விஸ்வரூப செய்திகள் 6/5-4

0
11

♈🇮🇳 🌴 *4.30pm-6-5-2017-saturday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 விஸ்வரூபம் செய்தியின் எதிரொலி* காணாமல் போன பெண்ணை மீட்ட காவல்துறைக்கு நன்றி- உடனடியாக நடவடிக்கை எடுத்த அனைத்து காவலர்களுக்கும் நன்றி -5/05/2017 அன்று T-1 அம்பத்தூர் காவல்நிலைய செய்தி விஸ்வரூபம் இதழ் சார்பாக செய்தி வெளியிட்டிருந்தோம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. காணமல் போன பெண் இன்று காலை T-1 அம்பத்தூர் காவல்துறையினர் மூலமாக அழைத்து வரப்பட்டார் .மதியம் அந்த பெண்ணை அழைத்து சென்ற பையனையும் T-1 அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து காவல்நிலையத்தில் வைத்திருக்கிறார்கள்

♈🇮🇳 🌴 சென்னை : நீட் தேர்வு மதிப்பெண்ணுடன் பிளஸ்-2 தேர்வு மதிப்பெண்ணை கணக்கிட கோரி வழக்கு ஒன்று ஐகோர்ட்டில் தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மருத்துவ கவுன்சிலுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

♈🇮🇳 🌴 உண்மையா -பாஜகவின் புதிய ஸ்லீப்பர் செல்களாக 33 அதிமுக எம்.எல்.ஏக்கள்.. எடப்பாடிக்கு ‘குடைச்சல்’

♈🇮🇳 🌴 நேற்று நடந்த ஒரு விழாவில் முதல்வர் எடப்படி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஜெ.வின் பாணியில் ஒரு குட்டிக்கதை கூறினார்.கூட்டம் கூட்டமாக பறக்கும் புறாக்களை பிடிக்க ஒரு வேடன் திட்டமிட்டு, அதற்காக வலை ஒன்றை விரித்து வைத்தான். அதில் சில புறாக்கள் சிக்கிக் கொண்டன. அதைக் கண்டதும், அந்த பறவைகளை பிடிக்க வேடன் ஓடி வந்தான். அனால், இதைக் கண்ட மற்ற புறாக்கள் அந்த வலைக்குள் சென்று சிக்கிக் கொண்ட புறாக்களுடன் சேர்ந்து அந்த வலையை தூக்கிக் கொண்டு ஒன்றாக பறந்து சென்றுவிட்டது. எனவே, ஒற்றுமையுடன் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என அவர் கூறினார்

♈🇮🇳 🌴 மருத்துவர்கள் போராட்டத்தினால் நோயாளிகள் பாதிப்பு என வழக்கு
ஒரு சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்

♈🇮🇳 🌴 தேனிமாவட்டம் போடி அருகே உள்ள திம்மிநாயக்கன் பட்டி விளக்கு அருகே விவசாய பூமியில் டாஸ்மார்க் கடை அமைவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அரலிக்கொட்டையை கையில் வைத்து ஏராளமான பெண்கள் தற்கொலை முயற்சி

♈🇮🇳 🌴 செம்மரங்களை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கிய சங்கீதா சாட்டர்ஜியுடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் குறித்து விசாரணை நடத்த திருப்பதி போலீஸார் தமிழகம், கர்நாடகத்துக்கு விரைந்துள்ளனர்

♈🇮🇳 🌴நாகாலாந்துக்கு இறைச்சிக்காக 75 அஸ்ஸாம் நாய்கள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாய்களை கடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

♈🇮🇳 🌴 நெடுவாசலில் 25 வது நாளாக தொடரும் போராட்டம்:
ஆற்று மணலில் இறங்கி ஆர்பாட்டம் செய்த மக்கள்!

♈🇮🇳 🌴 வர்ணித்த இளைஞரை 100 மீட்டர் தூரம் விரட்டி பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்தத பெண்!சென்னை

♈🇮🇳 🌴 நடிகர் சங்க கட்டடம் கட்டிய பின்னர் தான் திருமணம் செய்வேன் என நடிகர் விஷால் கூறியுள்ளர் இப்போது கட்டடம் கட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளதால் விஷாலின் திருமணம் எங்கே? எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது

♈🇮🇳 🌴 சென்னை கோயம்பேடு அருகே மினி லாரியில் ஏற்றிச் சென்ற வாட்டர் கேன்களை உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது வாட்டர் கேன்கள் அசுத்தமாக இருப்பதாலும், தரமான குடிநீர் என அரசாங்கத்திடம் அனுமதி வாங்காமல் எடுத்துச் சென்றதாலும், போலி வாட்டர் கேன்களையும், லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்

♈🇮🇳 🌴 அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கான இணக்கப்பாடு மீண்டும் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 🌴 வடகொரியாவின் அணு ஆயுத தளங்களை வேரோடு அழிக்க சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தயார் செய்யும் பணியில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது

♈🇮🇳 🌴 ஜம்மு- காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் போலீசாருக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

♈🇮🇳 🌴 விப்ரோ நிறுவனத்திற்கு பயங்கரவாதிகள் மிரட்டல்

♈🇮🇳 🌴 கருணாநிதி பிறந்தநாள் விழா: சோனியாவுக்கு கனிமொழி நேரில் அழைப்பு

♈🇮🇳 🌴 வேலூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. தமிழகம் எங்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனை அடுத்து இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

♈🇮🇳 🌴 திருமங்கலம்-நேருபூங்கா சுரங்கபாதை வழக்கு: உயர்நீதிமன்றம் முடித்துவைப்பு

♈🇮🇳 🌴 ஐபிஎல் டி20 போட்டி: டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு

♈🇮🇳 🌴 புதுச்சேரி பிஎஸ்என்எல் கோட்டத்தில் 2016-17-ம் ஆண்டில் ரூ.13 கோடி லாபம்

♈🇮🇳 🌴 கோபிச்செட்டிபாளையம் அருகே குண்டர் சட்டத்தில் பெண் கைது

♈🇮🇳 🌴 உத்தராகண்ட்டில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி

♈🇮🇳 🌴 எய்ம்ஸ் மாணவர் சரவணன் மரணம் தொடர்பாக டெல்லியில் தந்தையிடம் விசாரணை

♈🇮🇳 🌴 சாம்பியன் கோப்பை தொடருக்கான இந்திய அணி திங்கள்கிழமை அறிவிப்பு

♈🇮🇳 🌴 போராட்டத்தை திரும்பப்பெறாத மருத்துவர் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்: உயர்நீதிமன்றம் ஆணை

♈🇮🇳 🌴 நடிகர் சங்க கட்டிடம் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

♈🇮🇳 🌴 தமிழகத்தில் 21 புதிய எண்ணெய்க் கிணறுகள் தோண்ட ஓஎன்ஜிசி திட்டம்

♈🇮🇳 🌴 ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

♈🇮🇳 🌴 திருச்செந்தூர் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

♈🇮🇳 🌴 மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் : மணல் லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை

♈🇮🇳 🌴 இந்திய வம்சாவளி தம்பதி, அவர்கள் மகளின் முன்னாள் காதலனால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

♈🇮🇳 🌴 தேனி : வைகை அணையின் நீர்மட்டம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்து 23 அடியை எட்டி உள்ளது. இதனால் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு அணையில் இருந்து நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

♈🇮🇳 🌴 அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

134total visits.