விஸ்வரூப செய்திகள் 5/5-2

0
25

♈🇮🇳 🌴 *1pm-5-5-2017-friday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴என்ன கொடுமை சுவாமி இது- தாய்லாந்தில் உள்ள எழு வயது சிறுமிக்கு விசித்திர நோய் ஒன்று தாக்கியுள்ளது. இதனால் காரணமின்றி அந்த சிறுமியின் கண், மூக்கு, காதில் இருந்து ரத்தம் நிற்காமல் வெளியேறி வருகிறது. இந்த சிறுமிக்கு வந்துள்ள நோய் Hemotohidrosis என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் இந்த நோயால் தாக்கப்பட்ட சிறுமிக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டுள்ளது.இது நாளடைவில் தீவிரமாகி கண், மூக்கு, காது, உள்ளங்கை போன்ற உடலுருப்புகளில் இருந்து ரத்தம் வெளியேற துவங்கி உள்ளது. ரத்தம் வெளியேரும் போது சிறுமிக்கு வலி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.சிறுமிக்கு ரத்தம் வெளியேருவதை வீடியோவாக எடுத்து அவரது தாய் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது

♈🇮🇳 🌴 அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தன்னை விடுவிக்க வேண்டும் என்று மறுசீராய்வு மனு போட்டிருப்பதை அனைவரும் சாதாரணமாக பார்த்தாலும், அதில் டெல்லி தலையீடு இருப்பதாகவும், டெல்லியில் உள்ள அதிகாரமிக்கவர்களின் வழிகாட்டுதலின் பேரிலேயே இந்த மனு போடப்பட்டுள்ளதாக புலனாய்வு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.திஹார் சிறையில் உள்ள தினகரனிடம் டெல்லியில் உள்ள அதிகாரமிக்கவர்களின் தூதர் ஒருவர் சந்தித்ததாகவும், சசிகலா குடும்பத்தினர் சேர்த்து வைத்த மொத்த சொத்துக்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அதாவது பாதிக்கும் மேல், கொடுத்துவிட்டால் சசிகலாவுக்கு பரோல், மற்றும் தினகரனுக்கு விடுதலை என்று டீல் பேசியதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.ஆனால் மத்திய அரசு வட்டாரங்கள் இது பொய்யான தகவல் என்று கூறுகின்றன. தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது தான் புரொஜக்ட் என்றும், அதற்கு சசிகலா குடும்பத்தினர் அரசியலில் இருந்தே வெளியேற வேண்டும், அவர்களுடன் எந்தவித டீலும் கிடையாது என்றும் கூறுகின்றன

♈🇮🇳 🌴சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டே கட்ஜூ, கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு போராடத்தில் இருந்தே தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது புதிய கருத்துக்களை கூ’றி வரும் அவர் தற்போது பாகுபலி 2 படத்தின் வசூலைவிட பத்து மடங்கு அதிக வசூல் தரும் படத்தை எடுப்பது எப்படி என்ற ஐடியாவை கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய பிளாக் பக்கத்தில் கூறியதாவது: ஹாலிவுட்டில், மனிதக் குரங்குகள் பூமியை வெற்றி கொண்டு மனிதர்களை அவற்றின் அடிமைகளாக வைத்திருக்கும் படம் ‘பிளானட் ஆப் தி ஏப்ஸ்’. இப்படம் ஹாலிவுட்டில் ஹிட்டோ ஹிட். இந்தப் படத்தை அப்படியே தமிழில் ‘பிளானட் ஆப் தி கவ்ஸ்’ என்று ரீமேக் செய்தால் படம் பாகுபலி2 வை விட 10 மடங்கு வசூல் படைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பசுவதை, பசுக்களுக்கு எதிரானவர்கள் மீது நடவடிக்கை, மாட்டுக்கறி தின்றால் தண்டனை என பரபரப்புடன் இருக்கும் நிலையில் பாலிவுட் இயக்குனர்கள் பிளானட் ஆப் தி ஏப்ஸ் போல பிளானட் ஆப் தி கவ்ஸ் என்ற படத்தை எடுக்கலாம் என்றும், அந்தப் படத்தில் பசுக்கள் மனிதர்களை அடிமைகளாக்கி வேலை வாங்கும் சுவாரஸ்யமான காட்சிகள் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் கொண்டு வந்தால் பாகுபலி படத்தை விட பத்து மடங்கு அதிக வசூலை பெறலாம் என்றும் அவர் ஐடியா கூறியுள்ளார்

♈🇮🇳 🌴பயிர்களை மேயும் பசுக்கள் மீது ஆசிட் வீசும் கொடூர செயல் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

♈🇮🇳 🌴பட்ஜெட் ஒப்புதலுக்கு 60 செனட் உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு 52 செனட்டர்கள் மட்டுமே உள்ளனர். பட்ஜெட் ஒப்புதல்கள் தேவையான 60 செனட்டர்கள் ஜனநாயகக் கட்சியின் செனட்டர்களும் என்பதால், ஏகப்பட்ட நெருக்கடி கொடுத்துள்ளனர். டிரம்பின் பல கனவுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சுவர் கட்டுவதற்கு ஒதுக்க ஜனநாயகக் கட்சியினர் மறுத்துவிட்டனர். ஆனால் டிரம்ப்க்கு விருப்பமில்லாத திட்டங்களுக்கு அதிக நீதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் நமது அரசாங்கத்தை செப்டம்பர் மாதம் முடக்குவது அவசியமாகும் என்று ட்விட் செய்துள்ளார்

♈🇮🇳 🌴 நாட்டையே உலுக்கிய நிர்பயா கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட இளம் குற்றவாளி தென்னிந்தியாவில் உள்ள ஒரு சாலையோர கடையில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார்

♈🇮🇳 🌴 தனுஷ்கோடி கடற்பகுதியில் கடுமையான சூறாவளிக் காற்று வீசி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என தடைவிதிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 🌴 மாட்டிறைச்சிக்கு எதிராகப் பேசிவரும் பாஜக தலைவர்களின் வீடுகளில் வயதான பசு மாடுகளைக் கட்டி வைக்கும்படி, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தொண்டர்களுக்கு, அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது-அனைத்துச் சாதியினரும் சங்கராச்சாரிகளாக, இந்து மத தலைமைப் பதவிகளுக்கு வரவேண்டும் என்று முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருக்கிறார்

♈🇮🇳 🌴 அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒபாமா கேர் திட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது

♈🇮🇳 🌴 சீனா, வடகொரியாவை கடுமையாக விமர்சித்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் வடகொரியா சீனாவின் நட்புக்காக நாங்கள் ஒன்றும் கெஞ்சி நிற்கமாட்டோம் என்று கூறியுள்ளது

♈🇮🇳 🌴 பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் சமூக விரோத கருத்துக்கள் மற்றும் காட்சிகளை கண்கானிப்பதற்காக மூவாயிரத்திற்கும் அதிகமானோரை இணைத்துக் கொள்வதற்கு பேஸ்புக் உரிமையாளர் Mark Zuckerberg தீர்மானித்துள்ளார்

♈🇮🇳 🌴 மும்பையில் நடுரோட்டில் இளம்பெண்ணிடம் ஐ லவ் யூ சொன்ன வாலிபருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

♈🇮🇳 🌴 தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஸ்மார்ட் கார்டுகளில் ஐந்து வகை உள்ளது.ஐந்து வகை குறியீடுகள் என்ன குறிக்கின்றது என்பதை பார்ப்போம்…PHHRICE குறியீடு:ஸ்மார்ட் ரேஷன் கார்டில் இந்த குறியீடு இருந்தால் அரசி, பருப்பு, எண்ணை உள்ளிட்ட ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் பெறலாம்.PHAA குறியீடு:ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் இந்த குறியீடு இருந்தால் 35 கிலோ அரிசி மற்றும் அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.NPHH அல்லது NPHH-L குறியீடு:இந்த குறியீடு குறிப்பிடபப்ட்டு இருந்தால் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.NPHHS குறியீடு:இந்த குறியீடு உள்ள கார்டில் சர்க்கரை மட்டும் தான் கிடைக்கும்.NPHHNC குறியீடு:இந்த குறியீடு கொண்ட அட்டையில் எந்தப் பொருட்களும் கிடைக்காது. இதனை ஒரு அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்த முடியும்

♈🇮🇳 🌴 கம்போடியா நாட்டில் உள்ள 69 வயது டாக்டர் ஒருவர் 12 முதல் 15 வயதுள்ள நான்கு சிறுமிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த ஒரு சூட்கேஸில் சிறுமிகளின் விளையாட்டு பொருட்கள், சிறுமிகளின் உடைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. சிறுமிகளுக்கு விளையாட்டு பொம்மை, உடைகள் மற்றும் மேக்கப் சாதநங்கள் மட்டுமே பரிசாக கொடுத்து அதற்கு பதிலாக செக்ஸ் அனுபவித்துள்ளார்

♈🇮🇳 🌴 ஆண்கள் மட்டுமின்றி பெண்கள் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளர்களாக இருப்பதில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அர்ச்சனா விஜயாவும் ஒருவர். இவர் கிரிக்கெட் பிரபலங்களை பேட்டி எடுப்பது அவர்கள் உடற்பயிற்சி செய்வது ஆகியவை குறித்து செய்தி சேகரித்து ஃபேஸ்புக், டுவிட்டரில் பதிவு செய்கிறார். ஆனால் இவர் எதிர்பார்த்த மாதிரி விராட் கோஹ்லி உள்பட பலரிடம் எடுத்த பேட்டியும் புகைப்படமும் வைரலாகவில்லை. அதற்கு பதிலாக பேட்டி எடுக்கும்போது அவர் அணிந்திருந்த உடை வைரலாகிறது. குறிப்பாக அவர் அணிந்திருந்த கிழிந்த பேண்ட் குறித்து ஏராளமான கமெண்ட் வந்துள்ளதாம். கிரிக்கெட்டை விட ரசிகர்களுக்கு கிழிந்த பேண்ட்தான் முக்கியமா? என்று புலம்பி வருகிறாராம் அர்ச்சனா விஜயா

♈🇮🇳 🌴 மணிப்பூரில் ஆயுத சட்டத்தை நீக்க வலியுறுத்தி தொடர்ந்து 17 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய இரும்புப்பெண் இரோம் சர்மிளா, சமீபத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். வெறும் 90 ஓட்டுக்களே பெற்ற இவர் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.நீண்டநாள் காதலரான இங்கிலாந்தின் டெஸ்மேண்ட் கவுடின்கோ என்பவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதற்காக அவர் விரைவில் இங்கிலாந்து செல்லவுள்ளதாகவும், இவர்களது திருமணம் இங்கிலாந்தில் அல்லது கேரளாவில் வெகுவிரைவில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

♈🇮🇳 🌴 டஸ்டன் என்பவர் கடந்த சில வருடங்களாக ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். இருவரும் ஒரே வீட்டில் கடந்த சில மாதங்களாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தான் வீட்டில் இல்லாத போது வேறு ஒரு ஆண் தன்னுடைய வீட்டிற்கு வந்து செல்வது குறித்து கேள்விப்பட்டார். இதை உறுதி செய்ய ஒருநாள் வெளியூர் செல்வதாக கூறிவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது காதலி படுக்கையில் கள்ளக்காதலனுடன் தூங்கி கொண்டிருந்தார். உடனே டஸ்டன் தன்னுடைய மொபைல் கேமிராவை ஆன் செய்து ரொம்பவும் கூலாக, அவர்களை புகைப்படம் எடுத்தும், அவர்களுடன் செல்ஃபியும் எடுத்துள்ளார். எடுத்த புகைப்படங்களை ஃபேஸ் புக்கில் பதிவேற்றி வைரல் ஆக்கினார் டஸ்டன்.செல்பி புகைப்படத்திற்கு கீழே, ‘வேறு ஒரு ஆணுடன் வீட்டிற்கு வந்து படுக்கையில் உறங்கி கொண்டிருந்த போது உன் காதலனுடன்” என்று ஃபோட்டோவுக்கு ஸ்டேட்டஸ் தட்டியிருந்தார். அதுமட்டுமின்றி நல்ல ஆண்களுக்கு நல்ல பெண்கள் கிடைப்பார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.டஸ்டன் ஸ்டேட்டஸை கண்ட நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிய துவங்கிவிட்டனர். வித்தியாசமான முறையில் காதலியை டஸ்டன் பழிவாங்கி இருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டி தள்ளிவிட்டனர். ஒருசிலர் மட்டும் இந்த செயல் தவறானது என்றும் டஸ்டனுக்கு செய்தி அனுப்பியுள்ளனர்

♈🇮🇳 🌴 விக்கிப்பீடியாவுடன் போட்டியிடும் வகையில், அடுத்த ஆண்டு தேசிய என்சைக்ளோபீடியாவின் ஒரு பதிப்பை சீனா வெளியிடுகிறது. இதில், தலா 1,000 வார்த்தைகள் கொண்ட 3,00,000 உள்ளீடுகள் இருக்கும்

♈🇮🇳 🌴 இந்திய வீரர் ஒருவரின் தலை வெட்டப்பட்டால், பாகிஸ்தான் வீரர்களின் 100 தலைகள் வெட்டப்பட வேண்டும் பாபா ராம்தேவ்

♈🇮🇳 🌴 டெல்லி செங்கோட்டையில் கையெறி குண்டு கண்டுபிடிப்பு, வெடிகுண்டு செயலிழப்பு குழு முகாம்

♈🇮🇳 🌴 போதை பழக்கம், பேராசிரியருடன் ஓரின சேர்க்கை, முன்னாள் காதலி, பாராக் ஒபாமாவின் வாழ்க்கை குறித்து தி மேகிங் ஆப் பாரக் ஒபாமா புத்தகம் விரைவில் வெளியாகிறது.

♈🇮🇳 🌴மதுரை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 பாலங்களுக்கு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். பெயர் வைக்கப்பட்டுள்ளது. அருள்தாஸ்புரம்-ஆர்ப்பாளையத்தை இணைக்கும் பாலத்திற்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரும், சிம்மக்கல் சாலை-கோரிப்பாளையத்தை இணைக்கும் பாலத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயரும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

♈🇮🇳 🌴 டாஸ்மாக் கடைக்கு எதிரே போராட்டம் நடத்திய 21 பேர் விடுதலை: ஐகோர்ட் உத்தரவு

♈🇮🇳 🌴கோவை அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம்

♈🇮🇳 🌴பெங்களூருவில் போலி சான்றிதழ் தயாரித்த 5 பேர் கைது

♈🇮🇳 🌴காவல்துறை தலைவர் விவகாரம்: கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.25000 அபராதம்

♈🇮🇳 🌴தமிழகத்திற்கு ஆளுநர் ஆட்சியை கொண்டுவர பாஜக முயற்சி: தா.பாண்டியன்

♈🇮🇳 🌴20 தமிழர்கள் கொல்லப்பட்ட வழக்கு: திருப்பதி குற்றவியல் நீதிமன்றம் விசாரணை ஒத்திவைப்பு

♈🇮🇳 🌴விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக இருந்தால் வீட்டு மனையாக மாற்றக்கூடாது: தமிழக அரசு

♈🇮🇳 🌴ஊடகங்களின் விமர்சனங்கள் சினிமாவை செதுக்குகின்றது: பாடலாசிரியர் வைரமுத்து

♈🇮🇳 🌴விமானத்தில் தகராறு செய்யும் பயணிகளுக்கு தடை: விமானத்துறை அமைச்சர் கஜபதி ராஜு தகவல்

♈🇮🇳 🌴மதுரை புறப்பட்டார் முதல்வர் பழனிசாமி

♈🇮🇳 🌴அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை ஒழுங்குப்படுத்த புதிய விதிகள் வெளியீடு

♈🇮🇳 🌴மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை தடுக்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? உயர்நீதிமன்றம் கேள்வி

♈🇮🇳 🌴கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் ரூ.34 கோடி சொத்துக்கள் முடக்கம்

♈🇮🇳 🌴டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய 21 பேர் மீதான எப்.ஐ.ஆர், ரத்து

♈🇮🇳 🌴கல் அடுக்கினால் வீடு கட்டலாம்: மீனாட்சி கோயிலில் வினோதம்

♈🇮🇳 🌴தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைவு

♈🇮🇳 🌴சுகாதாரத்துறை செயலர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

♈🇮🇳 🌴தஞ்சை பெரியகோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

♈🇮🇳 🌴டாஸ்மாக் போராட்டத்தில் கைதானவர்களுக்கு இழப்பீடு வழக்க ஐகோர்ட் உத்தரவு

♈🇮🇳 🌴சென்னை யானைகவுனியில் தங்க கட்டிகள் வழிப்பறி

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

162total visits.