விஸ்வரூப செய்திகள் 2/5-1

0
14

♈🇮🇳 🌴 *5.30am-2-5-2017-tuesday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 சி.பி.ஐ.,க்கு மாற்றினாலும் உண்மை வெளிவராது-

சேலம், ஆத்துார், கோவை, சென்னை உட்பட சில பகுதிகளில் உள்ள நகைக்கடை, நகை அடகு கடை மற்றும் நகை அடமானம் பெறும் தனியார் நிதி நிறுவனங்களில், பணக்கார குடும்பத்தினர் பயன்படுத்தும் ஆடம்பர நகைகளை, ஜனவரி, பிப்ரவரியில், குறைந்த விலைக்கு சிலர் விற்றுள்ளதாக கூறப்படுகிறது.அவற்றை, சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள், உறவினர்கள், நெருக்கமான வாடிக்கையாளர்களுக்கு விற்றதாக கூறப்படுகிறது. மார்ச்சில், ஆத்துார் நகரில் உள்ள நகை மற்றும் அடகு கடைகள், சேலத்தில் உள்ள சில கடைகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.’ விற்பனைக்கு முந்தைய இருப்பு, விற்ற தங்க அளவில் இருந்த வித்தியாசத்தால், சோதனை நடந்தது’ என, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர். ஜெயலலிதா மறைவுக்கு பின், சேலம் மாவட்டத்தில், பழைய நகைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா, நகை அணியாமல் இருந்தாலும், நகை பிரியர் என்றும், கோடநாடு எஸ்டேட்டுக்கு வரும் போது, புது நகைகளை அணிந்து பார்ப்பார் எனவும் கூறப்படுகிறது. அதனால், அதிக அளவிலான நகைகள், அங்கிருந்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின், எஸ்டேட்டில் போலீசார் பாதுகாப்பு இல்லாததால், வடமாநிலங்களை சேர்ந்தவர்கள், பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர். இதனால், அங்கு ஏற்கனவே பணிபுரிந்த சிலர், அவ்வப்போது நகை, பணத்தை கொள்ளை அடித்ததாக தெரிகிறது. 3,000 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும், அவற்றை சிலர், நகைகடைகளில் விற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காவலாளி கொலை வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றினால், ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகை திருட்டு புகார் குறித்த தகவல் வெளியாகும். மேலும், கோடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பான மர்ம முடிச்சுகள் அவிழும் என, எதிர்பார்க்கப்படுகிறது

♈🇮🇳 🌴 உத்தரப் பிரதேசத்தின் லக்கிபூரில் பவான் வன் விஹார் ஆஷ்ரமம் சார்பாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், சனாதன் தர்மா மகாசங் அமைப்பின் தேசிய தலைவரான சுவாமி பிரபோதானந்தா கிரி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்துத்வா மற்றும் சமூகத்தை பாதுகாக்க ஒவ்வொரு இந்து தம்பதியரும் 8 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். `நாம் இருவர், நமக்கு எட்டு பேர்’ என்ற கொள்கையை இந்துக்கள் பின்பற்ற வேண்டும். இந்துக்கள் தங்களது பாதுகாப்புக்காக இந்து ரக்‌ஷா தள் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் விரிவுப்படுத் வேண்டும் என்றார்.

♈🇮🇳 🌴 பீகாரில் ஐ.ஜ.தளம் பெண் எம்.பி. வீட்டில் குண்டுவீசி தாக்குதல்

♈🇮🇳 🌴 காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல்லூரி மாணவர்கள் கல்வீச்சு·

♈🇮🇳 🌴 ராகுல் பேரணிக்கு சென்ற பஸ் கவிழ்ந்து 35 பேர் காயம்·

♈🇮🇳 🌴 தமிழகத்தில் 6 இடங்களில் 100 டிகிரி வெயில்· பெண்களுக்கு டூவீலர்·

♈🇮🇳 🌴 மதுரையில் தங்கப்பல்லக்கில் மீனாட்சி அம்மன் வீதியுலா·

♈🇮🇳 🌴 ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு புது வாழ்வு திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வேலுமணி, சென்னையில் நேற்று ஆய்வு நடத்தினார்.
கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பேசியதாவது: 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அறிவித்த சிறப்பு திட்டமான பணிக்கு செல்லும் ஏழை மகளிருக்கு `அம்மா இருசக்கர வாகன திட்டம்’’ ஆண்டு தோறும் 200 கோடி மானிய உதவியுடன் ஒரு லட்சம் பணிபுரியும் ஏழை மகளிர் பயன்பெற உள்ளனர். இத்திட்டத்தை மகளிர் நல மேம்பாட்டு நிறுவன அலுவலர்கள் உரிய முனைப்புடன் விரைந்து செயல்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்·

♈🇮🇳 🌴 டாஸ்மாக் கடை சூறை பெண்கள் நள்ளிரவில் கைது-திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த சு.பள்ளியம்பட்டு கிராமத்தில் கடந்த 29ம் தேதி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் ஆத்திரமடைந்த பெண்கள் உட்பட கிராம மக்கள் கடையில் இருந்த மதுபான பாட்டில்களை வெளியே எடுத்து வீசி அடித்து நொறுக்கினர். இந்நிலையில், போலீசார் டாஸ்மாக் கடை பொருட்களை சேதப்படுத்தியதாக 5 பெண்கள் உட்பட 22 பேரை நள்ளிரவு 11.30 மணியளவில் கைது செய்தனர். பின்னர், அவர்களை திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்·

♈🇮🇳 🌴 சசிகலா பொதுச்செயலாளர் என பிரமாண பத்திரம்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு·

♈🇮🇳 🌴 ஐபிஎல் டி20 சீசன் 10: பெங்களூருக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

♈🇮🇳 🌴 நெல்லையை வட்டமடித்த மர்ம விமானம்: பொதுமக்கள் பீதி

♈🇮🇳 🌴மானிய விலை சிலிண்டர் ரூ. 2 உயர்வு

♈🇮🇳 🌴 அர்ஜூனா விருது: கிரிக்கெட் வீரர் புஜரா பெயர் பரிந்துரை

♈🇮🇳 🌴 மனிதாபிமானமற்ற பாக். ராணுவம்: ஜவான்கள் உடல் சிதைப்பிற்கு ஜெடலி கண்டனம்

♈🇮🇳 🌴 கேபிள், ‘டிவி’ வாடிக்கையாளர்களிடம், ஊழியர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாலும், தவறான அணுகுமுறையாலும், டி.டி.எச்., என்னும், ‘டிஷ் ஆண்டனா’ வழி சேவைக்கு, மாறும் போக்கு அதிகரித்து வருகிறது

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

146total visits.