விஸ்வரூப செய்திகள் 27/6-3

0
6

♈🇮🇳   *8pm-27-6-2017-tuesday*  ♈🇮🇳  *vishwarubam news*

♈🇮🇳 ரத்த தான பதிவு கடைசியாக உள்ளது – தயவுகூர்ந்து நல்லுள்ளங்கள் பார்க்கவும்

♈🇮🇳   ஜி.எஸ்.டி.,: பிரதமர் தலைமையில் நாளை (ஜூன் 28) அமைச்சரவை கூட்டம்

♈🇮🇳   நெதர்லாந்து இந்தியாவின் இயற்கையான கூட்டாளி: மோடி

♈🇮🇳   நாளை ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் ராம்நாத் கோவிந்த்

♈🇮🇳   ஆந்திரா: 10 நாட்களில் 15 பேர் பரிதாப சாவு -ஆந்திராவில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் நச்சுத்தன்மை நிறைந்த உணவு மற்றும் அசுத்தமான நீர் உட்கொண்டதில் கடந்த 10 நாள்களில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

♈🇮🇳   புதுச்சேரி சென்டாக்கில் சோதனைக்கு நான் அளித்த புகாரே காரணம்: கிரண்பேடி

♈🇮🇳   தனியார் பால் பவுடரில் காஸ்டிக் சோடா, பிளிச்சிங் பவுடர்: ராஜேந்திர பாலாஜி

♈🇮🇳   வேலூர்: திருப்பத்தூர், நாட்ராம்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை

டில்லியில் போக்குவரத்து போலீசாருக்கு விரைவில் கிடுக்கிப்பிடி போடப்பட உள்ளது. அவர்கள் பணியை துவக்கும் முன்பும், பணியை முடிக்கும் போதும்,கைரேகையை பதிவு செய்யும், பயோ – மெட்ரிக் நடைமுறை அமலுக்கு வர உள்ளது

ஐ.பி.எல்.,கிரிக்கெட் போட்டி போல, கேரளாவில் இனி படகு போட்டிகள் நடக்க உள்ளன

♈🇮🇳   புதுச்சேரியிலுள்ள சென்டாக் அலுவலகத்தில் 7 மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் அதிகாரிகள் கலக்கம் அடைந்தனர். மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பரிந்துரையின் படி சி.பி.ஐ. சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது

♈🇮🇳   கல்வி கட்டண கமிட்டி தமிழகத்தில் சுயநிதி மருததுவம் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த கமிட்டி 3வருடத்திற்கு ஒரு முறை கல்வி கட்டணத்தை மாற்றி அமைக்கும் அதன்படி இந்த ஆண்டு தனியார் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி உரிமையாளர்கள் கல்வி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த்னர். இதையொட்டி கமிட்டி ஆய்வு செய்து சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு கல்வி கட்டணத்தை மாற்றி அமைத்து இருக்கிறது. இன்று முதல் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்ப படிவம் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு பல்மருத்துவக் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணத்தில் மாற்றம் இல்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டு ரூ. 13 ஆயிரத்து600 மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் கல்வி கட்டணம் ரூ. 11 ஆயிரத்து 600வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும். அதே நேரம் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ. 3 1/2 லட்சம் முதல் 4 1/2 லட்சம் வரை (முந்தைய கட்டணம் ரூ. 2 1/2 லட்சம் முதல் ரூ. 3 1/2 லட்சம்) பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ. 2 1/2 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ. 12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுய நிதி பல் மருத்துவக்கல்லூரிகளுக்கு ரூ. 6 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும்,நிர்வாக ஒதுக்கிட்டு இடங்களுக்கும் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது— vishwarubam news

♈🇮🇳   நியூயார்க்(யு.எஸ்): H1 விசாவுக்கு பதிலாக B1விசாவில் ஆட்களை அனுப்ப வேலை பார்த்த காரணத்திற்காக நியூயார்க் மாநிலம் இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது வழக்கு தொடுத்திருந்தது. தற்போது,. 1 மில்லியன் டாலர் கொடுத்து வழக்கு தொடர்ந்த நியூயார்க் மாநிலத்துடன் சமரசம் செய்து கொண்டது

♈🇮🇳 கசினா என்ற செயற்கைகோள் கடந்த 13 வருடமாக சனிக்கோளை சுற்றி வந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. சனிக்கோளில் விடியல் எப்படி இருக்கும் என்ற புகைப்படத்தை தற்போது நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் மார்ச் மாதம் 31ஆம் தேதி எடுக்கப்பட்டது. சனிக்கோளிலிருந்து சுமார்6,20,000 மைல் தூரத்தில் இருந்து இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சனிக்கோளை சுற்றி பனிப்படலமாக இருக்கும் அதன் வளையங்கள் இந்த புகைப்படத்தில் தெரிகிறது. சனிக்கோள் சுரியனை சுற்றி வர 29 வருடங்கள் எடுத்துக்கொள்கிறது. அது தன்னை தானே சுற்றி வர 10 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இதுவரை அதன் விடியல் குறித்து எந்த புகைப்படமும் இல்லாத நிலையில் தற்போது நாசா அதன் விடியல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது— vishwarubam news

♈🇮🇳 இனி வாகனம் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டால் கவலைப்பட தேவையில்லை. இனிமேல் நீங்கள் பெட்ரோல் பங்க் தேடி போக வேண்டாம். நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம். உங்கள் வீடு தேடி வருகிறது பொட்ரோல். இந்த வசதி பெங்களூரில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.mypetrolpump.com எனும் நிறுவனம் இந்த  நூதன சேவையை தொடங்கி உள்ளது. வீட்டில் இருந்தபடியே மற்றும் பாதி வழியில் பெட்ரோல் வாகனம் பெட்ரோல் இல்லாமல் நின்றாலும் சரி போன் செய்தால் போது நீங்கள் இருக்கும் இடம் தேடி பெட்ரோல் வரும். பெங்களூரின் எச்.எஸ்.ஆர் லே அவட் போன்ற இடங்களில் முல் முறையாக ஆரம்பித்துள்ள இந்த சேவை, தொடர்ந்து அனைத்து பகுதிகளுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்

♈🇮🇳  தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி மற்றும் பாலிவுட நடிகை காஜோல் ஆகியோர் நடித்துள்ள வேலை இல்லா பட்டதாரி இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது.இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. முன்பெல்லாம் ஒரு படத்தின் ட்ரெய்லரை யூடியூப்பில் மட்டுமே சினிமா ரசிகர்கள் கண்டு களிப்பார்கள். ஆனால், தற்போது பேஸ்புக்கிலும் பார்க்க துவங்கியுள்ளனர்.இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை தனுஷ் தனது தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை இதுவரை 47 லட்சம் பேர் பார்த்துள்ளனர். யூடியூப்பில் 37 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதேபோல்,இப்படத்தின் தெலுங்கு டிரெய்லரை யூடியூப்பில் 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர். எனவே, மொத்தமாக இப்படத்தின் வீடியோவை இதுவரை 1 கோடிக்கும் மேல் பார்த்து ரசித்துள்ளனர்.இந்த செய்தி விஐபி-2 படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது— vishwarubam news

♈🇮🇳   சசிகலா குறித்தும், பன்னீர்செல்வம் குறித்தும், கலாசலா, கலசலா, சின்னம்மா,சின்னம்மா, ஓபிஎஸ்ச எங்கம்மா என்பது போன்ற கோஷங்களை எழுப்பியவர் ஜூலியானா. இவரால் ஆட்சியாளர்கள் கோபமடைந்துதான் தடியடி நடத்தினர் என்ற கோணத்தில் இந்த விவாதம் நடக்கிறது. விமர்சனங்களுக்கு அடிதான் பதில் என்பதை மறைமுகமாக கூறுகிறார்கள் காயத்ரியும்,ஆர்த்தியும். “நான் திட்டுனது மூனே மூனு தலதான்..” என கூறுகிறார் ஜூலியானா. அதற்கு ஆர்த்தியோ, “பர்சனலா நீங்க ஒருத்தர் பேரச் சொல்லியே பாயிண்ட் அவுட் பண்றீங்க” என்கிறார். ஜூலியானோவோ, பாயிண்ட் அவுட் பண்றது தப்பில்லையே என்கிறார். ஆக,அதிமுகவின் ஆர்த்திக்கும், ஜல்லிக்கட்டு போராளி ஜூலியானாவுக்கும் இன்று பெரும் வாக்குவாதம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.காயத்ரி ரகுராமோ, ஜூலியானாவை பார்த்து,ஜல்லிக்கட்டுக்காக போராடினால்,ஜல்லிக்கட்டுக்காக மட்டும் போராடனும், என்று அட்வைஸ் செய்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஆட்சியாளர்கள் குறித்து அதிலும் பிரதமர் மோடி குறித்தும் விமர்சனங்கள் முன் வைத்ததைதான் பாஜகவிலுள்ள காயத்ரி ரகுராம் இவ்வாறு கண்டித்து பேசுகிறார் என புரிந்துகொள்ள முடிகிறது. இந்நிலையில், ஆர்த்தியும், காயத்ரியும்,தொடர்ந்து ஜூலியானாவிடம் வாக்குவாதம் செய்வதை போல காட்சிகள் உள்ளன. ஒரு கட்டத்தில் நான் போராளி என்று இதுவரை சொல்லியதேயில்லையே என கூறுகிறார் ஜூலியானா. தமிழ் தொலைக்காட்சி சேனல் ரியாலிட்டி ஷோக்களில் நடப்பு அரசியல் பேசப்படுவது என்பது நடைபெறாத நிகழ்வு. ஆனால், கமல் நடத்தும் நிகழ்ச்சி என்பதாலோ என்னவோ, சமகால அரசியல் பேசப்படுகிறது. ஆனால், ஜல்லிக்கட்டு விவகாரத்தை கேலி செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருப்பது ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஈடுபாடுடன் உள்ள பொதுமக்களுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது— vishwarubam news

♈🇮🇳   சென்னை மாவட்ட ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் பெண்கள் பிரிவு லீக் போட்டி நேற்று மாலை தொடங்கியது.தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழக போலீஸ் அணி வெற்றி பெற்றதுஇந்த அணி 25-15, 25-21 என்ற செட் கணக்கில் செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் அணியை வீழ்த்தியது

♈🇮🇳 பெண்களுக்கான உலக பாடி பில்டர் பட்டத்தை வென்றார் இந்தியாவின் பூமிகா ஷர்மா.இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பாடிபில்டருக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.அனைத்துப் பிரிவுகளிலும் அதிக புள்ளிகளை பெற்று பூமிகா ஷர்மா முதலிடத்தைப் பிடித்துள்ளார்— vishwarubam news

♈🇮🇳100, 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் சாதனைகள் படைத்துள்ள மின்னல் வீரர் உசேன் போல்ட்தான் இதைக் கூறியுள்ளார். இதன் மூலம் விரைவில் தான் ஓய்வு பெறப் போவதை சூசகமாக அவர் தெரிவித்துள்ளார். தனக்குத் தேவையான அனைத்தையும் பெற்று விட்டதாகவும் உசேன் போல்ட் கூறியுள்ளார்!

♈🇮🇳 ஜே சதீஷ்குமார் கடந்த பத்து ஆண்டுகளாக தனது இயக்குநர்களுடன் இணக்கமாகவே பயணிக்கிறார். அதை நேற்று மேடையில் அரங்கேற்றிக் காட்டினார். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்’.ஸ்ரியா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் வேல்மதி இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி ஒரு முக்கிய பங்காற்றி இருக்கும் இந்த படத்துக்கு அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அத்தோடு ஜேஎஸ்கே ஃபிலிம்ஸ்10ஆம் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடினர். இந்த பத்தாம் ஆண்டை கொண்டாடும் வகையில் தன் பேனரில் படம் செய்த இயக்குநர்கள் அனைவரையும் விழாவுக்கு வரவழைத்து மேடையில் ஏற்றி நினைவுப் பரிசு வழங்கினார். — vishwarubam news

♈🇮🇳 சென்னை திருவல்லிக்கேணி மாநிலக் கல்லூரி வளாகத்தில் மாணவர் விடுதி கட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் விடுதி கட்டுவதற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

♈🇮🇳  தேர்தல் விதிமீறல் வழக்கில் இருந்து தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ் விடுவிக்கப்பட்டார். எல்.கே. சுதீஷை விடுதலை செய்து விருத்தாச்சலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார். விதிமீறலில் ஈடுபட்டதாக எல்.கே.சுதீஷ் மீது 2011ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது

♈🇮🇳   தி.மலை : செங்கம் அருகே மேல் செங்கத்தில் கிணற்றை தூர்வாரிய போது மண் சரிந்தது. மண்ணில் சிக்கிய 4தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமடைந்துள்ளனர்— vishwarubam news

♈🇮🇳 வதோதரா: ரூ.1.5 கோடி கடனை கட்ட சொல்லி வந்த நோட்டீசால் டியூசன் ஆசிரியர் ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

குஜராத் மாநிலம் கர்ஜான் நகரை சேர்ந்தவர் சுரேந்திரசின் சவ்தா. இவர் டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு உத்தரவாதம் அளித்த நபர் , கடனை திருப்பி செலுத்தாத காரணத்தினால், ரூ.1.45 கோடி திருப்பி செலுத்த வேண்டும் என கூறப்பட்டியிருந்தது. அந்த நோட்டீசில் வதோதராவை சேர்ந்த எம்.டெக் ஹர்த்வார் தனியார் நிறுவனம் சார்பில் கடன் வாங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
புகார் தொடர்பாக போலீசார் கூறுகையில், கடந்த 2014 ல் விளம்பரம் அடிப்படையில், சவ்தா, அந்த நிறுவனத்தின் ராஜேஸ் சோனி, குவுமில் மோடி ஆகியோரை சந்தித்தார். அவர்களும் கடன் பெற்று தருவதாக கூறினர். இதனை நம்பி அவர்கள் அளித்த ஆவணத்தில் கையெழுத்து போட்டுள்ளார். ஆனால்,அவர்கள் நிறுவனத்தின் பெயரில் கடன் வாங்கி 10 பேருக்கு விநியோகம் செய்துள்ளனர். ஆனால், கவ்தா கடன் வாங்க மறுத்துவிட்டார். ஆனால் அவருக்கு நோட்டீஸ் வந்துள்ளது. தனது கையெழுத்தை மோசடியாக பயன்படுத்தி கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக சவ்தா தெரிவித்ததார். இவ்வாறு போலீசார் கூறினர்

♈🇮🇳*நம் தாயின்  உயிரை காக்க இரத்தம் தானம் செய்வீர்*

*தமிழரசி *  என்னும் *54* வயது தாய்க்கு  *இருதய அறுவைச் சிகிச்சை* செய்ய வேண்டும்.

அறுவை சிகிச்சை செய்வதற்கு *O NEGATIVE* இரத்தம் *2UNIT* தேவைப்படுகிறது ..

தயவு செய்து *கோவை*   சுற்றுப்பகுதியில் உள்ள

*O NEGATIVE* நண்பர்கள் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்ய வேண்டுகிறோம்..

இடம் :: ராமகிருஷ்ணா  மருத்துவமனை கோவை

நாள் :: 28.06.2017  காலை

8.00 மணிக்குள்

தொடர்புக்கு :720039996,9994152052

நம் சகோதரராக எண்ணி இரத்தம் தானம் செய்வோம்*

*கௌரி சங்கர்* என்னும் வயது நண்பர் *டெங்கு காய்ச்சலால்* கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் ..

இவருக்கு *A POSITIVE* அல்லது *A1 POSITIVE* இரத்தம் *4 யுனிட்* கண்டிப்பாக தேவைப்படுகிறது ..

தயவு செய்து *ஈரோடு* மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள *A POSITIVE* அல்லது *A1 POSITIVE* இரத்தவகை நண்பர்கள் தாமாக முன்வந்து ஓர் உயிரைக் காக்க வேண்டுகிறோம் ..

மருத்துவமனை — Sudha Hospital,, Erode

இரத்த வங்கி — Lions Blood Bank,, Erode

நாள் — 28.06.2017 மாலை 4.00 மணிக்குள்

தொடர்புக்கு — 9944364111

♈🇮🇳   *vishwarubam* 🇮🇳♈

 

81total visits.