விஸ்வரூப செய்திகள் 3/5-3

0
20

♈🇮🇳 🌴 *3pm-3-5-2017-wednesday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 திருவாடானை அருகே கல்லூரி மாணவி மாயம். இது குறித்து திருவாடானை காவல் நிலையத்தார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்

♈🇮🇳 🌴 மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு.. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது சென்னை ஹைகோர்ட்!

♈🇮🇳 🌴 சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு விஸ்வரூபதின் பணிவான வேண்டுகோள் -Respected sir/madam, I am s.selvaraj, lic agent, living in 33c, Janakiraman street, k.r.nagar, Korattur, chennai-600080. We are badly affected by so many health disorders due to drainage water in front of our house n we can’t able to enter n exit our houses, even in this peak summer time. We have complained this to various higher level authorities in govt. But so far no use. FYI this is a cmda approved layout. I have enclosed photos herewith. Pls take serious action atonce through your channel. Matter most urgent. Thanks n regards selvaraj.s 919841026568-Anyone who knows any news media r channel pls send the above to them. Matter urgent. Thanks in advance. Selvaraj

♈🇮🇳 🌴 தமிழக காவல்துறை இயக்குநர் அவர்களுக்கு. ..உலக பத்திரிக்கையாளர் தினம் கொண்டாடபடும் வேளையில் ஜனநாயக குரல் வலையை நெரிக்கும் விதமாக 3-5-2017 அன்று நெற்றிக்கண் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரவுடிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்ற வார இதழில் மின்வாரியம் ஊழல்கள் பற்றிய செய்தி வெளியானது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரமும் செய்தி வருகிறதா என்பதை அறிய ஆசிரியர் இல்லாத நேரம் பார்த்து ரவுடிகள் கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விட்டதோடு பொருட்களை சூறையாடி சென்றனர்.இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஸ்வரூபம் வேண்டுகிறது

♈🇮🇳 🌴 *ஜூனியர் விகடன் செய்தியாளர்களை துப்பாக்கியால் தாக்கிய உளுந்தூர்பேட்டை டோல்கேட் ரவுடிகள்* ஜூனியர் விகடனின் புதுச்சேரி-விழுப்புரம் செய்தியாளர் முருகன், போட்டோகிராபர் குரூஸ்தனம், விழுப்புரம் போட்டொகிராபர் சிலம்பரசன், கடலூர் போட்டோகிராபர் தேவராஜன் ஆகியோர் திருச்சியில் இருந்து காரில் விழுப்புரம் வந்து கொண்டிருந்தனர். அப்போது உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் கட்டணம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு முதல்நாள் செல்லும்போதே ரிட்டர்னுக்கும் சேர்த்து வாங்கிவிட்டோம் என்று சொல்லி பணம் கட்டிய ரசீதைத் தேடிக் கொடுத்துவிட்டார்கள். ஆனால் அதற்குள் டோல்கேட் ஊழியர்கள் என்ற பெயரில் அங்கிருந்த குண்டர்கள் விகடன் செய்தியாளர்களைப் பார்த்து ’ஏமாற்ற வந்துட்டீங்களா… _____’ என்று சொல்லி தகாத வார்தைகளால் திட்டியிருக்கிறார்கள். ஏன் இப்படிப் பேசுகிறீகள் என்று கேட்டு காரில் இருந்து இறங்கிய செய்தியாளர்களை அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் உள்ளூர், வடமாநில ரவுடிகள் என 25 பேர் சேர்ந்து கல் மற்றும் கட்டையால் கொலை வெறியோடுத் தாக்கியிருக்கிறார்கள். வடமாநிலத்தைச் சேர்ந்த இன்னொரு ரவுடி துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதோடு அதைக் கொண்டு தாக்கியதால் கடலூர் விகடன் போட்டோகிராபர் தேவராஜின் கை கிழிந்தது ரத்தம் வழிந்தோடியது. போலீசுக்கு போன் செய்த செய்தியாளர்களைப் பார்த்து போலீஸ் வந்து எங்க மயிரக் கூட புடுங்காது என்று பேசிய அந்த ரவுடிக் கூட்டத்தை அச்சத்தோடு கடந்தார்கள் மற்ற வாகன ஓட்டிகள். சமூகத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் செய்தியாளர்களிடமே இப்படி நடந்து கொண்ட இந்த டோல்கேட் ரவுடிகள் பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் ? அந்த ரவுடிகளிடம் துப்பாக்கி எங்கிருந்து வந்தது ? அதைப் பயன்படுத்தும் உரிமையை அவர்களுக்குக் கொடுத்தது யார் என்பதை காவல்துறைதான் விளக்க வேண்டும். டோல்கேட்டில் இருக்கும் கேமராவில் நிருபர்களைத் தாக்கிய ரவுடிகளை அடையாளம் கண்டு உடனே கைது செய்ய வேண்டும்

♈🇮🇳 🌴 நீலகிரி: புலியை பார்த்த மக்கள் அதிர்ச்சி: வனத்துறை தீவிர நடவடிக்கை

♈🇮🇳 🌴 பார்லி., பொது கணக்கு குழு தலைவராக பொறுப்பேற்றார் மல்லிகார்ஜூனா கார்கே

♈🇮🇳 🌴 4 நிபந்தனைகளை ஏற்றால் பேச்சுவார்த்தை: மாபா.பாண்டியராஜன் தகவல்

♈🇮🇳 🌴 மத்திய அரசுடன் மாநில அரசு சுமூகமாக இருப்பதை வரவேற்போம்: ஸ்டாலின்

♈🇮🇳 🌴 கமுதி, மயிலாடுதுறையில் கனமழை

♈🇮🇳 🌴 தொடரும் தற்கொலை… சுமங்கலி சீரியல் நடிகர் பிரதீப் தற்கொலை

♈🇮🇳 🌴 ஐதராபாத்தில் தமிழ் டிவி தொடர் நடிகர் தற்கொலை

♈🇮🇳 🌴 அரசியலுக்காக ஸ்டாலின் கருத்து சொல்வது வாடிக்கை: ஓ.பி.எஸ்., பதிலடி

♈🇮🇳 🌴 சென்னை கீழ்பாக்கம் டைலர்ஸ் சாலையில் கார் ஓட்டுநரைத் தாக்கி 1.5 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். சவுக்கார்பேட்டை சேர்ந்த பிரவீன்குமார் என்பவரின் கடையில் இருந்து அமைந்தகரைக்கு காரில் சென்ற போது இந்த கொள்ளை நடந்துள்ளது. 1.5 கிலோ தங்கமும், 5 கிலோ வெள்ளியும் கொள்ளையடித்துள்ளதாக ஓட்டுநர் வெங்கட்ராமன் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த கொள்ளையை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

♈🇮🇳 🌴 டெல்லியில் மின்துறை அமைச்சர்கள் மாநாடு தொடங்கியது

♈🇮🇳 🌴 மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு விவகாரம்: வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

♈🇮🇳 🌴 பாம்பன் தூக்குப்பாலத்தை கடக்கும்போது கப்பல் தரைதட்டியது

♈🇮🇳 🌴 தஞ்சாவூர் அருகே சூறைக்காற்றுடன் கனமழை

♈🇮🇳 🌴 தெற்கு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் வங்கியில் தீவிரவாதிகள் கொள்ளை

♈🇮🇳 🌴 வேலூர் அருகே டாஸ்மாக் கடை சூறை

♈🇮🇳 🌴 அவிநாசி அருகே தெரு நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு

♈🇮🇳 🌴 தமிழக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்: ஸ்டாலின்

♈🇮🇳 🌴 விவசாயிகள் தற்கொலை குறித்து திங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

♈🇮🇳 🌴 தமிழகத்தின் தேவைகளை மாநில அரசிடம் கேட்டு பெறாதது ஏன்: மு.க.ஸ்டாலின் கேள்வி

♈🇮🇳 🌴 தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை மைய இயக்குனர் பேட்டி

♈🇮🇳 🌴 உத்தரகண்டில் பதஞ்சலி ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

♈🇮🇳 🌴 சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கு வருமானவரித்துறை சம்மன்

♈🇮🇳 🌴 தினகரன் வழக்கை முன்வைத்து போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவுக்குள் வருமான வரி மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தலாம் என கூறப்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் ஜெயலலிதாவின் ஆவி நடமாடுவதாக ஒரு தகவலை சசிகலா கோஷ்டி பரப்பிவிடுகிறது.

♈🇮🇳 🌴 உள்ளாட்சி தேர்தலை முன்வைத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் அரங்கேற உள்ளது. மாவட்ட செயலாளர்கள் பலரையும் மாற்ற திட்டமிட்டுள்ளது திமுக

♈🇮🇳 🌴 திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கானலில் துவ‌ங்கியுள்ள‌ சீச‌னை முன்னிட்டு‌ 12 மைல் சுற்றுலா த‌ல‌ங்க‌ளுக்கு ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌த்தினரும் ப‌ய‌ன்பெறும் வ‌கையில் சுற்றுலா செல்ல‌, பெரிய‌வ‌ர்க‌ளுக்கு 100 ரூபாய் ம‌ற்றும் சிறிய‌வ‌ர்க‌ளுக்கு 50 ரூபாய் க‌ட்ட‌ண‌ம் விதித்து, காலை 10 ம‌ணி முத‌ல் மாலை 3 ம‌ணி வ‌ரை அர‌சு பேருந்து இய‌க்க‌ப்ப‌டுவ‌தாக‌ போக்குவ‌ர‌த்து க‌ழ‌க‌ம் அறிவிப்பு

♈🇮🇳 🌴 பழனி கோவிலில் துப்புறவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணை, கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் தாக்கியதால் பரபரப்பு. தாக்கப்பட்ட பெண்ணிடம், இணை ஆணையர் மன்னிப்பு கேட்க அனைத்து துப்புறவு தொழிலாளர்களும் பணிகளை புறக்கணித்து வலியுறுத்தல்

♈🇮🇳 🌴 இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி இ.சி.ஆர் சாலை யில் நாகபட்டினத்தை சேர்ந்த இளங்கோவன் (25) மாரியூரில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக தனது டூவிலரில் வந்து கொண்டிருந்த போது அவரது டூவிலர் நிலைதடுமாறி ஏர்வாடி போஸ்ட் ஆபிஸ் அருகில் உள்ள மின் கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினார். இந்த விபத்தை பற்றி ஏர்வாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

♈🇮🇳 🌴 குமரி தே.மு.தி.க செயலாளா் வழக்கறிஞா் ஜெகநாதனை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க ஆா்ப்பாட்டம்-ஆா்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ஜெயபிரபாகா் தலைமை வகித்தார் கூட்டத்தில் பேசிய மகளீரணி செயலாளா் பிரேமலதா….தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. தினம்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, குற்றவாளிகள் பயமின்றி ஹய் ஆ நடக்கிறார்கள்

♈🇮🇳 🌴 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவர்கள்களுக்கு ஆதரவாக மருத்துவ மானவர்கள் 300 மேற்பட்டேர் மருத்துவமனையில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

♈🇮🇳 🌴 விருத்தாசலத்தில் ரெயிலில் அடிபட்டு மான் பலி

♈🇮🇳 🌴 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் பணியிழந்த சுமார் 20,000 பணியார்களுக்கு நிரந்தர மாற்று அரசுப் பணியை தமிழக அரசும், நிர்வாகமும் அறிவிக்கும் வரை டாஸ்மாக் தலைமை அலுவகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. அனைவரையும் போலீசார் கைது செய்தனர்

♈🇮🇳 🌴 பயங்கரமான அணு ஆயுதங்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு கப்பலில் அனுப்பும் வட கொரியா

♈🇮🇳 🌴 புதிய விசா கொள்கையின் கீழ் விசா பெற்ற முதல் இந்தியருக்கு துபாயில் உற்சாக வரவேற்பு

♈🇮🇳 🌴 வயநாட்டில் 25 ஆண்டுகளில் அதிகமான ஆலங்கட்டி மழையானது பெய்து உள்ளது. இதனால் சாலைகள் சுமார் 12 மணி நேரங்கள் பனிகட்டிகளால் மூடப்பட்டு இருந்து உள்ளது

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

185total visits.