விஸ்வரூப செய்திகள் 9/5-3

0
19

♈🇮🇳 🌴 *3pm-9-5-2017-tuesday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 இந்தியாவின் நீதித்துறை ஒரு மர்ம தேசம். நீதியரசர்களின் மீது புகார் எழுமாயின் விசாரணையே இன்றி பதவி உயர்வு கொடுத்து இடம்மாற்றம் தரும் ஒரே துறை நம் பாரத தேசத்தின் நீதித்துறை

♈🇮🇳 🌴 தமிழக அரசுத் துறைகளில், சுகாதாரத் துறையில்தான் ஆயுள்காப்பீடு திட்டத்தில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக விஸ்வரூபம் அன்றே கூறியது . மருந்து கொள்முதலில் சிரிஞ்ச் முதல் பஞ்சு வரையில் எல்லாவற்றிலுமே முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக, தமிழக சுகாதாரத் துறை செயல்பாடுகள் மீது, எல்லா மட்டங்களிலும் கடும் அதிருப்தி இருக்கிறது. இது தொடர்பாக, தமிழக உளவுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து ரகசியமாக விசாரித்து, அதை ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்களுக்கு தகவல் அனுப்பிக் கொண்டுதான் உள்ளனர். இருந்த போதும், துறையில் இருப்பவர்கள், அது குறித்தெல்லாம் கொஞ்சமும் சட்டையே செய்யாமல், தொடர்ந்து அதே காரியங்களையே செய்து வருகின்றனர்
சுகாதாரத் துறையின் போஸ்டிங்குகள், டிரான்ஸ்பர்கள் என்று, தினமும் கோடிக்கணக்கான பணம் அங்கிருக்கும் புரோக்கர்கள் மூலம் புரளுவதாக, உளவுத்துறை போலீசாருக்குத் தகவல் கிடைத்து, தினகரனுக்கு உதவியாளர்களாக இருக்கும் இருவர், டி.எம்.எஸ்., ஆபீசில் சூப்பிரண்டாக இருக்கும் ஒருவர் மீது, உளவுத்துறை குற்றச்சாட்டு கூறி, முதல்வருக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக, முதல்வர் பழனிச்சாமியை சந்தித்த, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சிலர், அதே மூவர் குறித்தும், சுகாதாரத் துறையை ஆக்கிரமித்திருக்கும் புரோக்கர்கள் குறித்தும், புகார் மேல் புகார்களை சொல்லியிருக்கின்றனர்

♈🇮🇳 🌴செய்தி ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் ….திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட முக்கொம்பு சுற்றுலா மையத்தின் அவல நிலை தொடர்பாக…. மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் சீரங்கம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது முக்கொம்பு சுற்றுலா மேம்பாட்டு பணிக்கு 3.10கோடி ஒதுக்கபட்டது.பணிகள் முடிக்கபட்டு வருடங்கள் கடந்தும் பல பணிகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரபடவில்லை. குறிப்பாக 55லட்சம் ஒதுக்கபட்ட சிறுவர் ரயில் 35லட்சம் ஒதுக்கபட்ட செயற்க்கை நீர்வீழ்ச்சி மற்றும் படகு சவாரி ஆகியவை மக்களின் பயன் பாட்டுக்கு வர படாமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியும் தனியார் முதலாளிகளுக்கு துணைபோகும் அரசு அலுவலர்கள் பற்றியும் சீரங்கம் சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் மற்றும் அந்தநல்லுர் ஒன்றிய சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு மற்றும் சட்டவிழிப்புணர்வு ஊழல் ஒழிப்பு அமைப்பு திருச்சி மாவட்டம் சார்பாக தங்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருகிறோம். இச்செய்தியை பரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்………..,..,..

இவன் பெ.அய்யாறப்பன். மாவட்டசெயலாளர் சட்டவிழிப்புணர்வு ஊழல் ஒழிப்பு அமைப்பு. திருச்சி மாவட்டம்

♈🇮🇳 🌴 மணிப்பூர்: டெங்குநோபுல் மாவட்டத்தில் உள்ள லோகாவோவில் நேற்று அதிகாலை ஐஇடி குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஏ பாரல் மற்றும் நாய்க் வி ஹன்ஜியோ ஆகிய வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

♈🇮🇳 🌴மத்தியப் பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு

♈🇮🇳 🌴ஆவடியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும்: மாஃபா பாண்டியராஜன் கோரிக்கை

♈🇮🇳 🌴லண்டன்: அயர்லாந்து நாட்டில், சுற்றுலாவுக்கு புகழ் பெற்ற தீவில், 30 ஆண்டுகளுக்கு முன் மறைந்து போன கடற்கரை, மீண்டும் தோன்றியுள்ளது.ஐரோப்பாவில், பிரிட்டன் அருகில் உள்ள அயர்லாந்து நாட்டில் உள்ள அச்சீல் என்ற தீவு, சுற்றுலாவுக்கு புகழ் பெற்றது. இந்த தீவில் உள்ள டோக் கிராமம் அருகே, 300 மீட்டர் நீள கடற்கரை இருந்தது. 1984ம் ஆண்டு பெரும் புயல் ஒன்று இந்த பகுதியை தாக்கிய போது டோக் கிராம கடற்கரையில் இருந்த மணல் முழுவதையும் சிதற அடித்தது. அதன் பிறகு அப்பகுதியில் வெறும் பாறை தான் காணப்பட்டது. இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட சீற்றம், பல ஆயிரம் டன் மணலை மீண்டும் அந்த கடற்கரை பகுதிக்கே கொண்டு வந்து சேர்த்துள்ளது. இது அப்பகுதி மக்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அச்சீல் தீவில் உள்ள சுற்றுலா அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 30 ஆண்டுகளுக்கு முன் இந்த கடற்கரை பகுதியில், ஓட்டல்கள், ஏராளமான கெஸ்ட் ஹவுஸ்கள் இருந்தன. கடற்கரை மணல் முழுவதும் காணாமல் போனதால் சுற்றுலா பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் கடற்கரை உருவாகி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார்

♈🇮🇳 🌴காவிரி நீர் இருப்பை ஆய்வு செய்யும் வல்லுநர் குழுவை அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு

♈🇮🇳 🌴கண்ணூரில் நீட் தேர்வு எழுதவந்த மாணவர்களிடம் வரம்புமீறி நடந்த 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

♈🇮🇳 🌴வெயிட்டேஜ் மதிப்பெண் தொடர்பான வழக்கு: இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

♈🇮🇳 🌴உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது பாயுமா?விதிமீறி கட்டிடம் கட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் : ஜெயக்குமார்

♈🇮🇳 🌴பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு

♈🇮🇳 🌴மீரட்டில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உரை

♈🇮🇳 🌴கர்நாடகத்தில் முதலமைச்சர் சித்தராமய்யா தலைமையில் காவிரிக் கூட்டம்

♈🇮🇳 🌴கெஜ்ரிவால் இல்லத்தின் முன் பாஜக இளைஞர் ஆதரவாளர்கள் போராட்டம்

♈🇮🇳 🌴 நொய்டாவில் உள்ள பொம்மை தொழிற்சாலையில் தீ விபத்து

♈🇮🇳 🌴உத்தரகண்ட்டில் மே 12, 13 தேதிகளில் கடுமையான மழை பெய்ய வாய்ப்பு

♈🇮🇳 🌴கனகராஜ், சுப்பிரமணியன் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: மு.க. ஸ்டாலின்

♈🇮🇳 🌴 டில்லி சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ., வெளியேற்றம்

♈🇮🇳 🌴 மேற்குவங்க கவர்னர் கேசரிநாத் உடல் நலக்குறைவு

♈🇮🇳 🌴 கெஜ்ரிவாலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பேன்: கபில்மிஸ்ரா

♈🇮🇳 🌴 சீனாவில் பஸ் விபத்து: 10 தென் கொரிய குழந்தைகள் பலி

♈🇮🇳 🌴 வெயிட்டேஜ் மார்க்: எம்.சி.ஐ., தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

♈🇮🇳 🌴 தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து

♈🇮🇳 🌴 உயிருக்கு ஆபத்து: பெண்ணுக்கு கருத்தடை செய்ய அனுமதி இல்லை: கோர்ட்

♈🇮🇳 🌴 கருணாநிதி நலமாக உள்ளார் : மு.க. அழகிரி

♈🇮🇳 🌴 மும்பையில் ரூ.1.25 கோடி லஞ்சம் பெற்ற அதிகாரி கைது
♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

129total visits.