விஸ்வரூப செய்திகள் 5/5-4

0
14

♈🇮🇳 🌴 *5.30pm-5-5-2017-friday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 பாகிஸ்தான் பிரதமர் மீது இஸ்தியாக் அஹமத் மிர்சா என்ற வழக்கறிஞர் ராவல்பிண்டியில் உள்ள ஒரு போலீஸ் நிலையதில் புகார் கொடுத்துள்ளார்.புகாரில் நவாஸ், ராணுவத்திற்கு எதிராக மக்களை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இது வாட்ஸ் ஆப்பில் எனக்கு வந்துள்ளது. இதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக கூறியுள்ளார். இதனை எப்.ஐ.ஆர்., ஆக பதிவு செய்யாமல், அறிக்கையாக பதிவு செய்துள்ளனர்

♈🇮🇳 🌴 மும்பை- கராச்சி இடையே வாரத்தில் ஒருநாள் இயக்கப்படும் சர்வதேச விமானத்தை மே 11 ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது. மே 11 ஆம் தேதிக்கு பிறகு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் எந்த முன்பதிவையும் மேற்கொள்ளவில்லை. விமான சேவை எதனால் நிறுத்தப்படுகிறது என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும், அண்மைக்காலமாக இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவில் அதிகரித்துள்ள பதட்டத்தினால் மட்டும் அல்லாது வணிக ரீதியிலும் இத்தகைய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும் மும்பை- கராச்சி செல்லும் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

♈🇮🇳 🌴 காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பத்தூரை அடுத்த வடகால் பகுதியில் உள்ள சர்ச் ஓன்றில் நடைபெற்ற நிகழ்சியில், பல்லி விழுந்த பிரியாணியில் உணவை சாப்பிட்ட 70 குழந்தைகளில் 27 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தைகளை ஸ்ரீபெரும்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது

♈🇮🇳 🌴 மருத்துவர்கள் தமிழகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் இன்று மருத்துவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

♈🇮🇳 🌴 தனியார் பள்ளிகளின் பேருந்துகள், வருடத்திற்கு ஒருமுறை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தகுதி பரிசோதனை செய்து தகுதி சான்றிதழ் வழங்குவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் ஈரோடு மாவட்டத்தில் கல்லூரி மற்றும் பள்ளி பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பேருந்தில் அவசர காலவழி ஆகியவை பரிசோதனை செய்தனர்

♈🇮🇳 🌴 நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.

மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளில் தலையிடுகிறது. தமிழகத்தை அடிமை போல நடத்துகிறது. நீட் தேர்வு கூடாது என தமிழக சட்டசபை சட்டம் கொண்டு வந்தது. ஆனால் அதனை பற்றி கவலைப்படாத மத்திய அரசு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் தராமல் உள்ளது. இந்தி திணிப்பை போல நீட் திணிப்பு நடக்கிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ள வெறும் 2 சதவீத மாணவர்களுக்காக மாநில பாடத்திட்டத்தின் கீழ் உள்ள 98 சதவீத மாணவர்களையும் மாற சொல்வது அராஜகம், வன்முறை. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் தராவிட்டால் கூட்டாட்சி தத்துவமே கேள்விக்குறியாகிவிடும். தமிழர்கள் ஒவ்வொரு விசியத்துக்காகவும் போராடிக்கொண்டு இருக்க முடியாது.நேரு பிரதமராகவும், அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்திருந்தால் தமிழகத்துக்கு இந்த நிலை வந்திருக்காது. 7 கோடி தமிழர்களையும் மத்திய அரசு அவமதிக்கிறது. மத்திய அரசுக்கு திராணி இருந்தால் நிராகரிக்கட்டும் என்றார் நீதிபதி ஹரிபரந்தாமன்

♈🇮🇳 🌴 இந்திய பத்திரிக்கைகள் அனைத்தும் பதஞ்சலி உணவு நிலையங்கள் இந்திய சந்தையில் தாக்குப்பிடிக்குமா என கேள்வி எழுப்பியுள்ளனர். கட்டாயம் அதற்கு வாய்ப்புள்ளது. இரண்டு ஆண்டுகளில் ஆயூர்வேத தாயாரிப்பு, இயற்கை பொருட்கள் என கூறி இந்திய சந்தையை ஆக்கிரமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் பதஞ்சலி இந்திய சந்தையின் முக்கிய நிறுவனமாக உருவெடுக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. மேலும் அண்மையில் பதஞ்சலியின் தேன், ஜாம் போன்ற பொருட்கள், இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் நடத்திய சோதனையில் தோல்வி அடைந்தது. இந்திய பொருளாதாரத்தில் விரைவில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பதஞ்சலி நிறுவனம்

♈🇮🇳 🌴 மத்தியப்பிரதேசத்தில் பேருந்து ஒன்று சாலையின் நடுவில் உள்ள டிவைடரில் மோதி முற்றிலும் சேதமடைந்தது. இதில் பேருந்தின் பின்பக்கம் சிதைந்தது சின்னாபின்னமானது

♈🇮🇳 🌴 நாளை மறு நாள் மே 7ந் தேதி நடைபெறவிருக்கும் நீட் தேர்வில் தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். உச்ச நீதி மன்றம் நீட் தேர்ச்சி கட்டாயம் என தெரிவித்துள்ளது

♈🇮🇳 🌴 பாகுபலி 2 படத்தை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைப்பதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்

♈🇮🇳 🌴 போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுக்கு மாபெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் சீனாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது பெரிய பயணியர் விமானம், அதனுடைய முதலாவது பயணத்தை மேற்கொண்டுள்ளது

♈🇮🇳 🌴 நீங்கள் ஒரு ரயில் டிக்கெட்டுக்கு $10,000 செலவழிக்கத்தயாரா?தயாரென்றால், நீங்கள் வெகுவிரைவில் ஜப்பானின் புதிய சொகுசு ரயிலில் பயணிக்கலாம்.கிழக்கு ஜப்பான் ரயில் நிறுவனம் தனது புத்தம்புது ஷிகிஷிமா சொகுசு ரயில் சேவையை துவக்கியுள்ளது.டோக்யோவிலிருந்து ஹொக்கைடோவுக்கான 4-நாள் பயணத்தின் உயர்தரக்கட்டணம் $10,000 வரை ஆகும்.உலகின் மிகச்சிறந்த மெஷெல் நட்சத்திர சமையல்காரர்கள் இதில் சமைக்கிறார்கள்.பியானோ இசைக்கலைஞரின் ரம்யமான இசையை ரசித்தபடி நீங்கள் சாப்பிடலாம்.பாரில் பல்வேறுவகையான காக்டெய்ல்களை நீங்கள் குடிக்கலாம்.ரயில்பெட்டியின் துவக்கத்திலும் முடிவிலும் கண்ணாடிப்பெட்டிகளில் பயணித்தபடி வானத்தை ரசிக்கலாம்.பத்து பெட்டிகள் கொண்ட ரயிலில் 34 பயணிகள் மட்டுமே பயணிப்பார்கள் என்பதால் கூட்ட நெரிசலே இருக்காது.இதன் முதல்நாள் பயணத்திற்கான டிக்கெட்டுகளை குலுக்கல்முறையில் பெற ஏகப்பட்டபேர் முயன்றனர்.மிக அதிகமான விலையிருந்தும் மார்ச் 2018 வரை இதன் பயண டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன

♈🇮🇳 🌴 வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் சவுதியின் “கருப்பழகி”சவுதி அரேபியாவைச் சேர்ந்த அபீர் சிண்டர், ஒப்பனை மற்றும் அழகுக் குறிப்புகளுக்காக வலைத்தளங்களில் மிகவும் அறியப்பட்டுள்ளார்
♈🇮🇳 🌴

உயிர் கொல்லி நோயான புற்று நோய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 9 கோடியே 5 லட்சம் பேர் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகினர். ஆண்டு தோறும் 1 கோடியே 41 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் 88 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் 28 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.

எனவே புற்று நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளித்து குணப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புற்று நோயை மிக எளிதான பரிசோதனை மூலம் கண்டறிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன.இந்த நிலையில் சீன விஞ்ஞானிகள் ஒரு துளி ரத்தம் மூலம் புற்று நோயை கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளனர். மனித உடலில் புற்று நோய் இருப்பதை ‘ஹீட் ஷாக் புரோட்டீன்’ (எச்.எஸ்.பி.’) எனப்படும் எச்.எஸ்.பி.90ஏ புரோட்டீன் மூலம் கண்டுபிடிக்க முடியும்.இது மனித உடலில் இருந்து எடுக்கப்பட்டு பின்னர் அதை ரத்தத்துடன் கலந்து பரிசோதிக்கப்படுகிறது.ஆனால் சீனாவை சேர்ந்த ட்ஷின்குவா பல்கலைக்கழகத்தின் உயிர் அறிவியல் பள்ளியை சேர்ந்த விஞ்ஞானிகள் எச்.எஸ்.பி. 90ஏ எனப்படும் புரோட்டீனை செயற்கையாக தயாரித்துள்ளனர்.அதை மனித உடலில் இருந்து எடுக்கப்படும் ஒரு துளி ரத்தத்துடன் சேர்த்து ஆய்வு நடத்தி புற்று நோயை கண்டறிந்துள்ளனர்.அதை சீனாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 2,347 நோயாளிகளிடம் பரிசோதித்து வெற்றி கண்டுள்ளனர். தற்போது இது சீனா மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் மூலம் விஞ்ஞானிகளின் 24 ஆண்டு கால ஆய்வு வெற்றி பெற்றுள்ளது

♈🇮🇳 🌴 அமெரிக்கா விசாவை பெறுவதற்கு பேஸ்புக், டிவிட்டர் கணக்கு விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்ற முறை அமலுக்கு வரவுள்ளது

♈🇮🇳 🌴 அமெரிக்க ஜனாதிபதியான பின்னர் டொனால்டு ட்ரம்ப் மேற்கொள்ளவிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயண அட்டவணை தயாராகியுள்ளது. அதன்படி இஸ்ரேல், வாடிகன், சவுதி அரேபியாவுக்கு அவர் செல்லவிருக்கிறார்.இத்தாலியில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே அவர் இந்தப் பட்டியலில் உள்ள இடங்களுக்குச் செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 🌴 தண்ணீர் இல்லாததால் ஆத்திரமடைந்த பயணிகள் மும்பை – நாகர்கோயில் ரயிலை நிறுத்தினர். சேலத்தில் இருந்து ரயில் புறப்பட்டபோது பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். இதயைடுத்து ஈரோட்டில் தண்ணீர் நிரப்பப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததால் ரயில் நாகர்கோயில் புறப்பட்டது. பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

♈🇮🇳 🌴 ஜிசாட் 9 செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு

♈🇮🇳 🌴 குடியரசு தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றி சோனியா ஆலோசனை

♈🇮🇳 🌴 பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பெண் ஊழியர்கள் ஆன்லைனில் புகார் அளிக்கலாம்: மேனகா காந்தி

♈🇮🇳 🌴 கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை

♈🇮🇳 🌴 கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு

♈🇮🇳 🌴 திருவண்ணாமலையில் மண் சரிந்து 3 பேர் உயிரிழப்பு

♈🇮🇳 🌴 வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை

♈🇮🇳 🌴 மருத்துவர்கள் போராட்டம் தொடரும்: மருத்துவ சங்க செயலாளர் கதிர்வேல் தகவல்

♈🇮🇳 🌴 நிர்பயா வழக்கின் தீர்ப்பை வரவேற்கிறேன்: மத்திய அமைச்சர் மேனகா காந்தி

♈🇮🇳 🌴 வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 267 புள்ளிகள் சரிவு

♈🇮🇳 🌴 நிர்பயா வழக்கின் தீர்ப்பு முக்கியமானது: டெல்லி போலீஸ் கருத்து

♈🇮🇳 🌴 மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

♈🇮🇳 🌴 மருத்துவர்கள் போராட்டத்தை முடிக்க தேவைப்பட்டால் எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம்: உயர்நீதிமன்றம் பரிந்துரை

♈🇮🇳 🌴 நாமக்கல்லில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்

♈🇮🇳 🌴 பருவ நிலை மாற்றங்கள் அறிய உதவும் ஜிசாட் 9 விண்ணில் பாய்ந்தது

♈🇮🇳 🌴 *உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைகளில் உள்ள அரசு மதுக்கடைகளை அகற்றப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை மற்றும் பார் அகற்றப்பட்டது. அந்த கடையை மீண்டும் திறக்க கார்கில் வெற்றி நகர் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த பாரை நடத்தி வந்தவர் தி.மு.க நிர்வாகி புதிய கடைக்கு இடம் வழங்குபவரும் தி.மு.க நிர்வாகி இவர்களுக்கு ஆதரவு வழங்குபவர்கள் அதிமுக நிர்வாகிகள். இதை பற்றி தகவல் அறிந்த அப்பகுதி பெண்கள் சாலை மறியல் நடத்தி தற்காலிகமாக புதிய கடையை வரவிடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர்*.
♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

156total visits.