விஸ்வரூப செய்திகள் 4-8/2

0
11

♈ 🇮🇳   2.30pm -4-8-2017-friday*  🇮🇳 ♈🇮🇳  *vishwarubam news*

♈ 🇮🇳  Karti Chidambaram approaches Madras HC for relief after ED, CBI issue lookout notice in INX Media case

♈ 🇮🇳  Ex-Mumbai University V-C writes open letter to Maharashtra governor over varsity crisis

♈ 🇮🇳  Maharashtra: Two youths die after falling into 2,000-feet deep valley in Amboli Ghat in Sindhudurg district

♈ 🇮🇳  No-detention policy scrapped: Experts criticise move, say govt is passing its responsibility to kids

♈ 🇮🇳  அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்று இதுவரை தீர்மானிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது சசிகலாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

♈ 🇮🇳  தனது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி ஆபாசப் படங்களைப் போடுவதாக நடிகர் எஸ்.வி.சேகர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்— vishwarubam news

♈ 🇮🇳  தில்லி இராணுவ குடியிருப்பில் ஆசிரியர்வேலை இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றனர்.புது தில்லியில் நிறைவேற்றப்படுகின்ற ஆசிரியப் பணியிடங்களில் வேலைசெய்யும் வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க , துணை காலிப்பணியிடங்கள் மொத்தம் 34உள்ளன. அவற்றில் பணியாற்ற சம்பளம் ரூபய் 9,300 முதல் ரூபாய் 34,800 வரையுள்ளது. முழுமையான விவரங்கள் அறிய www.cbdelhi.in என்ற இணையத்தளம் மூலம் அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன

♈ 🇮🇳  திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் சுவாமி தரிசன வரிசையில் பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வரும் இடத்தில் வெள்ளி கதவின் வலது திசையில் 15 முதல் 20 அடி உயரத்திற்கு உள்ள இடத்தில்,இரும்புப் படி அமைத்து பிரசாதங்கள் வழங்கும் இடம் உள்ளது. அதன் அருகே பக்தர்கள் வெளியே வரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் இந்தப் படி வழியாகப் பக்தர்களை அனுமதிக்கத் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தற்போது வெள்ளி கதவு அருகே தரிசனத்திற்கு உள்ளே செல்லும் பக்தர்களும் வெளியே வரும் பக்தர்களும் குறுகிய வழியில் வந்து செல்கிறார்கள். இதனால் பக்தர்கள் மத்தியில் நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக இந்த புதிய வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்—vishwarubam news

♈ 🇮🇳  பாகிஸ்தானின் 19-வது பிரதமராக அப்பாஸி பதவி ஏற்றார். 46 மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர்—vishwarubam news

♈ 🇮🇳  அமெரிக்காவில் ஆண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஓரினச் சேர்க்கையாளர்களான டிரிஸ்டன்,பிப் சாப்லோ தம்பதி, ஏற்கனவே இரண்டு குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர்.இந்நிலையில் தங்களது குடும்பத்தை விரிவாக்க நினைத்த ரீஸ், பிப் சாப்லோ தம்பதிகள், இணையத்தின் உதவியுடன் சோரோனிக்ளிங் (chronicling) முறையில் ஒன்றாக தங்கள் முதல் உயிரியல் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.,
ஓரினச் சேர்க்கையாளர்களான ரீஸ் , சாப்லோ தம்பதி முதல் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்துள்ளது சர்வதேச அளவில் வைரலாகியுள்ளது— vishwarubam news

♈ 🇮🇳  சிக்கிம் விவகாரத்தில் எங்களின் பொறுமை இறுதி கட்டத்தில் உள்ளது என்று சீன பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது

♈ 🇮🇳  மும்பையில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

♈ 🇮🇳  தொழில் அதிபருடன் ரூ.1 கோடி நில பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில், சாலை மேம்பாட்டு கழக அதிகாரி ராதேஷ்யாம் மோபால்வரை பணி இடைநீக்கம் செய்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்

♈ 🇮🇳  உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்,தூய்மை இந்தியா திட்டத்தை அம்மாநிலத்தில் தொடங்கி இருக்கிறார். உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு அரசு பள்ளியில் முதலமைச்சர் தூய்மை செய்தார். நடிகர் அக்ஷய் குமார் மற்றும் நடிகை பூமி பெட்நேகர் ஆகியோரும் இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்— vishwarubam news

♈ 🇮🇳  நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை பூக்கடையில் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பூக்கடை பேருந்து நிலையம் முன்பு மாணவர் அமைப்பினர் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

♈ 🇮🇳  விமர்சனங்களைத் தண்டி நான் நிரபராதி என காலம் நிரூபிக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். வருமானவரித்துறை சோதனை குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். எதையும் தாங்கும் மன தைரியத்தை ஜெயலலிதா எனக்குள் விதைத்துள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார். நான் நிரபராதி என நிரூபிக்கும் நாள் தொலைவில் இல்லை என விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சட்டப்படி அனைத்தையும் எதிர்கொண்டு குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என அவர் கூறியுள்ளார்— vishwarubam news

♈ 🇮🇳  உத்தரகண்ட் மாநிலம் ஹால்டனி மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்நீத்த மேஜர் கமலேஷ் பாண்டேவிற்கு இறுதி சடங்கு நடைபெற்று வருகிறது. நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இரு தரப்புக்கும் இடையேயான இந்த தாக்குதலில், மேஜர் உட்பட 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்பது குறிப்பித்க்கது— vishwarubam news

♈ 🇮🇳  வடசென்னை அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. கழிவுகள் அகற்றும் பணிக்காக நிபுணர் குழுவை தென்மண்டல பசுமைத் தீர்பாயம் அமைத்தது. 4 பேர் கொண்ட குழு செப்டம்பர் 15க்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது

♈ 🇮🇳  மின்னணு வாக்கு இயந்திரங்களில் குளறுபடி உள்ளதாக ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடங்கியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பானது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 2019 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரம் ஒப்புகை சீட்டுடன் பயன்கடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது— vishwarubam news

♈ 🇮🇳  அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வரக்கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பாபு அப்துல்லா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். பாடத்திட்டத்தை மாற்ற குழு அமைத்துள்ளதாக தமிழ அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அரசின் பதில் மனுவை ஏற்று வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

♈ 🇮🇳  ம.பி.,யில் குழந்தைகள் படிப்பதை ஊக்குவிக்கும் வகையில், குடிசைப் பகுதியில் வசிக்கும் 5ம் வகுப்பு மாணவி, தனது வீட்டில் நூலகம் நடத்தி வருகிறார். இதனையறிந்த முதல்வர் சவுகான் நேரில் சென்று பாராட்டி நிதியுதவி செய்தார்.

♈ 🇮🇳  மும்பையில் 16 வயது சிறுவன் ஒருவனை 15 சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த 15 சிறுவர்களில் 7 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்— vishwarubam news

♈ 🇮🇳  தமிழகத்தில் பாம்பு கடித்து 156 பேர் பலி

♈ 🇮🇳  கிரானைட் வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு முடித்து வைப்பு

♈ 🇮🇳  பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம்: மத்திய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

♈ 🇮🇳  துணை ஜனாதிபதி தேர்தல்: எம்பிக்களுக்கு கோபாலகிருஷ்ண காந்தி கடிதம்

♈ 🇮🇳  நீலகிரியில் சில்வர் ஓக் மரங்களை வெட்ட ஸ்டாலின் எதிர்ப்பு

♈ 🇮🇳  முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையை செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது— vishwarubam news

♈ 🇮🇳  தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தை கைவிட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.  விவசாயிகள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க திமுக தயாராக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். விரைவில் திமுக ஆட்சி அமைந்து விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்

♈ 🇮🇳  சமாஜ்வாதி கட்சியின் எம்எல்சி சரோஜினி அகர்வால் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்— vishwarubam news

♈ 🇮🇳  மாட்டிறைச்சி தொடர்பான வழக்கை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாட்டிறைச்சி விவகாரத்தில் நாடாளுமன்ற ஒப்பதலுடன் அரசாணை பிறப்பிக்கப்பட்டதா என்று கேள்வியெழுப்பப்பட்டது. ஆகஸ்ட் 11-ம் தேதி பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நாடாளுமன்ற ஒப்புதல் பெறாததால் அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. மாட்டிறைச்சி பற்றிய மதுரை கிளை உத்தரவை எதிர்த்து மத்திய அரசின் மேல்முறையீட்டில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது— vishwarubam news

♈ 🇮🇳  தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மானை வேட்டையாடிய விவகாரம் தொடர்பாக சல்மான் கான் மீது வழக்கு தொடரப்பட்டது. 2006-ம் ஆண்டு ஜோத்பூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. ஜாமினில் விடுதலையான நடிகர் சல்மான்கான்,ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதனை எதிர்த்து ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் சல்மான் கான் இன்று ஆஜரானார். இதனையடுத்து இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 5ம் தேதிக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது

♈ 🇮🇳  ரக்ஷா பந்தன் பண்டிகை வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பல்வேறு வகையான ராக்கிகள் சந்தைகளில் குவிந்துள்ளன. ரக்ஷா பந்தன் பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால் ராக்கிகளை ஆவலோடு வாங்கும் மக்கள்—vishwarubam news

♈ 🇮🇳  நடிகர்கள் கமல்ஹாசன், சக்தி உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு இசை வேளாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நாதஸ்வர இசையை கொச்சைப்படுத்தியதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் கமல் உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளது

♈ 🇮🇳  கடந்த 2016-ஆம் ஆண்டு 16 வயது சிறுவன் ஒருவனை அவனது நண்பன் ஒருவன் வீட்டில் வைத்து பலாத்காரம் செய்துவிட்டு அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளான். இது குறித்து வெளியே சொன்னால் இந்த வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியும் வைத்துள்ளான்.ஆனால் பலாத்காரம் செய்த அந்த சிறுவன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளான். இதனையடுத்து அவனது நண்பர்களும் அந்த சிறுவனை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த சிறுவனை மீண்டும் 15 சிறுவர்கள் பள்ளி மைதானத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.தன்னை பலாத்காரம் செய்ய வந்ததை அந்த சிறுவன் தடுத்ததால் அவனை தாக்கியும் உள்ளனர் அவர்கள். மேலும் அதில் உள்ள ஒரு சிறுவன் அவனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளான். பணம் கொடுக்க மறுத்ததால் மீண்டும் அந்த சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் அவர்களில் ஒருவன்.இவர்களின் இந்த தொடர் அத்துமீறல்களை தாங்கிக்கொள்ள முடியாத அந்த சிறுவன் தனது நண்பன் ஒருவனிடம் தனக்கு நடக்கும் கொடூரங்கள் குறித்து கூறியுள்ளான். இதனையடுத்து அந்த நண்பன் சமூக ஆர்வலர்களுக்கு இது தொடர்பாக தகவல் கொடுத்துள்ளான்.சமூக ஆர்வலர்கள் சிறுவனை சந்தித்து இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்க வைத்தனர். மேலும் சிறுவனிடம் நடத்தப்பட்ட பரிசோதனையிலும் அவன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனிடம் இருந்து வாக்குமூலத்தை பெற்ற போலீசார் அந்த சிறுவர்களில் 7 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மீதமுள்ளவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்— vishwarubam news

♈ 🇮🇳  ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டார்

  • ♈🇮🇳  *vishwarubam* 🇮🇳♈

 

151total visits.