விஸ்வரூப செய்திகள் 6/5-3

0
15

♈🇮🇳 🌴 *1pm-6-5-2017-saturday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 தமிழக பாஜக தலைவர்களோ, அமித்ஷாவின் வருகையை பயன்படுத்தி ‘ஆதாயம்’ தேட தொடங்கினர். பசையுள்ள ஜாதி கட்சி தலைவர்கள், தொழிலதிபர்களை அமித்ஷாவுடன் சந்திக்க வைக்கும் பேரங்கள் படு மும்முரமாக நடந்து வந்தது. அத்துடன் அமித்ஷாவே நாங்க சொல்லித்தான் எல்லாவற்றையும் செய்கிறார் என்கிற தோரணையிலும் தமிழக பாஜக தலைவர்கள் செயல்பட்டு வந்தனர். இந்த தகவல்களை கேள்விபட்ட அமித்ஷா படு அப்செட்டாயிருக்கிறார். உடனடியாக தமிழிசை சவுந்தரராஜனை போனில் அழைத்து, மைக் கிடைக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் உளறி கொட்டுவீங்களா? என்னுடைய பயணத்திலும் கூட இப்படி ஆதாயம் தேட முயற்சிப்பீங்களா? என செம டோஸ் விட்டிருக்கிறார். அத்துடன் தமது தமிழக பயணத்தையும் ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார் அமித்ஷா என்கின்றன பாஜக வட்டாரங்கள்.

♈🇮🇳 🌴 கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் தென்மாவட்டங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது

♈🇮🇳 🌴 குறிஞ்சிப்பாடி பகுதியில் பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளை கட்டுப்படுத்த கோரிக்கை -குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான பன்றிகள் சுற்றித் திரிகின்றன. இவைகள் குப்பைகளை கிளறிவிட்டு, உணவுகளை தேடுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, நோய் தொற்றும் உண்டாகிறது

♈🇮🇳 🌴 கடலூரில் பள்ளி செல்லா மாணவர்கள் கணக்கெடுப்பு

♈🇮🇳 🌴 ஏழு பொதுத்துறை வங்கிகளுக்கு புதிய தலைவர்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேசஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் வாராக்கடன்கள் தேங்கியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சில அதிகாரிகள் பதவி மூப்பு காரணமாக ஓய்வு பெறும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.நிர்வாகத்தில் உள்ள மெத்தனத்தைக் களைய இந்த புதிய தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல வங்கிகளின் மூத்த அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

♈🇮🇳 🌴 நீட் பொதுத்தேர்வு நாளை நடைபெறுகிறது: மாணவ மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்-நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும். மாணவர்கள் காலை 7.30 மணிக்கு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வு எழுதுவதற்கான அனுமதி அட்டை காலை 9.45 மணி வரை சோதனை செய்யப்படும். மாணவர்கள் காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.மாணவர்கள் தேர்வு அறைக்குள் தேர்வுக்கூட அனுமதி அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அனுமதி அட்டையின் 2-வது பக்கத்தில் ஓட்ட வேண்டிய அஞ்சல் அட்டை அளவு புகைப்படம் ஆகியவற்றை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். நீலநிறம் அல்லது கருப்பு நிற பால்பாயின்ட் பேனா மூலமே தேர்வு எழுத வேண்டும். பேனா தேர்வுக் கூடத்திலேயே வழங்கப்படும்.நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் ஷூ, முழுக்கை சட்டை, டீ-சர்ட், பெல்ட், கைக்கடிகாரம், குளிர் கண்ணாடி, செயின், மோதிரம், பிரேஸ்லெட், நெக்லஸ், ஆபரணங்கள், கிளிப்புகள், பெரிய அளவு பட்டன்கள், பேட்ஜ், பெரிய அளவு ரப்பர் பேண்டுகள், சேலை, வளையல், பர்தா, தொப்பி, பைஜாமா, குர்தா ஆகியவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.அரைக்கை சட்டை, செருப்பு, பேண்ட், ஜீன்ஸ் பேண்ட், மருத்துவர்கள் பரிந்துரைத்த கண் கண்ணாடி, லெக்கின்ஸ், சுடிதார், சிறிய அளவு ரப்பர் பேண்ட் ஆகியவற்றை அணிந்து செல்ல அனுமதி உண்டு. திருமணமான பெண்கள் தாலி மற்றும் வளையல் அணிந்து கொள்ளலாம்.செல்போன், கைப்பை, கால்குலேட்டர், கேமரா, பென்டிரைவ், ஹெட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது.முறைகேடுகளை கண்ட றிய தீவிர கண்காணிப்பு நடைபெறும். முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

♈🇮🇳 🌴 கிம் ஜாங் உன் -ஐ கொலை செய்ய சிஐஏ சதி செய்வதாக வடகொரியா பரபரப்பு குற்றச்சாட்டு

♈🇮🇳 🌴 நெல்லை அருகே டாஸ்மாக் கடையில் துளை போட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராதாபுரம் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அரசு டாஸ்மாக் மதுக்கடை

♈🇮🇳 🌴 அமெரிக்காவின், புளோரிடா மகாணத்தை சேர்ந்த மடல் அழகி மோலி கவாலி என்பவர், சம்ஸோடா என்ற பொழுதுபோக்கு நிறுவனத்தின் சார்பாக நடத்தப்பட்ட நிர்வாண போட்டோ சூட்டில் கலந்து கொள்ள, அந்த பகுதி கடற்கரைக்கு சென்றார். கடல் நீரில் இறங்கி புகைப்படம் எடுப்பது என முடிவெடுக்கப்பட்டது. அந்த பகுதியில் சுறா மீன் அதிகம் என்பதால், அவருக்கு பாதுகாப்பு கவசமாக ஒரு கூண்டும் வழங்கப்பட்டது. எனவே, அவர் தைரியமாக தண்ணீரில் இறங்கினார். ஆனால், அங்கு வந்த ஒரு சுறாமீன் அவரின் காலை கடித்து விட்டு சென்று விட்டது. இதில் ரத்த காயத்தில் மீட்கப்பட்ட அவர் தனது காலை பார்த்து கதறி அழுதார்.பாதுகாப்பு குறைபாட்டால் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது

♈🇮🇳 🌴 கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன், விளம்பரங்களை அடுத்து சினிமாவில் நடிக்கவுள்ளதாகவும், அவரது முதல் படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தியை சரவணன் ஏற்கனவே மறுத்திருந்தார்.இந்த நிலையில் அவருடன் விளம்பர படத்தில் டான்ஸ் ஆடிய தமன்னாவுக்கும் ஹன்சிகாவுக்கு பெரும் வருத்தமாம். சரவணன் நடிக்க வருகிறார் என்றால் ஹீரோயின் நாங்களாகத்தானே இருக்க வேண்டும், அது எப்படி நயன்தாரா பெயர் அடிபடலாம் என்று அண்ணாச்சியிடம் நேரிலேயே கோவித்து கொண்டார்களாம்.இதனால் இதுவரை நடிக்கும் மூடில் இல்லாத சரவணன், தற்போது ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டதாகவும், அந்த படத்தின் இரண்டு நாயகிகளாக தமன்னா, ஹன்சிகா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கு அச்சாரமாக சரவணா ஸ்டோரின் அடுத்த விளம்பரத்தில் ‘வாங்க ஹீரோ’ என்று தமன்னாவும், ஹன்சிகாவும் கூறும் வசனம் ஒன்றும் உள்ளதாம்

♈🇮🇳 🌴 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 15 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

♈🇮🇳 🌴 சென்னை தியாகராயநகரில் விதிகளுக்குட்பட்டே சங்க கட்டடம் கட்டப்படுகிறது: நடிகர் சங்கம்

♈🇮🇳 🌴 ஸ்டாலினை முதல்வராக்க ஓபிஸ் முயற்சி : திண்டுக்கல் சீனிவாசன்

♈🇮🇳 🌴 பிரதமர் நரேந்திர மோடிக்கு வளையல் அனுப்ப போகிறேன் : நக்மா

♈🇮🇳 🌴 தாலிக்கு தங்கம் வழங்கும் விழா-சென்னையில் பட்டதாரிகள் உட்பட 589 பயனானிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. தி.நகரில் அமைச்சர் ஜெயக்குமார், சரோஜா பயனானிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினர்

♈🇮🇳 🌴 நீலகிரிக்கு ஹெலிகாப்டர் சேவை: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்

♈🇮🇳 🌴 முட்டை விலை 16 காசுகள் உயர்வு

♈🇮🇳 🌴 உத்திர பிரதேசத்தில் ரூ.7.5 கோடி மதிப்புள்ள நோட்டுகள் காரில் பறிமுதல்

♈🇮🇳 🌴 முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்போம் : திண்டுக்கல் சீனிவாசன்

♈🇮🇳 🌴 அரசு மீது ஸ்டாலின் புகார்

♈🇮🇳 🌴 உத்திர பிரதேசத்தில் ரூ.36 லட்சம் மதிப்புள்ள ஓபியம் பறிமுதல்

♈🇮🇳 🌴 வாயு கசிவால் பாதிக்கப்பட்ட பள்ளி குழந்தைகள் அபாய கட்டத்தை தாண்டினர்: டெல்லி போலீசார் விளக்கம்

♈🇮🇳 🌴 புதுச்சேரி சட்டப்பேரவை 16ஆம் தேதி கூடுகிறது

♈🇮🇳 🌴 மதுரை தமிழ்ச் சங்க கூட்டத்தில் அமைச்சர்கள் ஆய்வு

♈🇮🇳 🌴 ஆதார் மூலம் முதியோர் உதவித்தொகை: புதுச்சேரி முதலமைச்சர் நாராணயசாமி

♈🇮🇳 🌴 ஊட்டியில் காய்கறி கண்காட்சி துவக்கம்

♈🇮🇳 🌴 சந்தர்ப்பவாத அரசியல் எடுபடாது : ஓ.பி.எஸ்., மீது ஜெயக்குமார் தாக்கு

♈🇮🇳 🌴 சென்னை: திருமங்கலத்தில் சாம்பார் கொட்டி குழந்தை பலி மே 06,2017 12:39 IST

♈🇮🇳 🌴 சித்திரை திருவிழா: அழகர் வாகனங்கள் மதுரை வந்தன –

மீனாட்சி ஆட்சி துவக்கம்: விழாக்கோலம் பூண்டது மதுரை

♈🇮🇳 🌴 பெண் ஒருவர் தனது கணவனை துப்பாக்கியால் சுட்டதுடன், தப்பி ஓடிய அவரை துரத்திச் சென்று கொல்ல முயன்ற சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது

♈🇮🇳 🌴 உ.பி.,யில் அரசு யாருக்கும் பாகுபாடு காட்டாது. 100 நாட்களில் அரசின் செயல்பாடுகள் குறித்து ரிப்போர்ட் கார்ட் தருவேன் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்

♈🇮🇳 🌴 திறந்திருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் எப்போது மூடப்படும் என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது

♈🇮🇳 🌴 காஷ்மீரில் உள்ள வங்கிகளில் பண பரிவர்த்தனையை தற்காலிகமாக நிறுத்தும்படி வங்கிகளை அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது

♈🇮🇳 🌴 ஹைதரபாத்தில் பாகுபலி2 படத்தை பார்க்காத ஒரு ஊழியரை, அவரின் முதலாளி, வேலையிலிருந்து நீக்கி விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது

♈🇮🇳 🌴 ஆரம்பமே அட்டகாசம் என்ற படத்தில் லிப் டூ லிப் காட்சியில் நடிக்க நடிகையிடம் அப்படத்தின் இயக்குநர் ஒப்பந்தம் செய்து கையெழுத்து வாங்கினாராம்

♈🇮🇳 🌴 அட்லீ, நிவின் பாலியை வைத்து ஒரு படம் தயாரிக்க இருந்தார். அதற்காக அவரிடம் கால்ஷீட் எல்லாம் வாங்கிவிட்டார்.ஆனால் நடுவில் சில காரணங்களால் நிவின்பாலி படத்தையே மறந்துவிட்டார் அட்லீ. இதனால் கடுப்பான நிவின்பாலி மறுபடியும் கால்ஷீட் கேட்க போனால் படக் குழுவினரை திருப்பி அனுப்புகிறாராம்

♈🇮🇳 🌴 இயக்குநராக வேண்டும் என்ற விஜய் சேதுபதியின் ஆசை, நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. என்ன கேரக்டராக இருந்தாலும், அதை உள்வாங்கி இயல்பாக நடிப்பவர் விஜய் சேதுபதி. சினிமாவில் சம்பாதிப்பதை, சினிமாவிலேயே கொட்டும் நல்ல மனசுக்காரர்களில் ஒருவர். தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ள விஜய் சேதுபதி, மூன்றாவது தயாரிப்புக்குத் தயாராகிவிட்டார். ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை இயக்கிய பிஜு விஸ்வநாதன் தான் இந்தப் படத்தையும் இயக்கப் போகிறார். ஆனால், கதை மற்றும் வசனம் எழுதும் பொறுப்பை விஜய் சேதுபதி ஏற்றுக் கொண்டுள்ளார். இயக்குநராக வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் கனவு. அதற்கு முதல்படியாக கதை, வசனம் எழுதிப் பழகுகிறார் விஜய் சேதுபதி

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

249total visits.