விஸ்வரூப செய்திகள் 26/4-1

0
25

♈🇮🇳 🌴 *6.30am-26-4-2017-wednesday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*
♈🇮🇳 🌴 மிஸ்டர் ராதாரவி உங்கள் மகன் உங்களைபோல இல்லாதததற்க்கு பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.விஸ்வரூபம்.ஜீவா என் முதலாளி. அவரின் அப்பா ஆர்.பி. சவுத்ரி சாரால் தான் ராதாரவி ஒரு நேரம் சாப்பிடுகிறான். ஸ்ரீதிவ்யா தேங்ஸ் மட்டுமே சொல்லிட்டு போச்சு. எனக்கு பிறகு என் மகன் உள்ளான். அவனிடம் சினிமா என்றாலே 8 மைல் ஓடுகிறான். அய்யய்யே என்கிறான். அப்படி எல்லாம் சொல்லாதடா என்று கூறியுள்ளேன். சினிமாவில் நன்றி கெட்ட பயலுக நிறைய இருக்காங்கன்னு அவன் தெரிஞ்சுக்கிட்டான். வாரிசுகள் வருகிறார்கள். அரசியலில் வருகிறார்கள், ஹோட்டலில் வருகிறார்கள். பாருங்க சரவணா ஸ்டோர்ஸில் வருகிறார்கள். அவன் ஆடும்போதே நினைச்சேன் சினிமாவுக்கு வரப் போகிறான் என்று. சினிமா கெட்டுப் போச்சு என்ன செய்ய. சங்கிலி புங்கிலி கதவை தொற படம் ஓஹோன்னு ஓடும் என்பதை தயாரிப்பாளரிடம் கூறிக் கொள்கிறேன். எங்கப்பா தமிழ்நாடு பூரா பரப்பியுள்ளார் குடும்பத்தை. கமல் ஹாஸனை அழ வைத்த ஒரே படம் விஸ்வரூபம். அவர் டிவியில் அழுததை சொன்னேன். அதை சொல்றேன். நான் அந்த ஆள் அழுது பார்க்க முடியாது. நான் பால்ய சினேகிதன். நன்றி உள்ளவன் என்றார் ராதாரவி

♈🇮🇳 🌴 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா இறுதி வாதம் செய்தார். சி.பி.ஐ. தரப்பு இறுதி வாதத்துக்கு பிறகு இவ்வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட உள்ளது

♈🇮🇳 🌴 ஐ நாவுக்கான நிதியை வெட்டுவதற்கு முன்னாள் அமெரிக்க அமைச்சர்கள் எதிர்ப்பு.இக்கடிதத்தில் மெடிலன் ராபர்ட்ஸ், சூசன் ரைஸ் உட்பட ஒன்பது முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கையொப்பமிட்டுள்ளனர். “நாம் இப்படி நிதியைக் குறைத்தால் நமது இடத்தை நமது விரோதிகள் பிடித்துக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது” என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்

♈🇮🇳 🌴 சிதம்பரம் அருகே கொள்ளை போன ஐம்பொன் சிலை -கொள்ளிடம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே கீழபருத்திகுடி கிராமத்தில் உத்திராபதியார் (சிவன்) கோயில் உள்ளது. கடந்த வாரம் இந்த கோயிலில் இருந்த ஒன்னரை அடி உயரமும் 22 கிலோ எடையும் கொண்ட உத்திராபதியார் சிலை கொள்ளை அடிக்கபட்டது. பழங்கால ஐம்பொன் சிலையான இதன் மதிப்பு ரூ5 லட்சமாகும். இந்த நிலையில் செவ்வாயன்று வெள்ளூர் கிராம கொள்ளிட ஆற்று மணலில் புதைத்து வைக்கபட்டு இருந்த அந்த ஐம்பொன் சிலையை குமராட்சி போலீசார் கைபற்றினர். இது தொடர்பாக வடலூரை சேர்ந்த நபர் ஒருவரை தனி இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்

♈🇮🇳 🌴 தினகரன் இன்று(ஏப்.26) பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்?

♈🇮🇳 🌴தினகரன் நண்பர் ஃமல்லிகார்ஜுனாவும் கைது

♈🇮🇳 🌴விருது பெறும் கே. விஸ்வநாத்துக்கு நடிகர் ரஜினி வாழ்த்து

♈🇮🇳 🌴சேலம்: வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர் திருமுருகன் உடல் தகனம்

♈🇮🇳 🌴திருச்சி வந்தார் அய்யாக்கண்ணு : பொதுமக்கள் வரவேற்பு

♈🇮🇳 🌴சத்தீஷ்கர் நக்சல்கள் தாக்குதல்: ஸ்டாலின் கண்டனம்

♈🇮🇳 🌴அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் சோதனை

♈🇮🇳 🌴இலங்கை பிரதமர் ரணில் 5 நாள் அரசு முறைபயணமாக இந்தியா வந்தார்

♈🇮🇳 🌴மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் சர்ச்கேட் பகுதியிலிருந்து மலாட் செல்லும் புறநகர் ரயிலை, ரயில்வே ஊழியர் மலாட் ஸ்டேசனில் நிறுத்த மறந்ததால், நூற்றுக்கணக்கான பயணிகளுடன் ரயில் யார்டில் நிறுத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுளளது.அந்த ஊழியர் மது அருந்தியுள்ளாரா என்பது உள்ளிட்ட சோதனையுடன் கூடிய விசாரணையை மேற்கு ரயில்வே நிர்வாகம் துவக்கியுள்ளது

♈🇮🇳 🌴ஜனாதிபதி வேட்பாளராக குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேலை, பாரதிய ஜனதா கட்சி முன்னிறுத்த வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்

♈🇮🇳 🌴30 வயதாகும் பிரான்ஸ் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் இமானுவேல் மேக்ரன் 64 வயதான தனது பள்ளி ஆசிரியை மணந்துள்ளார். இந்த அதிபர் வேட்பாளரின் மனைவி பிரிஜ்ஜெட் ட்ரானெக்ஸ். இவருக்கு வயது 64. தன்னைவிட 25 வயது மூத்த ஒருவரை மேக்ரன் மணந்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 17 வயதில் பள்ளியில் படிக்கும் போதே தன்னுடைய ஆசிரியையை மணப்பதாக உறுதியளித்த மேக்ரன் அதை போலவே தன்னுடைய பள்ளி ஆசிரியையை மணந்துள்ளார். பிரிஜ்ஜெட்டுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2007-ல் பிரிஜ்ஜெட்டுக்கு விவாகரத்தான பின்னர் தன்னுடைய 29 வயதில் பிரிஜ்ஜெட்டை மணந்துள்ளார். மேக்ரன் பிரான்ஸின் அதிபராகப் பதவியேற்றால் பிரான்ஸின் முதல் பெண்மணியாக பிரிஜ்ஜெட் திகழ்வார். உலகிலேயே வித்தியாசமான அதிபர் தம்பதிகளாக இவர்கள் திகழ்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

♈🇮🇳 🌴 ஜனநாயக நாடு என சொல்லும் இந்தியாவிலேயே இப்படிதான் நடக்குது. அப்கானிஸ்தானில் நடப்பட்டு ஒன்றும் பெரிய விஷயமே அல்ல. ஆப்கானிஸ்தானில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படும் நபர்களிடம் மிக மோசமான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தீவிரவாதி என்ற சந்தேகத்தில் ஒரு நபர் கைது செய்யப்பட்டால் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று அவனிடம் இருந்து உண்மைகளை பெற வேண்டும் என்ற நோக்கில், கடுமையாக அடித்துத் துன்புறுத்துதல், உடல் மற்றும் குதிகால்களில் அடித்தல், அந்தரங்க உறுப்புகளில் மின்சாராம் பாய்ச்சல், தூங்க விடாமல் செய்தல், மற்றும் கொன்று விடுவோம் என்ற மிரட்டல் விடுப்பது ஆகிய கடினமான முறைகளை கையாளுகின்றனர்

♈🇮🇳 🌴அனுபவிக்கவும் தெரிந்தவர் அணுகுண்டுகளையும் தயாரிப்பவர் -என்ஜாய் -அணு ஆயுத சோதனையால் உலக நாடுகளையும், தனது சர்வாதிகார ஆட்சியால் வட கொரியா மக்களையும் மிரட்டி வரும் கிம் ஜாங் உன் மற்றும் அவரது தந்தையின் ரகசிய வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை கிங் ஜாங் இல் ஆவார், இவர் தனது ஆட்சியின் போது 17 அரண்மனைகளை ஆடம்பர சொகுசு வாழ்க்கைக்காக கட்டியுள்ளார்,நாட்டினை ஆட்சி செய்து வந்தாலும், மறுபுறம் பள்ளி மாணவிகளை வேட்டையாடுவதில் கைதேர்ந்தவர் ஆவார், இராணுவ வீரர்களை அனுப்பி பள்ளி மாணவிகளை அழைத்து வரச் சொல்லும் இவர், தனது 17 அரண்மனைகளில் ஒரு அண்மனையில் அவர்களை அடைத்து வைத்திருந்துள்ளார். அப்பெண்களை தனது சொகுசு வாழ்க்கைக்கும், கழிவறைகளை சுத்தம் செய்தல், வீட்டினை சுத்தம் செய்தல் என தனது பணிப்பெண்களாக பயன்படுத்தியுள்ளார்

♈🇮🇳 🌴போர் முனைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, வடகொரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் உள்ளன.இந்நிலையில் பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் Michael Fallon, பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளிக்கையில், பிரித்தானியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில், தேவைப்பட்டால் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்

♈🇮🇳 🌴பாகிஸ்தானின் அப்போட்டாபாத் மாவட்டத்தில் சிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பாகிஸ்தான் இந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட 20 வருடங்களுக்கு பிறகு அந்நாட்டு இந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெஷாவர் ஐகோர்ட்டின் நீதிபதிகள் அடீக் ஹூசைன் ஷா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

♈🇮🇳 🌴மிசோரமில் இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த வாரம் தொடங்கிய மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தலைநகர் அய்சால் உட்பட பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலை 54ல் ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மழை காரணமாக தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டதோடு, பல இடத்தில் தொலைபேசி ஒயர்களும் அறுந்துவிழுந்தன. ஹந்தர் பகுதியில் இருந்து 22 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இங்குள்ள 3 மாடி கட்டிடமும் மழையால் இடிந்து விழுந்தது

♈🇮🇳 🌴திருச்சி, வேலூர் மற்றும் திருத்தணியல் தமிழகத்திலேயே அதிகமாக 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. மதுரை, கரூர்பரமத்தில் 106, நெல்லையில் 105, திருப்பத்தூரில் 104, சேலத்தில் 103 டிகிரி வெயில் சுட்டெரித்தது. தருமபுரி 101 மற்றும் சென்னை மீனம்பாக்கத்தில் 99 டிகிரி பாரன்ஹீட் வெயில் வாட்டியது

♈🇮🇳 🌴 பல்லாவரம்: மதுரவாயல் நெற்குன்றம் ஜெயராம் நகரை சேர்ந்தவர் கஜேந்திரன் (45), கூலி தொழிலாளி. இவர், நேற்று வானகரத்தில் ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தேமுதிக ஆலோசனை கூட்டத்துக்காக கொடி கம்பம் மற்றும் தோரணம் கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது, ெகாடி கம்பம் மின் கம்பியில் உரசியதில் தூக்கி வீசப்பட்ட கஜேந்திரன் உடல் கருகி இறந்தார். மதுரவாயல் போலீசார், சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்

♈🇮🇳 🌴 நெல்லை: வள்ளியூர் அருகே தண்ணீரில் மூழ்கி குழந்தை பலியானது. வள்ளியூர் அருகே உள்ள தேரை குளம் கிராமத்தில் உள்ள கீர்த்திகா என்ற ஒன்றரை வயதுள்ள குழந்தை, வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியானது

♈🇮🇳 🌴 பாகிஸ்தான் ஆதரவு குழுவினர், இந்தியாவின் முன்னணி பல்கலைகழகங்களான டில்லி பல்கலைகழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைகழகம் உள்ளிட்ட பல்கலைகழகங்களின் மொபைல் பதிப்பு இணையதளங்களில் ஊடுருவி அதில் காஷ்மீர் சுதந்திரம் தொடர்பான வாசகங்களை பதிவேற்றியிருந்தனர். தொழில்நுட்பகுழுவினர், விரைந்து செயல்பட்டு சர்ச்சை வாசகங்களை நீக்கி மீண்டும் இணையதளங்களை பழையநிலைக்கு கொண்டுவந்தனர்

♈🇮🇳 🌴 இளம்பெண்ணை எரித்துக்கொன்றவருக்கு ஆயுள்தண்டனை தீர்ப்பு-மீனாம்பாள் நகரில்-ஆர்.கே.நகர்

♈🇮🇳 🌴 பெங்களூருவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1–ந் தேதிக்கு மேல் கட்டிடம் கட்டியவர்கள், 50 சதவீத சொத்து வரியை செலுத்தும் வசதி ஆன்லைனில் செய்யப்படாமல் இருந்தது. தற்போது இதற்கு ஆன்லைன் வசதியை செய்துள்ளோம். அதே போல் ஆன்லைன் மூலமாக வரி செலுத்துவதில் அதிகளவில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டன. இந்த தொழில்நுட்ப கோளாறுகளில் 60 சதவீதத்தை சரிசெய்துள்ளோம்-பெங்களூரு மாநகராட்சி நிதி நிலை குழு தலைவர் குணசேகர்

♈🇮🇳 🌴 முழுஅடைப்புப் போராட்டம் முழு வெற்றி!அனைவருக்கும் நன்றி! தொல். திருமாவளவன் அறிக்கை!

♈🇮🇳 🌴 மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில், 50 சதவீத இட ஒதுக்கீடுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி நேற்று 7-வது நாளாக டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

183total visits.