விஸ்வரூப செய்திகள் 29/5-1

0
14

♈🇮🇳 *9am-29-5-2017-monday-news* 🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 சென்னை சென்டிரலில் இருந்து இன்று(திங்கட்கிழமை) காலை 6.40 மணிக்கு புறப்பட்டு டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் செல்லும் ‘துரந்தோ’ எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12269), இணை ரெயில் வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, 10 மணி நேரம் 35 நிமிடம் கால தாமதமாக மாலை 5.15 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

♈🇮🇳 பாகிஸ்தானில் கற்பழிக்கப்பட்டதாக புகார் கூறிய பெண்ணுக்கு மரண தண்டனை அளித்து கிராம பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கியுள்ளது

♈🇮🇳 வட கொரியா விமான எதிர்ப்பு ஏவுகணையை சோதித்ததாக வந்த தகவலை அடுத்து ஸ்கட் ரக ஏவுகணையை சோதித்ததாகவும், இது ஜப்பானுக்கு மிக அருகில் சென்று விழுந்துள்ளாதகவும் செய்திகள் தெரிவிக்கின்றன

♈🇮🇳 ஈரானிய அரசு ஆதரவு பெற்ற ஷியா துணை இராணுவம் இஸ்லாமிய அரசுப்படைகளை பின் தள்ளி மேற்கு மோசூல் நகரில் மேலும் முன்னேறி ஈராக் எல்லை வரை சென்றுள்ளன

♈🇮🇳 பாட்னா: பீகாரில் இரு மனைவிகளிடம் சிக்கி தவித்தவருக்கு அந்த மாநில போலீஸார் வினோதமான தீர்ப்பு வழங்கினர்.இரு மனைவிகள் சண்டை என்றாலே அதுவும் காவல்நிலையம் வரை சென்ற சண்டைகளில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதுதான் போலீஸார் எடுக்கும் முடிவாக இருக்கும். ஆனால் இந்த வழக்கில் அருண் முதல் மனைவி மீனாவுடன் வாரத்தில் 3 நாள்களும், இரண்டாவது மனைவி பூஜாவுடன் 3 நாள்களும்,மீதமுள்ள ஒரு நாள் தனித்தும் வாழ வேண்டும் என்பது வினோதமான தீர்ப்பை வழங்கினர். இந்த தீர்ப்பை மூன்று பேரும் ஏற்றுக் கொண்டனர்

♈🇮🇳 சரக்கு மற்றும் சேவை வரியான,ஜி.எஸ்.டி., அமலாக்கம் மற்றும், ‘ஆன்லைன்’ மருந்து விற்பனைக்கான அனுமதியை எதிர்த்து, ஓட்டல்கள்,மருந்து கடைகள் நாளை(மே 30) மூடப்படுவதால்,சாப்பாடு, அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

♈🇮🇳 நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த டிஜிட்டல் உரிமம், தமிழக அரசு கேபிள் டி.வி.,நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டு விட, அரசு கேபிள் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமா என, ஒரு பக்கம் யோசித்து கொண்டிருக்கும் அரசு கேபிள் டி.வி., கார்ப்பரேஷன் அதிகாரிகள்,எம்.எஸ்.ஓ.,க்கள் எனப்படும் ஒளிபரப்பு செண்டர்களை மூடி, கேபிள் டி.வி., ஆபரேட்டர்களுக்கு நேரடியாக சிக்னல்களை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அப்படி செய்யும் போது, என்னதான் டிஜிட்டல் மூலம் சேனல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும்,அது தெளிவாகவும், துல்லியமாகவும் தெரிய வாய்ப்பில்லாமல் போகும் என்பதால்,எம்.எஸ்.ஓ.,க்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் என, கேபிள் ஆபரேட்டர்களே கூறுகின்றனர்

♈🇮🇳 தன்னுடைய அடுத்த படமான காலா பட சூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்ற ரஜினி, சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, நான் அரசியலுக்கு எப்போது வருவேன் என்று சொல்ல முடியவில்லை; எப்போது அது நடக்குமோ, அது நடக்கும் என, வழக்கமாக சொல்லும் பொத்தாம் பொதுவான பதிலையே சொல்லிச் சென்றார்.ரஜினியின் இந்த குழப்பம், அவரது ரசிகர்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் ரஜினி,அரசியலுக்கு வருவார் அதை வைத்து, தமிழகத்தில் பெரிய அளவில் அரசியல் செய்யலாம் என காத்திருக்கும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பமும்; அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதை களைவதற்காகவாவது ரஜினி, விரைவில் அரசியல் கட்சி துவக்கம் குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பும், அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது

♈🇮🇳 உலக நாடுகளில் இருந்து அமெரிக்கா சென்று, திரும்பும் அனைத்து விமானங்களிலும் லேப்டாப் எடுத்துச் செல்ல விரைவில் தடை விதிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு செயலர் ஜான் கெல்லி தெரிவித்துள்ளார்

புதுடில்லி: ‘ஒருவர், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டதாலேயே, அவருக்கு ஜாமின் அளிப்பதை மறுக்கக் கூடாது; ஆதாரங்களின் அடிப்படையிலேயே முடிவு செய்ய வேண்டும்’ என,சட்ட கமிஷன் ஆலோசனை வழங்கியுள்ளது

♈🇮🇳 மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது கோட்சே மட்டுமா என்ற சந்தேகத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

♈🇮🇳 அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் துணை ஷெரிப் உட்பட8 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக35வயது மதிக்கத்தக்க ஒரு நபரை கைது செய்துள்ள போலீசார் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.கடவுளுக்கு கூட நிவேதனம் வைத்து சரி கட்டி விடலாம். ஆனால் இந்த மனைவியை சமாளிக்க முடியவில்லை என்று நகைச்சுவையாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்

♈🇮🇳 சேலம் : மேட்டூர் அணையின் நீர்வரத்து 4,169கன அடியில் இருந்து 3,012கன அடியாக குறைந்துள்ளது;அணையின் நீர்மட்டம் : 22.52 அடி, நீர் இருப்பு : 4.86 டிஎம்சி,நீர் திறப்பு : 500 கன அடி

♈🇮🇳 டாஸ்மாக் கடைக்கு எதிராக ஜூன் 15ம் தேதி பேரணி : தமிழிசை

♈🇮🇳 புதுச்சேரியில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

♈🇮🇳 திருத்தணி – அரக்கோணம் சாலையில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

♈🇮🇳 கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

♈🇮🇳 பீகாரில் கனமழை : 23பேர் பலி

♈🇮🇳 திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்டம் தொடங்கியது-திருவாரூர் தேரோட்டத்தில் ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பங்கேற்பு-திருவாரூர் தேரோட்டம்: அமைச்சர் காமராஜ் துவக்கி வைத்தார்

♈🇮🇳 நாக்பூர் ரயில்வே ஸ்டேசனில் “குளு குளு” வசதி

♈🇮🇳 டி.என்.ஏ., ஹார்ட் டிஸ்க் : மைக்ரோசாப்ட் திட்டம்

♈🇮🇳 மொனாக்கோ பார்முலா-1:செபாஸ்டியன் வெட்டல் சாம்பியன்

♈🇮🇳 உத்தரபிரதேச மாநிலம் உள்ளிட்ட சட்டசபை தேர்தலில் மெஜாரிட்டி வெற்றி பெற்றதைப்போல, ஜனாதிபதி தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பெரும்பான்மை ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெறுவார்

 

212total visits.