விஸ்வரூப செய்திகள் 28/6-1

0
17

♈🇮🇳   *6am-28-6-2017-wednesday*  ♈🇮🇳  *vishwarubam news*

♈🇮🇳 பாரம்பரிய உடை அணிந்து வந்த மேகாலயா பெண்ணை, விருந்தில் பங்கேற்க, டில்லியில் உள்ள பிரபல கிளப் அனுமதி மறுத்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

♈🇮🇳 தமிழகத்தில், ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தில், கேபிள், ‘டிவி’ ஒளிபரப்பை துவங்குவதற்கு, அரசு கேபிள் நிறுவனத்திற்கு அளித்திருந்த காலக்கெடுவை,மத்திய அரசு, மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளது

♈🇮🇳 மத்திய வழித்தடத்தில், மின்சாரம் கொண்டு செல்வதில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்

♈🇮🇳 எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா; அமைச்சர்கள் இன்று அவசர ஆலோசனை

♈🇮🇳 டிப்ளமா ஆசிரியர் விண்ணப்பிக்க இன்று கடைசி

♈🇮🇳 மீராகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்

♈🇮🇳 ஜி.எஸ்.டி., அறிமுக விழா: பார்லி.,யில் இன்று ஒத்திகை

♈🇮🇳 திருச்சுழி அருகே சிலை கொள்ளை: டி.எஸ்.பி தலைமறைவு

♈🇮🇳 அமர்நாத் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம்

♈🇮🇳 நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்ஸாண்டருடன் மோடி சந்திப்பு

♈🇮🇳 இத்தாலி கடற்படையினர் 48 மணி நேரத்தில் 8000 அகதிகள் மீட்பு

♈🇮🇳 நெல்லை: கந்தூரி விழாவில் மின்சாரம் தாக்கி யானை பாகன் பலி

♈🇮🇳 திருவண்ணாமலையில் இந்து முன்னணி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

♈🇮🇳 காவல்துறையினர் தங்களது குறைகள்,கோரிக்கைகளை தெரிவிப்பதற்காக மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்டுள்ளது. tnpolicewelfare@gmail.com என்ற முகவரிக்கு குறைகளை அனுப்பலாம் என டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் தெரிவித்தார். மேலும் காவலர்கள் சங்கம் அமைக்க கூட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 27-6-2017 ஒரே நாளில் ரூ.4 கோடி காணிக்கை வசூலானது. 3 நாள்கள் தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர்

திருவள்ளூர் அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலையத்தின் 2வது அலகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது

♈🇮🇳 அறிவியல் புனைகதைகளை மையமாக கொண்டு எடுக்கப்படும் சினிமாக்களை உண்மை என கூறுவதாக இருக்கலாம் அல்லது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசாங்கத்தால் வெளியிடப்படும் ஒரு ஆவணமாக கூட இருக்கலாம். இந்த அறிகை மற்றும் ஆவணங்களின் படி நமது பூமிக்கு எண்ணற்ற வேற்று கிரக உயிரினங்கள் விஜயம் செய்கின்றன. மற்ற கிரகங்களில் இருந்து மட்டுமல்ல இதில் சில வகை பரிணாம வளர்ச்சியுடனும் இருந்து உள்ளன. இதில் சில நுட்பமான விமானங்கள் மூலம் வந்து உள்ளன என கூறுகிறது. அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களில் சில..

1) பறக்கும் தட்டுக்கள் குழுவாக எடுத்து வருகிறது. மற்றவர்கள் தொலை கட்டுபாட்டின் கீழ் உள்ளனர் (under remote control)

2) அவர்களின் குறிக்கோள் அமைதியானதாக உள்ளது.வந்தவர்கள் விமானத்தை நிலை நிறுத்த ஆழ்ந்து சிந்திக்கின்றனர்.

3) வந்தவர்கள் மனிதர்களைப் போல் உள்ளனர். ஆனால் மிகப்பெரிய வடிவில் உள்ளனர்.

4) அவர்கள் பூமியில் உள்ள மனிதர்களை தவிர்க்கவில்லை. ஆனால் அவர்கள் தங்களது சொந்த உலகத்தில் இருந்து வந்து உள்ளனர்.

5) அவர்கள் பூமியை பயன்படுத்தி கொள்ள இங்கு வரவில்லை. ஆனால் அவர்கள் எந்த கிரகத்தில் இருந்து வந்து உள்ளார்கள் என்பது அறியகூடிய வகையில் இல்லை.

6) அவர்கள் வந்த பறக்கும் தட்டுகள் கதிரியக்க ஆற்றல் அல்லது ஒருவகை கதிர் வீச்சை பெற்றிருக்கின்றன. எந்தவிதமான தக்குதலிலும் எளிதில் உடையகூடியது போன்று அது உள்ளது. அவர்கள் தங்கள் விருப்பபடி உள் நுழைவதற்கு மற்றும் சுவடே இல்லாமல் சாதாரணமாக நம் பார்வையில் இருந்து மறைந்து விடுவர்.

7)அவர்களை ரேடியோ மூலமாகவோ ராடார் மூலமாகவோ அவர்கள் இயந்திரத்தை அடைய முடிய வில்லை.

பிற சேர்க்கைகள்: அவர்களது வாகனம் ஓவல் வடிவில் உள்ளது. ஒரு வெப்பத்தை தாங்கி கொள்ளும் உலோக குழல் வடிவத்தில் உள்ளது. இன்னும் முன் பகுதி கூண்டு கட்டுப்பாடுகள் அறியப்படவில்லை. நடுவில் பரிசோதனைகூடம் உள்ளது. பின்புறம் போர் தளவாடங்களை கொண்டு உள்ளது. அவை அடிப்படையில் ஒரு சக்தி வாய்ந்த ஆற்றல் இயந்திரத்தை, கொண்டுள்ளது.

வேற்றுகிரகவாசிகள் கடந்த 50 ,60 ஆண்டுகள் வருகை தருகிறார்கள் என்றால் அவர்களால் 100 முதல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் இதேபோல் வருகை தந்திருக்க முடியும். மனிதர்கள் முன்னேற்றம் அடைந்ததாலும் நவீன கருவிகளாலும் இன்று தெரிந்து கொள்ளும் சாத்தியம் ஏற்பட்டு உள்ளது.

♈🇮🇳   தலைவராக அரசு தேர்வுத்துறை முன்னாள் இயக்குனர், கு.தேவராஜன் நியமிக்கப்பட்டார். குழுவின் உறுப்பினராக, தேர்வுத்துறை முன்னாள் இணை இயக்குனர் ராமராஜன்,பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர்கள் பூபதி, வாசு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சமீன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.இந்த வருடம் புதிதாக 11ம் வகுப்புக்கு அரசு பொதுத் தேர்வு வருகிறது. எனவே முதலில் 11ம் வகுப்புக்கு கேள்விகள் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த குழு உறுப்பினர்கள் 11ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு கேள்விகள் வடிவமைக்க கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பாட நிபுணர்களுடன் பேசி வருகிறார்கள். இந்த கேள்விகள் மாணவர்களின் திறனை பரிசோதிக்கும்படி இருக்கும். மாணவர்கள் புரிந்து படித்திருப்பதை ஆய்வு செய்யும். அதே நேரத்தில் அனைத்து தரப்பு மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் கேள்விகள் இருக்கும். இன்னும் ஒரு மாதத்திற்குள் கேள்விகள் வடிவமைப்பு தயாராகி விடும். அதன்பிறகு அரசின் ஒப்புதல் பெறப்படும். காலாண்டு தேர்வு வர இருக்கிறது. வினாத்தாள் வடிவமைத்து கொடுத்து அதன்பிறகுதான் தேர்வுத்துறை அதை அச்சடிக்க கொடுக்கும். அதனால் தான் விரைவில் கேள்விகளை வடிவமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது

♈🇮🇳   பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.90க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.38க்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை6 மணி முதல் அமலுக்கு வருகிறது.சென்னையில் பெட்ரோல் விலை ரூ.65.90க்கும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.56.38க்கு விற்பனை செய்யப்படும். அதேபோல் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ63.46க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.53.53க்கும் விற்பனை செய்யப்படும். புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ62.19க்கும், டீசல் ரூ.55.28க்கும் விற்பனை செய்யப்படும்

♈🇮🇳   சர்வதேச ரான்சம்வேர் தாக்குதலால் மும்பை ஜவகர்லால் நேரு துறைமுகத்தின் முனையங்களின் பணிகள் முழுமையாக முடங்கின

♈🇮🇳   தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 14-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. 9நாட்களாக கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மற்றும் ரம்ஜான் பண்டிகை காரணமாக 25, 26-ந் தேதிகளில் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்றும், சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை.3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (புதன்கிழமை) மீண்டும் கூட இருக்கிறது.  நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள், பாசனத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது

♈🇮🇳   50 ஆண்டுகளுக்கு முன்னால் ஏடிஎம்கள் முதல் முறையாக இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டன. பார்க்லேஸ் வங்கி இந்த் முதல் ஏடிஎம்மை அறிமுகம் செய்தது. இந்த ஏடிஎம்கள் எப்படி பயன்பாட்டிற்கு வந்தன என்பது குறித்து ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உள்ளது. ஷெப்பர்ட்-பேரென் என்பவர் ஒரே ஒரு நிமிடம் தாமதமாக வங்கிக்கு சென்றதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இதனால் வருத்தமுற்ற அவர் வங்கி மூடியிருந்தாலும் பணம் எடுக்க வசதியாக ஓர் இயந்திரம் இருந்தால் என்ன என்று சிந்தித்தார். அந்த இயந்திரத்தில் ஓர் அட்டையை நுழைத்தால் அது பணம் வழங்கியது. இந்த முறையை அவர் சாக்லேட் வழங்கும் இயந்திரத்தைப் போன்று செயல்படும் தன்மையுடன் அமைத்தார்.முதல் ஏடிஎம் ஜூன் 27 ஆம் தேதி 1967ஆம் ஆண்டில் வடக்கு லண்டனில் திறக்கப்பட்டது. ஆறு இலக்க குறியீட்டை இட்டால் பணம் கிடைத்தது. ஆனால் ஆறு இலக்கம் என்பது நான்காக குறைக்கப்பட்டது. ஏன்? பேரெனின் மனைவிக்கு ஆறு இலக்கங்களை நினைவுபடுத்த இயலவில்லை. எனவே மாற்றப்பட்டதாம்!

 

இன்று உலகம் முழுதும் 3 மில்லியன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது எங்கு முதன்முதலாக அமைக்கப்பட்டதோ அந்த லண்டனில் இன்று சுமார்70,000 ஏடிஎம்கள் உள்ளனவாம். தினத்தை நினைவுபடுத்தும் விதமாக பார்க்லேஸ் வங்கி தனது முதல் ஏ டி எம் அமைந்திருந்த என்ஃபீல்ட் கிளையை தங்கத் தகடுகளால் அலங்கரித்திருந்தது. அதையும் கடந்து வாடிக்கையாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருந்தது.தற்போது டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகளவில் வந்து விட்டாலும் பணம் எடுக்கும் இயந்திரங்களுக்கான தேவை குறையவில்லை என்கின்றனர் வங்கி அதிகாரிகள்
♈🇮🇳   முதுகலை மருத்துவ மாணவர்கள் தகுதி பட்டியல் ரத்துக்கு எதிரான தமிழக அரசு மேல்முறையீட்டு மனு

♈🇮🇳   மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் சப்தஸ்ரீகுமார். இவரது மகள் சலோனி (16). இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று காலை, சலோனியின் செல்போனை ஒரு வாலிபர், நைசாக எடுத்து கொண்டு, நகர்ந்தார். இதை பார்த்ததும்,அங்கிருந்தவர்கள் வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில்,வண்ணாரப்பேட்டையை சேர்ந்த செல்வகுமார் (26) என்பதும், இவர் மீது பல வழக்குகள் இருப்பது தெரிந்தது

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

 

175total visits.