விஸ்வரூப செய்திகள் 26/4-5

0
16

♈🇮🇳 🌴 *3pm-26-4-2017-wednesday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*
♈🇮🇳 🌴 திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கிடைத்துள்ள 7 கிலோ தங்கத்தை எந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி 2.5 சதவீதம் வட்டி தருகின்றதோ அந்த வங்கியில் முதலீடு செய்ய தயாராக உள்ளதாக திருப்பதி திருமலையின் அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சதலவாட கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் முறைகேடு நடைபெற்று வருவதாக புகார்கள் வந்துள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் முதல் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் ஆன்லைன் மற்றும் இ-தர்ஷன் கவுண்டர் மூலம் பதிவு செய்யப்படும் எனவும் இதன் மூலம் முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி திருப்பதியில் இருந்து திருமலைக்கு 24 மணி நேரமும் வந்துசெல்லும் விதமாக மலைப்பாதை திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
♈🇮🇳 🌴 திட்ட கமிஷனுக்கு மாற்றாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள நிதி ஆயோக் அமைப்பு, ‘ விவசாய வருவாய்க்கும் வருமான வரி விதிக்கலாம்’ என, கூறியுள்ளது
♈🇮🇳 🌴 சென்னை பத்திரிக்கையாளர் சங்க தலைவர் திரு.அன்பழகன் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உறவினர்களுக்கு தகவல் அளிக்காமல் அவசர அவசரமாக விமானம் மூலம் கோவைக்கு கடத்தி சென்றதாம் காவல்துறை தகவல் வருகின்றன

♈🇮🇳 🌴 தேனி பிரஸ் கிளப் WJUT உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு. …………………………. தேனி மாவட்டம் கம்பம் நிருபர்கள் கேரள அரசு தமிழக எல்லையில் அத்துமீறி ஆக்கிரமப்பு செய்வதை செய்தி எடுக்க சென்ற நிருபர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும், தாக்க முயற்சி செய்த கேரள ஆளும் அரசு மற்றும் கேரள போலிசை கண்டித்து தேனி பிரஸ் கிளப் மற்றும் உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் போடி மெட்டு பகுதியில் 27-04-2017 காலை 10.00 மணியளவில் எல்லை தாண்டி உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்க தேனி மாவட்ட தலைவர் மாலை மலர் கூடலூர் பாண்டியன் தலைமையிலும் தேனி பிரஸ் கிளப் தலைவர் ராஜ் டிவி முத்துராஜ், பொருளாளர் பாலிமர் டிவி கண்ணன், அமைப்பாளர் மாலை மலர் நாகராஜ் உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்க து.செயலாளர் கேப்டன் டிவி பாண்டிக்குமார் முன்னிலையிலும் தென் மண்டல செயலாளர் சத்தியம் டிவி தேனி ராஜாமுகமது கண்டன உரையில் கேரள காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம்

♈🇮🇳 🌴 *இன்று புதன் மாலை 26/04/2017* தவளக்குப்பம்,கடலூர் சாலை,நல்லவாடு சாலை சந்திப்பில் *அம்பேத்காரின் 126 வது, பிறந்தநாள் நினைவுப் பொதுக்கூட்டம்.* *தலைமை;* தோழர் *ஆ.பாவாடைராயன்* *கருத்துரை;* தோழர். *கொளத்தூர் மணி* தோழர், *வினோத்* தோழர் *கோ.அ.ஜெகன்நாதன்* தோழர். *இரா.அழகிரி,* தோழர்.*வீரமோகன்* தோழர் *கோ.அழகர்* தோழர் *பெ.சந்திரசேகரன்*தோழர். *இரா.மங்கையர்செல்வம்,* தோழர் *வீர இராமலிங்கம்* தோழர் *சி்.ஸ்ரீதர்* தோழர். *ச.பாலசந்தரம்* தோழர் *தூ.சடகோபன்* *நன்றிவுரை;* *செ.வேல்முருகன்* ஊடக நண்பர்களும், தோழமை அமைப்புகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.இவன்.*ஆ.பாவடைராயன்*மாநிலத்தலைவர்,புரட்சியாளர்அம்பேத்கர் தொண்டர்ப்படை

♈🇮🇳 🌴 மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு -மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அம்மாபட்டி பஞ்சாயத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு புதிய அட்டை அரசால் வழங்கபடுகிறது.இதற்கு பஞ்சாயத்து கிளார்க் மூலமாக 1 அட்டைக்கு ₹20 கட்டாய வசூல்.மொத்தம் பயனாளர்கள் மூலம் வசூலான தொகை 850×20=₹17000 மேலும் பசுமை வீட்டு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்ய ₹20000.கட்டாய வசூல்.அரசு பள்ளி”கட்டிட ஒப்பந்தகாரரிடம் 25000 பெற்றுகொண்டு கிராம மக்கள் பயன்படுத்தும் குடிநீர் விற்பனை-தகவல்

♈🇮🇳 🌴 திருவண்ணாமலை அருகே மேல்சோழங்குப்பத்தில் செம்மண்ணை வெட்டி எடுக்கும் போது மண் சரிந்து சிறுவன் பலியாகியுள்ளான். செங்கல் சூளைக்கு செம்மண் வெட்டி எடுக்கும் போது மண் சரிந்ததில் சிறுவன் பிரதாப் உயிரிழந்தான். மண் சரிந்து விழுந்ததில் காயமடைந்த மேலும் இரண்டு சிறுவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

♈🇮🇳 🌴 வரும் 28ம் தேதி நடக்க இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு: செந்தில்பாலாஜி அறிவிப்பு

· ♈🇮🇳 🌴 லஞ்சம் வாங்கிய வழக்கு: வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறை-வி.கே. புதூரில்·

♈🇮🇳 🌴 சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக கொடைக்கானலில் சிசிடிவி கேமரா·

♈🇮🇳 🌴 இந்தி திணிப்பை தடுக்க விழிப்புணர்வு தேவை: கீ.வீரமணி வேண்டுகோள்·

♈🇮🇳 🌴 துருக்கியில் 1,000 குலென் ஆதரவாளர்கள் கைது·

♈🇮🇳 🌴 தமிழக அரசு ஆட்டம் கண்டுள்ளதால் நீட் தேர்வு தள்ளிப் போகிறதா? உயர்நீதிமன்றம்·

♈🇮🇳 🌴 தற்கொலை வழக்கு: கணவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை-2014ல் கோபிமொடச்சூரில் ஆஷாராணி தற்கொலை வழக்கில்

♈🇮🇳 🌴 டில்லி தேர்தல் : 3 மாநகராட்சிகளை கைப்பற்றியது பா.ஜ.,

♈🇮🇳 🌴உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைத்தார் செந்தில்பாலாஜி

♈🇮🇳 🌴மக்கள் நம்பிக்கையை கெஜ்ரிவால் இழந்துவிட்டார்: ஹசாரே

♈🇮🇳 🌴 தாய்லாந்து நாட்டில் 11 மாத பெண் குழந்தையை வீட்டின் மாடியில் இருந்து கீழே போட்டு, அதன் வீடியோ காட்சிகளை பேஸ்புக்கில் வெளியிட்ட கொடூரன் தானும் தற்கொலை செய்து கொண்டான்

♈🇮🇳 🌴 உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட புதிய விமானம் தாங்கி போர்க்கப்பலை சீன அரசு நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது

♈🇮🇳 🌴 ஆளில்லா லெவல் கிராசிங்கில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி ராமநாதபுரத்தில் நடந்து வருகிறது. இதனை ரயில்வே தலைமை பொறியாளர் சுயம்புலிங்கம் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர். பாம்பன் தூக்குப் பாலத்தை நவீனமயமாக்கும் திட்டம் விரைவில் துவக்கப்பட உள்ளது. தற்போது வரை இந்த பாலம் மனிதர்களைக் கொண்டே தூக்கப்படுகிறது. இதனால் பாலத்தை தூக்குவதற்கு 15 நிமிடங்களும், இறக்குவதற்கு 15 நிமிடங்களும் ஆகிறது. இதனால் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக தூக்கு பாலம் திறப்பதை மின்சார மோட்டார் மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் செப்டம்பர் -அக்டோபர் மாதங்களில் துவங்கப்படும். ஒரு மாதம் இப்பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தற்போது 600 டன் எடை கொண்ட இரும்பு ராடுகளால் உள்ள தூக்கு பாலம், எடை குறைக்கப்பட்டு 300 டன் உடையதாக மாற்றப்பட உள்ளது. ரூ.35 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தால் பாலத்தை ஒரு நிமிடத்தில் மின் மோட்டார்கள் கொண்டு திறக்க முடியும். இதனால் இந்த பாதையில் கூடுதலாக ரயில்கள் இயக்க முடியும். மின்சாரம் தடைபடும் சமயங்களில் நீர்மின்சக்தி மூலம் தூக்கு பாலம் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்

♈🇮🇳 🌴 வழக்கமாக கோகோவில் இருந்து தான் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. ஆனால் பலா கொட்டையில் இருந்தும் சாக்லேட் தயாரிக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சாக்லேட் தயாரிக்க, சர்வதேச அளவில் 45 லட்சம் டன் கோகோ தேவைப்படுகிறது. ஆனால் விவசாயிகளால் அந்த அளவு கோகோ சாகுபடி செய்ய முடியவில்லை. 37 லட்சம் டன் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். சாக்லேட் தயாரிக்க இன்னும் 10 ஆண்டுகளில் கூடுதலாக கோகோ தேவைப்படும்

♈🇮🇳 🌴 ஜெர்மனியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், பெண்கள் தொடர்பாக தனது தந்தையின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தினார். பெர்லினில், ஜி-20 நாடுகளின் மகளிர் மாநாட்டில், தனது தந்தை, குடும்பங்களை ஆதரிக்கும் மிகப்பெரிய சாம்பியன் என்று இவான்கா வர்ணித்தபோது, பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் முணுமுணப்புக்கள் வெளிப்பட்டன

♈🇮🇳 🌴 ஜெர்மனியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், பெண்கள் தொடர்பாக தனது தந்தையின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தினார். பெர்லினில், ஜி-20 நாடுகளின் மகளிர் மாநாட்டில், தனது தந்தை, குடும்பங்களை ஆதரிக்கும் மிகப்பெரிய சாம்பியன் என்று இவான்கா வர்ணித்தபோது, பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் முணுமுணப்புக்கள் வெளிப்பட்டன

♈🇮🇳 🌴 பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால், அரசு கொண்டு வந்துள்ள ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய கொள்கையை வகுப்பதாக தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது

♈🇮🇳 🌴வடகொரியா மீண்டும் அணுஆயுத அல்லது ஏவுகணை சோதனையில் ஈடுபடுவதை தவிர்க்கும் விதமாக அமெரிக்கா யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி உள்ளது.ஏவுகணைகள் தாங்கிய அமெரிக்காவின் யுஎஸ்எஸ் மிசிகான் நீர்மூழ்கி இணைகிறது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா படைகளை விஸ்தரிப்பதால் பதற்றமானது அதிகரித்து உள்ளது.அமெரிக்கா மற்றும் வடகொரியா கடந்த சில வாரங்களாக கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டு உள்ளதால் பதற்றமானது அதிகரித்து உள்ளது

♈🇮🇳 🌴சீனாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் தங்களது குழந்தைகளுக்கு இஸ்லாம், சதாம், ஹஜ், குரான் உள்ளிட்ட பெயர்களை சூட்டக்கூடாது என உத்தரவிட்டுள்ளது

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

142total visits.