விஸ்வரூப செய்திகள் 29/6-2

0
15

♈🇮🇳   *11.30am-29-6-2017-thursday*  ♈🇮🇳  *vishwarubam news*

♈🇮🇳   Thanks to all Coimbatore  (Kannan)Govt hospital A+ Requirment succeed -Thanks to all Coimbatore  (தமிழரசி )Ramakrishna hospital O-Requirment succeed -Thanks to all Coimbatore  (கிருஷ்ணராஜ் )kuppusamy naidu hospital AB+ Requirment succeed-Thanks to all Coimbatore (சிவசாமி )Kuppusamy naidu hospital O+ Requirement succeed

♈🇮🇳 நைட் ஷிப்ட் வேலை பார்த்தால் ஆண்மை குறையுமா? அதிர்ச்சி தகவல்

♈🇮🇳 கெட்ட வார்த்தை பேசாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். என்றாலும் பொது இடங்களில் என்று வரும் போது சாதாரண மனிதர்கள் கூட அசிங்கமான வார்த்தைகளைப் பேசத் தயங்குவார்கள். பிரபலங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அப்படி பேசாமல் இருப்பதுதான் பொது பண்பாடு, பொது நாகரிகமாகும். பொது பண்பாடு இப்படி இருக்க தமிழ்நாட்டில் சமீபகாலமாக அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் சிலர் எச்சக்கல, எச்ச என பேசி பொது வெளியை நாஸ்தி செய்து வருகின்றனர்

♈🇮🇳 லாட்டரி சீட்டு விவகாரம்: 11போலிசார் ஆயுதப்படைக்கு மாற்றம்; திருச்சிகமிஷ்னர் நடவடிக்கை!

♈🇮🇳 திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி – வடமதுரை இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் தாமதமாக செல்கின்றன. தண்டவாள விரிசல் காரணமாக அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாள விரிசலை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்

♈🇮🇳 கொலையில் சிறந்த புலன்விசாரணை விழுப்புரம்  காவல்துறைக்கு மாநில அளவில் இரண்டாமிடம் எஸ்பி ஜெயக்குமார்-

♈🇮🇳   “பொருட்கள் உடைந்தால் அது உங்களின் பொறுப்பு” என கடைகளில் எழுதி வைத்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அதுபோன்று கடையில், தன்னால் உடைக்கப்பட்ட பிரேஸ்லேட் விலையை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஒரு பெண் மயக்கம் போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு பெண் ஒருவர் நகை வாங்கச் சென்றிருக்கிறார். அப்போது,வரிசையாக அடுக்கப்பட்டிருந்த நகைகளை ஒவ்வொன்றாக அவர் பார்த்து ரசித்திருக்கிறார். அப்போது கண்ணுக்கு மிகவும் அழகான பிரேஸ்லெட் ஒன்று தென்பட்டுள்ளது. அதனை கையில் எடுத்து அந்தப்பெண் பார்த்த போது,எதிர்பாராதவிதமாக அந்த பிரேஸ்லேட் கீழே விழுந்து உடைந்து விட்டது. உடனே கீழே விழுந்த பிரேஸ்லேட்டின் விலையை பார்த்திருக்கிறார். அதில்44,110 டாலர் என எழுதப்பட்டிருந்தது. அப்படியென்றால் இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 28 லட்சம். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், நம்மிடம் பணம் வாங்காமல் விட மாட்டார்களே..? என்ற பீதியில் மயக்கம் வந்து கீழே சரிந்திருக்கிறார். உடடினயாக அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னரே பிரேஸ்லெட்டின் நியாபகம் வந்திருக்கிறது.இதுகுறித்து அக்கடையின் உரிமையாளர் கூறும்போது, அந்தப் பெண் குடும்பத்தாரின் வருமானத்திற்கு ஏற்றதொகையை பெரும்பொருட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார். கடைக்கு போகும் போது பொருட்கள் வாங்குகிறோமோ இல்லையோ கண்ட இடத்தில் கைவைத்து சிக்கலில் சிக்காமல் இருந்தால் சரிதான்

♈🇮🇳   பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் குறித்து உலகின் மிகமுக்கியமான பிரதமர் வருகிறார்;விழித்துக்கொள்ளுங்கள் என்று அந்நாட்டின் முன்னணி பத்திரிகை ஒன்று, தனது தலையங்கத்தில் எழுதியுள்ளது. பிரதமர் மோடி, 3 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேலுக்கு வரும் ஜூலை 4ல் செல்ல உள்ளார். அவரது இந்த வருகை குறித்து ’தி மார்க்கர்’ (The Marker) எனும் இஸ்ரேலின் முன்னணி வணிக நாளிதழ், ’விழித்திரு இஸ்ரேல், உலகின் மிகமுக்கியமான பிரதமர் வருகிறார்’ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியுள்ளது. அதில், அமெரிக்க அதிகர் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு வருவதற்கு முன்பாக, அந்த பயணம் குறித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்தன. ஆனால், அவர் பெரிதாக எதுவுமே கூறவில்லை

♈🇮🇳  CHENNAI ROYAPURAM சிமின்டிரி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கிலும் மோசடி நடக்கிறது

♈🇮🇳 காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் அத்துமீறும் ராணுவ வீரர்களை பழிக்கு பழியாக பெண்கள் அடித்து துவைப்பதும், அவர்களின் அந்தரங்க உறுப்புகளை நறுக்கும் சம்பவமும் நடைபெறுவதாக சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஆஸம் கான் தெரிவித்துள்ளார்

♈🇮🇳 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, கடந்த 2008-09 ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ரூ.15 கோடியை தனது ஆண்டு ஊதியமாக பெற்று வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் பணக்கார மனிதராக அறியப்படும் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்து வருகிறார். அவருக்கு ஆண்டு ஊதியமாக ரூ.38.75 கோடி வரை வழங்கலாம் என்று நிறுவனத்தின் விதி அனுமதித்துள்ளது

♈🇮🇳இந்தியாவில், மாடுகளைக் காட்டிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பும் புகைப்பட விழிப்புணர்வு பிரசாரம் வைரலாகி வருகிறது

♈🇮🇳உலகிலேயே மதம் தொடர்புடைய முதல் பொழுதுபோக்கு பூங்கா என்றுகூறப்படும் அமைப்பை, பேனோஸ் ஐரீஸின் மையத்தில்,டியர்ரா சான்டா என்ற பெயரில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உருவாக்கியுள்ளது. இயேசு காலத்தில் இருந்த ஜெருசலத்தின் தெருக்களை அப்படியே பிரதிபலிக்க டியர்ரா சான்டா என்ற அமைப்பு முயற்சித்துள்ளது.பொழுது போக்கு பூங்காவிற்கு வருகை தந்துள்ள பார்வையாளர்கள், குறுகிய தெருக்களில் நடப்பட்டுள்ள பிளாஸ்டிக் பனை மரங்கள்,சிலைகள் மற்றும் இயேசுவின் வாழ்விலிருந்து முக்கியமான காட்சிகளிலிருந்த நடிகர்களின் உருவங்கள் வரை அதில் இடம்பெற்றுள்ளவற்றைக் காண முடியும்

♈🇮🇳 கடுமையான வறட்சி காரணமாக சோமாலியாவில் குறைந்தது 20,000குழந்தைகள் இறப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக ஒரு முக்கிய தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது

♈🇮🇳 20 ஆம் நூற்றாண்டு காலத்தில் திமிங்கலங்களின் உடல் அளவு சுருங்குவதைவைத்து, வன உயிரினங்கள் எப்போது சிக்கலில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு உதவலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது

♈🇮🇳 ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ரூ.699-க்கு விமான பயணம் செய்யும் சலுகையை வெளியிட்டுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனையையும் துவங்கியுள்ளது. இந்த சலுகை மூலம் ஜம்மு – ஸ்ரீநகர், ஸ்ரீநகர் – ஜம்மு, கவுகாத்தி – அகர்த்தலா,ஐஸ்வால் – கவுகாத்தி மற்றும் பல இடங்களுக்கு செல்லுபடியாகும். டிக்கெட் மற்றும் வரி உட்பட அனைத்தும் சேர்த்து ரூ.699 மட்டுமே என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. முதலில் புக் செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இந்த சலுகை விலையில் டிக்கெட் புக் செய்பவர்களில் பரிசு பெறுபவருக்கு சர்வதேச சுற்றுலா செல்ல டிக்கெட் வழங்கப்படும்.புக்கிங் இன்று முதல் ஜூலை 4 ஆம் தேதி நள்ளிரவு வரை நடைபெறும். ஜுலை 14, 2017 முதல் 24மார்ச் 2018 வரை எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்

♈🇮🇳     தற்போதைய டெக்னாலஜி காலத்தில் ஐடி துறையில் பணிபுரியும் பலர் நைட் ஷிப்ட் பார்த்து வருகின்றனர். இதனால் உடலுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது நைட் ஷிப்ட் பணிபுரிபவர்களுக்கு ஆண்மை குறையும் என்ற ஆய்வின் முடிவு வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சராசரியாக, ஆண் அல்லது பெண் என யாராக இருந்தாலும்,குறைந்தபட்சம் தினமும் 8 மணிநேரம் தூங்க வேண்டியது அவசியம் என்றும் இல்லாவிட்டால் அவர்களுடைய இனப்பெருக்க உறுப்புகளுக்கு பிரச்சனை ஏற்படும் என்றும் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக நைட் ஷிப்டில் வேலை செய்பவர்கள் பகலில் எட்டு மணி நேரம் தூங்குவது இல்லை. வேலைமுடித்து வீட்டிற்கு வந்தபின்னர் டிவி பார்ப்பது,குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவு செய்வது என்று இருந்துவிட்டு 4 அல்லது 5 மணி நேரமே தூங்குவதாகவும்,இதனால் நைட் ஷிப்ட் பணிபுரிபவர்களுக்கு மிக விரைவில் ஆண்மை குறைந்துவிடுவதாகவும், அந்த ஆய்வு மேலும் கூறுகின்றது

♈🇮🇳   அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. பெல்ஜியம் நாட்டில் உள்ள அழகழகான லொகேஷன்கள் குறித்து ‘விவேகம்’படக்குழுவினர்கள் மூலம் கோலிவுட்டில் பரவ தற்போது பல நடிகர்கள் பெல்ஜியத்திற்கு போய் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைக்கின்றார்களாம். விஜய் நடித்து வரும் ‘மெர்சல், சீயான் விக்ரம் நடித்து வரும் ‘ஸ்கெட்ச் மற்றும் தனுஷ் நடித்து வரும் ஹாலிவுட் படம் ஆகியவை படங்களின் படப்பிடிப்புகள் சமீபத்தில் பெல்ஜியத்தில் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெல்ஜியத்தின் சுற்றுலாத்துறைக்கு வருமானம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

♈🇮🇳வெள்ளி திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களும் தனக்கென ரசிகர்கள் கூட்டம், புகழ் என அசத்துகின்றனர். வெள்ளித்திரை கலைஞர்களை விட தற்போது சின்னத்திரை கலைஞர்கள் தான் கலக்கி வருகின்றனர். இதனால் சின்னத்திரையில் ஜொலிக்கும் பிரபலங்களுக்கு எளிதில் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.உதாரணத்துக்கு சொல்லபோனால் சிவகார்த்திகேயன், மா.கா.பா. ஆனந்த் போன்ற பலரும் சினிமா நட்சத்திரமாக இருக்கின்றனர். சின்னத்திரை பிரபலங்கள் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சில லட்சங்களை சம்பளமாக பெற்று நடிக்க ஒப்புக்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. ஏனெனில் தொலைக்காட்சி வாயிலாக இவர்கள் எளிதாக மக்களை சென்று அடைகிறார்கள். அந்த வகையில் இன்று சின்னத்திரையை கலக்கும் தொகுப்பாளர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளம் என்ற  பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.கோபிநாத் – ரூ 5 லட்சம்-மா.கா.பா.ஆனந்த் – 2 லட்சம்-ஜெகன் – ரூ 2 லட்சம்-டிடி – ரூ 3.5 லட்சம்-ப்ரியங்கா – ரூ 1 லட்சம்-பாவனா – ரூ 1 லட்சம்-ஜாக்லீன் – ரூ 1 லட்சம்

♈🇮🇳   டெல்லி-மதுரா ரயிலில் இஸ்லாமிய சகோதரர்களை வசைபாடி ஜுனைத் என்ற 17 வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்தில் டெல்லி அரசு ஊழியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜுனைத் கான் கொலை வழக்கில் உணவு இன்ஸ்பெக்டரான இன்னொரு அரசு ஊழியர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் இன்னமும் அவர் கைது செய்யப்படவில்லை

♈🇮🇳  சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று அவரின் தயார் போலீசில் புகார் செய்துள்ளார். இதனையடுத்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

♈🇮🇳 ஜிஎஸ்டி குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட உதவி எண்ணால் எந்தப் பயனும் இல்லை என்று வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

♈🇮🇳 6 நாடுகளைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடை உத்தரவு சிறிது தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி,சிரியா, சூடான், லிபியா, ஈரான், சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள்,தங்களது நெருங்கிய உறவினர்களைப் பார்க்கவும் தொழில் ரீதியாக அமெரிக்கா வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

♈🇮🇳 பலத்த சூறைக்காற்று வீசும்போது,கரூர் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக வெள்ளியணையை அடுத்த வசந்த கதிர்பாளையத்திற்கு அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. கரூர்- திண்டுக்கல் சாலையில் மணவாடி அருகே சென்று கொண்டிருந்தபோது, பலத்த சூறைக்காற்றில் பஸ்சின் மேற்கூரை தகரம் பெயர்ந்து விழுந்து தொங்கியது. இதையடுத்து டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். பின்னர் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பெயர்ந்த தகரம் அகற்றப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். தகரம் பெயர்ந்து விழுந்தபோது, அங்கு யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

♈🇮🇳 லாட்டரி சீட்டு விவகாரம்: 11 போலிசார் ஆயுதப்படைக்கு மாற்றம்; திருச்சி கமிஷ்னர் நடவடிக்கை!

♈🇮🇳  மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி கூறுகையில்,1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.www.tnsc-ert.org என்ற இணையதளத்தில் பாடவாரியாக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க நிபுணர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டு இருந்தது. 30-ந் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை 821 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வருகிற ஜனவரி மாதத்துக்குள் தயாராகி விடும். அதன் பின்னர் 2018-19-ம் கல்வி ஆண்டில் இந்த வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அதற்காக ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு பல்கலைக்கழக நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க உள்ளோம்” இவ்வாறு கூறினார்

♈🇮🇳 பெரியகுளத்தில் மாம்பழக்கூல் தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை: அமைச்சர் எம்.சி.சம்பத்

♈🇮🇳 அவிநாசி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. போனில் ஆபாச படம் காட்டி மாணவிகளுக்கு ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி அ.குரும்பாளையம் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்

♈🇮🇳ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூரில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் சிக்கித் தவித்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது

♈🇮🇳 விழுப்புரம்-காட்பாடி பாசஞ்சர் ரயில் பெட்டி தீப்பிடித்ததற்கு விபத்தே காரணம் என உதயகுமார் கூறியுள்ளார். விழுப்புரத்தில் ரயில் பெட்டியை ஆய்வு செய்த திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார் இத்தகவலை தெரிவித்துள்ளார்

♈🇮🇳 விருதுநகரில் பஸ் மீது ஆட்டோ மோதல்: பெண் பயணி பலி

♈🇮🇳 தங்கம் விலை சவரனுக்கு ரூ.72சரிவு

♈🇮🇳 ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.45

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

 

190total visits.