

♈🇮🇳   இந்திய பங்குச்சந்தைகள் சரிந்தன

♈🇮🇳   நீட் தேர்வால் தமிழகத்திற்கு பின்னடைவு: திருமாவளவன்

♈🇮🇳   முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

♈🇮🇳   சென்னையில் நல்லகண்ணுவுடன் ஸ்டாலின் சந்திப்பு

♈🇮🇳   எம்.பி.பி.எஸ்., விண்ணப்ப விநியோகம் துவங்கியது

♈🇮🇳   ஜூலை 7ம் தேதி டிஜிட்டலில் வெளியாகிறது அடிமைப்பெண்

♈🇮🇳   வெனிசுலா நாட்டில் சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவில் மனித கழிவுகளை கலந்து கொடுத்து வலுக்கட்டாயமாக வாயில் திணித்த கொடூரம் நடந்துள்ளது. இதனை மனித உரிமைகள் ஆணையம் கையிலெடுத்துள்ளது

♈🇮🇳   ஆதார் கார்டு இல்லாதவர்களுக்கு அரசின் உதவியை மறுக்க கூடாது என்று ஆதார் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆதார் கார்டு பதிவு செய்ய செப்டம்பர் 30வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

♈🇮🇳   உத்திர பிரதேசத்தில் டென்ட் கிடங்கில் பயங்கர தீ விபத்து

♈🇮🇳   ரயில் பயண டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன

♈🇮🇳   அம்பேத்கர் சட்ட பல்கலை., சட்டப்படிப்பு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று ( 27 ம் தேதி) வெளியிடப்படுகிறது. http://www.tndalu.ac.inஎன்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

♈🇮🇳   அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன

♈🇮🇳   அரசு மருத்துவர்களுக்கான சிறப்பு மதிப்பெண் அரசாணை ரத்துக்கு எதிரான மனு ஏற்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. ஜூலை 4ம் தேதி அவசர மனுவாக விசாரிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. மருத்துவ மேல்படிப்புக்கு கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் குறித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது

♈🇮🇳 ரஷ்ய டுடே டிவி உலக வரலாற்றில் முதல் முறையாக 3D முறையில் செய்திசெய்தியை ஒளி பரப்பி உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

♈🇮🇳 மழையின் காரணமாக வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு இன்று (27.06.2017) விடுமுறை.மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. த.ந.ஹரிஹரன் இ.ஆ.ப. அவர்கள் அறிவிப்பு

♈🇮🇳 விஜய் டிவியில் #BiggBoss நிகழ்ச்சி காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.ரியாலிடி ஷோவில் மிகவும் பிரசித்தமான கான்செப்ட் இது! எஸ்டிமேட் சரியென்றால் விஜய் டிவியின் வியாபாரம் கீழ்க்கண்டவாறு இருக்கலாம்!ஸ்டுடியோ செட்டிங் செலவு ₹20கோடி.நிகழ்ச்சி ஆங்கர் கமலுக்கு ₹ 20 கோடி.மற்ற 14 பேருக்கு ₹ 42கோடி-100 நாள் படப்பிடிப்பு செலவு ₹25 கோடி-முதல் நாள் மற்றும் கடைசி நாள் விழாச் செலவு  ₹ 3 கோடி-மொத்த செலவு ₹110 கோடி-இனி வரவு!-விளம்பரம் மட்டும்.-30 வினாடிக்கு ₹ 25 லட்சம்-ஒரு நாளின் மொத்த வியாபார நிமிடங்கள் 25 (x 60 விநாடி = 1500/30 = 50x.25) = ₹12.5 கோடி-100 நாட்களுக்கு வரவு ₹ 1250 கோடி-மொத்த லாபம் =₹ 1140 கோடிகள்!????????

♈🇮🇳 விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில்,ஜல்லிக்கட்டு போராளி ஜூலியானா (ஜூலி),மற்றும் நடிகர் ஸ்ரீ இருவரும் நெருக்கமாக பேசியதாக நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். எல்லோரும் செட்டுக்குள் வந்தபோது கட்டிப்பிடித்துக்கொண்டனர்,எனக்குதான் கட்டிப்பிடிக்க ஆளில்லை என ஜூலி கூறிய வார்த்தை சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஜூலி எந்த அர்த்தத்தில் இதை பேசினாரோ ஆனால், நெட்டிசன்கள் ஆளாளுக்கு ஒரு காரணத்தை கூறி வருகிறார்கள். ஜூலி இப்பதான் பாயிண்டுக்கு வந்திருக்கு எல்லோரும் யாரை யாரையோ கட்டிபிடிக்கிறாங்க எனக்கு யாரும்இல்ல நீஇருனு ஒருத்தர்ட்ட சொல்லுது. “ஸ்ரீ ” பண்ணுற கூத்தையெல்லாம் பாத்தா ஏதோ டீவி சீரியல்காரன் ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்து நடிக்குதுங்க போல. என்ன கட்டிப்பிடிக்க யாருமே இல்லனு அந்த பொண்ணு சொல்லும் போது கண்ணே கலங்கிட்டேன்.மதுவுக்கு எதிரா போராடி சிறை சென்ற இளம்பெண் நந்தினி வீரத்தமிழச்சியா?மெரீனாவில் இரட்டை அர்த்த கோசம் போட்ட ஜூலி வீரத்தமிழச்சியா? அரை குடம் தழும்பும்.. ஒன்னுமே தெரியாத ஜூலி கரெக்டா அந்த வேலைய பண்ணுது..

♈🇮🇳 ஆலந்தூர் பகுதி தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பாக 4ஆம் ஆண்டு கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நந்தம்பாகத்தில் 25.06.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. விழாவிற்கு நந்தம்பாக்கம் S.சண்முகபாண்டியன் தலைமை வகித்தார். ஆலந்தூர் K.P.ரஜினிசாரதி,  A.நெல்சன், போரூர் N.ரவி, நந்தம்பாக்கம்D.துரை சீனிவாசன் முன்னிலை வகித்தனர். ஓன்றிய செயலாளர்G.R.உமாபதி வரவேற்றார்.இந்த விழாவில் கல்வியில் சிறந்து விளங்கிய ஆதரவற்ற குழந்தைகளுக்கு மடிக்கணினி, பள்ளி சீருடை, 2017-2018 கல்வி ஆண்டுக்கு தேவையான அனைத்து நோட்டுகள்,கல்வி உபகரணங்கள் மற்றும் 10 ஆம் வகுப்பு & 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கதொகை, பள்ளி, கல்லூரி கட்டணம் போன்றவை வழங்கப்பட்டது.இதனை காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் க.அன்பழகன், பானுமூர்த்தி, ரஜினிபாபு, மற்றும் சென்னை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் N.ராமதாஸ், R.சூர்யா, K.ரவி மற்றும் வளசை M.ரஜினாஆனந்த், சூளைமேடு ரவிச்சந்திரன்,பட்ரோடு B.பீட்டர் ரஜினி ராஜ், ரஜினிகேசவன், M.K. ரஜினி சுகுமார்,மு.ரஜினிடில்லி, மயிலை பட்டாணிமணி, டி.முருகன், பன்னீர்செல்வம்,சாதிக்பாட்ஷா, லஷ்மணன், டி.சுந்தர், இணைஇயக்குனர் கார்த்திகேயன், தாமஸ், ஸ்ரீகாந்த், நியூஸ்பேப்பர் சீனு வழங்கினார்கள்.இந்த விழாவில் அனைத்து பகுதி ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளும், ஏரலமான ரஜினி ரசிகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனார். விழாவிற்கான ஏற்பாடுகளை S.ரஜினி ஸ்ரீ ராகவேந்திர முரளி செய்திருந்தார்.

♈🇮🇳 தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் பகிரங்கமாக எடப்பாடி அரசுக்கு ஆதரவு தரமாட்டோம் என அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. அப்படி அறிவிக்கும் நிலையில் என்னதான் ஓபிஎஸ் கோஷ்டி ஆதரவு கொடுத்தாலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலைதான் உருவாகும். இதனால் ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுக்கும் அதிமுகவுக்கும் முடிவுரை எழுதப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. தமிழகம் விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் நிலையைத்தான் இந்த மோதல் உருவாக்கி வருகிறது

♈🇮🇳 சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆல்ப்ஸ் மலைசிகரத்தில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. 11 ஆயிரத்து 371 அடி உயரத்தில் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து ஆர்வமுடன் யோகா செய்தனர். பாரதிய ஜனதாவின் முக்கிய நிர்வாகியான ராம் மாதவ்வும் இதில் பங்கேற்றார். ஸ்விட்சர்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் முயற்சியால் உலகின் மிக உயரமான இடத்தில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது

♈🇮🇳 சிங்கப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு விடுதியில் தனியாக தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்தவர் நுபூர் சரஸ்வத். பாடகி,கவிதாயினி என பன்முகத்திறமைக் கொண்ட இவர் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இந்தியாவிற்கு அடிக்கடி வருவதுண்டு. பொதுவாக தனியாக வரும் அவர், இங்குள்ள விடுதிகளில் தங்கி நிகழ்ச்சிகளை முடித்துக்கொடுத்து விட்டு பின்னர் சிங்கப்பூருக்கு திரும்புவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த அவர், பிரபலமான இணையதளம் மூலமாக ஐதராபாத் விடுதியில் அறை ஒன்றை முன்பதிவு செய்திருந்தார். அங்கு சென்றபோது, இவர் தனியாக தங்கவுள்ளதை ஏற்றுக்கொள்ளாத விடுதி நிர்வாகம், அவருக்கு ரூம் தர மறுத்தது. இதனால் செய்வதறியாமல் தவித்த நுபூர், நடுஇரவில் எங்கு போய் தங்குவது என்றும் ஓட்டல் நிர்வாகத்தினரிடம் முறையிட்டுள்ளார்.ஆனால் தனியாக பெண்களை அனுமதிக்க கூடாது என்பது நிர்வாகத்தின் விதி எனக்கூறி,அவரை நிர்வாகத்தினர் வெளியேற்றியுள்ளனர்.இதனால் மனமுடைந்த நுபூர் இவ்விவகாரம் தொடர்பாக டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் பதவி செய்தார். நாட்டில் பெண்கள் தனியாக செல்லக்கூடாதா….?, என்னைத் துணைத்தேட கட்டாயப்படுத்துவதற்கு இவர்கள் யார்….? என்ற ரீதியில் அவர் பதிவிட்டிருந்தார்.இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் வைரலாகி பரவியதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக பல பெண்களும், மகளிர் அமைப்புகளும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளன. தனியாக தற்போது பெண்கள் உலகம் முழுவதும் சுற்றிவர ஆரம்பித்துள்ள நிலையில், ஓட்டலில் அறை கொடுக்கக்கூட இந்தியாவில் யாரும் தயாராக இல்லை எனவும் நுபூர் வேதனை தெரிவித்துள்ளார்

♈🇮🇳 ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பொறியாளர் சூசன் கிரஹாம் என்பவர் மரங்களை நடும் ட்ரோன்களை வடிவமைத்து அசத்தியுள்ளார். இந்த புதிய ட்ரோன் மரங்கள் வளர்வதற்கேற்ற சூழலைத் தேர்ந்தெடுப்பதிலும், பின்னர் அந்த பகுதிகளில் விதைகளைத் தூவவும் உதவும் என்று சூசன் நம்பிக்கை தெரிவிக்கிறார். இந்த ட்ரோன்கள் மூலம் ஆண்டுக்கு நூறு கோடிக்கும் அதிகமான மரங்களை நட முடியும் என்று கூறும் சூசன், பருவநிலை மாறுபாட்டில் காடுகள் அழிப்பு முக்கிய பங்கு வகிப்பதாகவும் கவலை தெரிவிக்கிறார். மனித நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் மரம் வளர ஏற்ற சூழல் இருந்தால், அதையும் இந்த ட்ரோன்கள் மூலம் கண்டறியலாம் என்பது கூடுதல் சிறப்பு என்கிறார் சூசன்

♈🇮🇳 தாலிபான்களால் சுடப்பட்ட போது மரணம் கூட, தமக்கு ஆதரவாக இருப்பதை உணர்ந்ததாக நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய் தெரிவித்தார்

♈🇮🇳 காதலன் பேசவில்லை என்பதால் வெறுப்படைந்த நர்சிங் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.பெங்களூர் அருகே உள்ள திப்பகோனடனஹள்ளியில்

♈🇮🇳 காஷ்மீரில் கேபிள் கார் அறுந்து விழுந்து 7 பேர் பலியான சம்பவம் கடவுளின் செயல் என்று தெரிவித்த அதிகாரிகள், தாங்கள் பின்பற்ற வேண்டிய விதிகளை முறையாக பின்பற்றியதாக தெரிவித்துள்ளனர்

♈🇮🇳 2017-ஆம் ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் தட்டிச் சென்றார்

♈🇮🇳 சென்னை துறைமுகத்தில் இருந்து மது விருந்து சுற்றுலாவுக்கு 60-க்கும் மேற்பட்டோர்களை ஏற்றிச் சென்ற சொகுசுக் கப்பல் சாதவினா என்ற கப்பல் கரை திரும்பியது. சாதவினா கப்பல் குறிப்பிட்ட நேரத்தில் கரைக்குத் திரும்பாததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர்

♈🇮🇳 இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இல்லை எனலாம். ஸ்மார்ட்போன் இல்லையென்றால் எந்த காரியமும் நடக்காது என்ற நிலைமை கிட்டத்தட்ட வந்துவிட்டது. கம்ப்யூட்டர், தொலைபேசி, கேமிரா,டிவி, ரேடியோ என வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அம்சங்களும் கையடக்க ஸ்மார்ட்போனில் இருப்பதால் ஸ்மார்ட்ப்போனுக்கு அழிவே இல்லை என்றுதான் அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் பேஜரை ஸ்மார்ட்போன் அழித்தது போல், ஸ்மார்ட்போனை ஆக்மெண்ட்டெட் என்ற தொழில்நுட்பம் அழிக்க வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த தொழில்நுட்பம் மட்டும் அறிமுகமாகிவிட்டால் இப்போது நாம் ஸ்மார்ட்போனில் பார்ப்பது அனைத்தையும் எந்த உபகரணும் இல்லாமல் வெறும் கண்களால் அனைத்தையும் 3D தொழில்நுட்பத்தில் பார்க்கலாமாம்.ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி மலிவான விலையில் கிடைக்கும் என்றும், இந்த தொழில்நுட்பம் மட்டும் வளர்ந்துவிட்டால், ஸ்மார்ட்போன் மட்டுமின்றி டிவி உள்பட திரை இருக்கும் அனைத்துப் பொருள்களும் தனது மதிப்பை இழக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே ஸ்மார்ட்போனுக்கும் ஒரு முடிவு உண்டு என்றே விஞ்ஞானிகள் அடித்து கூறுகின்றனர்.

♈🇮🇳 தாமிரபரணி நீரை குளிர்பான நிறுவனங்களுக்கு தர தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை தள்ளுபடி செய்துள்ளது. 25 தனியார் நிறுவனங்களுக்கு நீர் வழங்க தடைகோரி நெல்லையை சேர்ந்த ராகவன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆற்றிலிருந்து தினமும் 46.66 லட்சம் லிட்டர் நீர் வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களுக்கு நீர் தருவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என மனுதாரர் அம்மனுவில் கூறியிருந்தார். இம்மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

♈🇮🇳 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் செங்கோட்டையன்,சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார்,காமராஜ் ஆகியோர் விழாவில் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்கள் அன்பழகன்,விஜயபாஸ்கர் மற்றும் ஆட்சியர் வீரராகவராவ் ஆகியோரும் விழாவில் பங்கேற்றுள்ளனர்

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

 

139total visits.