விஸ்வரூப செய்திகள் 3/5-4

0
11

♈🇮🇳 🌴 *5.30pm-3-5-2017-wednesday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றில், நூற்றுக்கணக்கான மருத்துவர்களுக்கு வன்முறையில் ஈடுபடும் நோயாளிகள் மற்றும் உறவினர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த மாதத்திலிருந்து தற்காப்புக்கலை வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.பாட வகுப்புகள் தற்காப்பு கலைகளில் சாம்பியன்களாக விளங்குபவர்களால் தலைநகர் தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக்கழக (எய்ம்ஸ்) மருத்துவமனையில் தினமும் சொல்லித்தரப்பட உள்ளது

♈🇮🇳 🌴 ஆதார் அட்டை கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை கட்டாயம் என்ற வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது

♈🇮🇳 🌴 மும்பையில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. வசந்த சம்பத் துபாரேவுக்கு மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் துபாரே மேல்முறையீடு செய்திருந்தார்

♈🇮🇳 🌴 திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலகத்தில் நேற்று 4 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் விவகாரத்தில் காவலாளிக்கு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய சம்பவத்திற்து காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி ஏழுமலை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

♈🇮🇳 🌴 சவுதி அரசின் பொது மன்னிப்பு திட்டம் மூலம் 20 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது

♈🇮🇳 🌴 உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் காஷ்மீரில் கட்டப்பட உள்ளது. இது பாரீசில் உள்ள ஈபிள் டவரை விடவும் உயரமானது ஆகும். ஈபிள் டவரின் உயரம் 324 மீட்டர்களாகும்

♈🇮🇳 🌴 கள்ளக்காதல் ஜோடி எரிக்கரையில் மர்ம மரணம்… கொலையா.. தற்கொலையா.. அந்தியூரில் பரபரப்பு

♈🇮🇳 🌴 மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர். மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி. முன்பெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள் கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும்.அதுபோல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும்.இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக? வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி. கர்ப்பிணிகள் தலையில் இருக்கும் வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது

♈🇮🇳 🌴 சுவீடனில் உள்ள லுண்டு பல்கலைக்கழகத்தின் எலியாஸ் கிறிஸ் டென்ஸ்சன் தலைமையிலான குழுவினர் அதிவேக ‘கேமரா’வை உருவாக்கியுள்ளனர். இந்த கேமரா மூலம் ஒளியின் பயணத்தை போட்டோ எடுக்க முடியும்.

இந்த கேமரா மூலம் ஒரு வினாடிக்கு 1 லட்சம் போட்டோக்கள் எடுக்க முடியும். ஒளியின் பயணத்தை போட்டோ எடுக்கும் போது அதில் இருந்து வெளியாகும் பல ஒளிகள் ஒன்றிணைந்து ஒரு போட்டோ ஆக வெளியாகிறது.விலங்குகளின் மூளை செயல்பாடு, குண்டு வெடிப்பு, வேதியியல் பொருட்களில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றையும் இக்கேமரா மூலம் போட்டோ எடுக்க முடியும் என நிபுணர் எளபாஸ் கிறிஸ்டென்சன் தெரிவித்தார்.

♈🇮🇳 🌴 அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.இரு தலைவர்களும் பேசும் போது மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து ஆலோசித்தனர். நீண்ட நாட்களாக உள் நாட்டு போரினால் சிரியா அவதிப்பட்டு வருகிறது. மக்கள் சொல்லெண்ணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே அந்த நாட்டில் நடைபெறும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனை குறித்தும் அதனால் ஏற்பட்டுள்ள கடும் ஆபத்து குறித்தும் இருவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.வருகிற ஜூலை மாதம் ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. அப்போது இருவரும் நேரில் சந்தித்து விரிவான பேச்சு வார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அவருடன் ரஷிய அதிபர் புதின் இதுவரை 3 தடவை டெலிபோனில் பேசியுள்ளார்

♈🇮🇳 🌴 வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூரில் இன்று புதியதாக திறக்கும் அரசு மதுபான கடையில் வைத்திருந்த 4 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அடித்தும் சூரையடிச் சென்றனர். மேலும் பாட்டில்களை தீயிட்டு சென்றுள்ளனர். இந்த சப்பவத்தில் சோளிங்கர் காவல்துறை 10 பேரை கைது செய்து விசாரணை

♈🇮🇳 🌴 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் எனப் பழைய 500, 1000 ரூபாய் மீதான தடை மற்றும் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்த காரணத்தால் தற்போது இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.வருவாய் துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய முக்கியக் கூட்டத்தில், கடந்த வருடத்தை விடச் சுமார் 22 சதவீதம் பேர் அதிகமாக வருமான வரியைத் தாக்கல் செய்துள்ளதாக வருவாய் துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பல முக்கிய நடவடிக்கைகளுக்குப் பின் தற்போது வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதத்திற்கு அதிகமான அளவை எட்டியுள்ளது. 2016ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 5.28 கோடி பேர் மின்னணு முறையில் வருமான வரியைத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் பல லட்சம் பேர் பேப்பர் வாயிலாக வருமான வரியைத் தாக்கல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்டோர் எண்ணிக்கை கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் சுமார் 22 சதவீதம் அதிகம்

♈🇮🇳 🌴 இந்தியாவில் 80 சதவீதம் பெண்களால் சானிடரி நாப்கின் வாங்க முடியாத நிலை. இதனால் மாதவிடாய் காலத்தில் சிறுமிகள் பள்ளிகளுக்கு செல்லாமல் அந்த 5 நாட்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். மாதவிடாய் காலத்திலும் சிறுமிகள் பள்ளிக்கு செல்ல உதவ முன்வந்துள்ளது அம்மடா அறக்கட்டளை. கிவ்ஹெர்5(GiveHer5) மூலம் சிறுமிகளுக்கு நாப்கின் வாங்க யார் வேண்டுமானாலும் உதவி செய்யலாம். நீங்கள் வெறும் ரூ.150 நன்கொடை அளித்தால் அதை வைத்து ஒரு சிறுமிக்கு மீண்டும் பயன்படுத்தப்படும் 2 சாப்கின்ஸ் கிடைக்கும். இந்த 2 சாப்கின்ஸ் ஓராண்டு வரை உழைக்கும். ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுவதற்கும் உதவ ரூ. 6 ஆயிரம் மட்டுமே தேவை. அனைத்து பெண்களாலும் காசு கொடுத்து நாப்கின் வாங்க முடியாது

♈🇮🇳 🌴 வருமானவரித்துறை சோதனையில் சிக்குகிறார் அதிமுக்கிய தலைவர்-விஜயபாஸ்கர் மனைவி ஐடி அதிகாரிகள் முன் ஆஜராகவில்லை

♈🇮🇳 🌴 மீனம்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல்-அடுத்தடுத்து 5 கார்கள், பைக்குகள் மோதியதில் 5 பேர் காயம்

♈🇮🇳 🌴 மும்பை டோங்கிரி பகுதியில் தீ விபத்து

♈🇮🇳 🌴 கூடங்குளம் அணு மின்நிலையத்தில ரூ.80 லட்சம் முறைகேடு

♈🇮🇳 🌴 கன்னியாகுமரி அருகே கடல் சீற்றத்தால் சாலை துண்டிப்பு: போக்குவரத்து பாதிப்பு

♈🇮🇳 🌴 ஈரோடு அருகே விஷம் வைத்து புலியை கொன்ற 4 பேர் கைது

♈🇮🇳 🌴 மருத்துவ மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு குறித்து அரசு செயலருடன் மருத்துவர்கள் ஆலோசனை

♈🇮🇳 🌴 அரசியல்வாதிகள் தான் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்; கல்வியாளர்கள் அல்ல: அனந்தகிருஷ்ணன்

♈🇮🇳 🌴 ஆசிய மல்யுத்த போட்டி: பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுப்பு

♈🇮🇳 🌴 மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

♈🇮🇳 🌴 வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 26 புள்ளிகள் சரிவு

♈🇮🇳 🌴 பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தியுள்ளது: வெளியுறவுத்துறை விளக்கம்

♈🇮🇳 🌴 ஆதார் அமைப்பு மூலம் எந்த தகவல்களும் கசியவில்லை: மத்திய அரசு மறுப்பு

♈🇮🇳 🌴 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்: மருத்துவ மாணவர்கள் அறிவிப்பு

♈🇮🇳 🌴 அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி: ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

♈🇮🇳 🌴 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்: மருத்துவர்கள் அறிவிப்பு

♈🇮🇳 🌴 கோடநாடு காவலாளி கொலை: கோர்ட்டில் 2 பேர் ஆஜர்

♈🇮🇳 🌴 டில்லி: நார்த் பிளாக்கில் திடீர் தீ விபத்து

♈🇮🇳 🌴 பாக்., ஆசிரியர், மாணவர்களை திருப்பி அனுப்பியது இந்தியா

♈🇮🇳 🌴 திருவள்ளூர் வீரராகவ சுவாமி கோயிலில் தர்சனோதயம்

♈🇮🇳 🌴 அனைவருக்கும் மலிவு விலையில் மின்சாரம் : பியூஸ் கோயல்

♈🇮🇳 🌴 உலக பத்திரிகை சுதந்திர தினம்: பிரதமர் வாழ்த்து

♈🇮🇳 🌴 சயான் உடல்நிலையில் முன்னேற்றம்: எஸ்.பி., தகவல் -சயானிடம் நீலகிரி எஸ்.பி., முரளி ரம்பா விசாரணை

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

144total visits.