விஸ்வரூப செய்திகள் 1/4-1

0
20

♈🇮🇳 🌴 *8.30am-1-4-2017news* 🌴🇮🇳♈🙏📡🙏📡 *vishwarubam news*

1] *சென்னை தேனாம்பேட்டையில் வேன் ஒன்று தீப்பற்றி எரிந்தது. வேன் தீப்பற்றி எரிவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது*

2] *வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

3] *சென்னை: மாமல்லபுரம் அருகே புலிகுகை என்ற இடத்தில் ஆண், பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் சோழிங்கநல்லூர் ஜான், கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஜெனிபர் என தெரிய வந்துள்ளது*

4] *மின்னணு பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதால் புதிய கரன்சி அச்சிடுவதை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது*

5] *பெட்ரோல், டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை ரூ.2.91 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன*

5] *புதுவண்ணாரப்பேட்டையில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள்; 3 பேர் கைது*

6] *மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்*

7] *’ஸ்மார்ட்’ கார்டு வழங்கல்; இன்று முதல் துவக்கம்*

8] *போலந்தில் இந்தியர் கொலை: விசாரணை நடத்த சுஷ்மா உத்தரவு*

9] *ம.பி., மாநிலத்தில் முஸ்லிம் மதரஸா கல்வி வாரியம் சார்பில் வெளியாகும் பாடத்திட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரின் வாழ்க்கை குறிப்புகள் இடம்பெற உள்ளன*

10] *நாட்டில் ராணுவத்திற்கு சொந்தமாக, 17.57 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது*

A] *தமிழக விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பதாக தமிழக அரசு ஒருபுறம் கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் இன்னொரு புறம் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட கூடாது என்று அடக்குமுறை செய்து இரட்டை வேடம் போடுவது வேதனை அளிக்கிறது.தமிழக மக்கள் இயக்கம்*

*ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம். ஆனால் மனிதப் பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது! – ரபிந்த்ரநாத் தாகூர்*

B] *9 ஆண்டுகளாக நுரையீரலில் கிடந்த பேனா: பரிதவித்த இளம்பெண்!*
c] *மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடை நிழல். ஸ்பெயினில் தோன்றிய யோசனை*

d] *மெட்ரோ ரயிலில் ஆணின் ஆணுறுப்பும் பெண்ணின் மார்பகங்களும்…அதிர்ச்சி தகவல்*

♈🇮🇳 🌴 ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் போட்டித் தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் மாணவர்களில், மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதைத் தடுக்க புதியதொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அபாய எச்சரிக்கை ஒலி மற்றும் சென்சார் கொண்ட கருவி பொருத்தப்பட்ட மின் விசிறி, 20 கிலோவுக்கு அதிகமான எடையை தாங்காது. இருபது கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட எவரும் மின் விசிறியை பிடித்துத் தொங்கினால், அது விரிந்து கீழே இறங்கிவிடும். இதுதான் அந்தத் தொழில்நுட்பம்.போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிப்பதற்கு பிரபலமாக விளங்கும் கோட்டா நகரத்தில், மன அழுத்தம் காரணமாக அதிகரித்து வரும் மாணவ தற்கொலைகளை சமாளிப்பதற்காக இந்த கருவி மேம்படுத்தப்பட்டுள்ளது

♈🇮🇳 🌴 உத்தரப்பிரதேச மாநிலம் முஜாஃபர் நகர் மாவட்டத்தில், கதெளலி பகுதியில் உறைவிடப் பள்ளி ஒன்றில் மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்ததும், மாவட்ட கல்வி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் சிங், சந்திரஜித் யாதவ்வின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் விடுதி கண்காணிப்பாளர் சுரேகா தோமரை இடைநீக்கம் செய்தார்.மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனையிட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இருந்தபோதிலும், சில ஆசிரியர்களின் சதியினால் தான் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக சுரேகா தோமர் கூறுகிறார்

♈🇮🇳 🌴 அம்மாக்கள் இல்லாத கிராமம்-பதின்மவயது எலி சுசியாவதி தன் தாயைப்பார்த்து ஆறு ஆண்டுகளாகின்றன.“அவருக்காக ஏங்கித்தவிக்கிறேன்; அனாதரவாக உணர்கிறேன்; அவரை நினைத்து பெரிதும் வருந்துகிறேன்”, என்கிறார் எலி சுசியாவதி.அவர் பெற்றோரிடையே மணமுறிவு ஏற்பட்டபின் அவரது தாயார் வேலைதேடி வெளிநாடு சென்றார்.பதினோறு வயது முதலே எலி பாட்டியால் வளர்க்கப்படுகிறார்.எலியின் தாயைப்போலவே அவர் வாழும் இந்தோனேஷிய கிராமத்தின் பெண்கள் பலர் வெளிநாட்டில் வேலைக்கு சென்றிருக்கிறார்கள்.அவர்கள் அனுப்பும் பணத்தை நம்பியே அவர்களின் குடும்பங்கள் வாழ்கின்றன

♈🇮🇳 🌴 சீனாவின் யானைத்தந்தச்சிற்பம் செதுக்கும் கலை பலநூற்றாண்டுகள் பழமையானது. ஆனால் அந்த சிற்பக்கலை செதுக்கி விற்கும் வர்த்தகத்தில் சரிபாதிக்கு இன்று சீன அரசு தடைவித்திருக்கிறது.மீதமுள்ள பாதி இந்த ஆண்டின் இறுதியில் தடுக்கப்படும். அடுத்த ஆண்டுமுதல் யானைத்தந்த வர்த்தகம் என்பது சீனாவில் முற்றாக தடை செய்யப்பட்ட நடவடிக்கையாக இருக்கும்

♈🇮🇳 🌴 பாகிஸ்தானில் தற்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்துவருகிறது.சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் கணக்கெடுப்பாளர்களும் இரண்டு லட்சம் பாதுகாவலர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர்.கணக்கெடுப்பாளர்களில் இருபதாயிரம் பேர் மட்டுமே பெண்கள்.அதிலும் கைபர் பஃதூன்கவா மற்றும் ஃபடா ஆகிய இரண்டு பிராந்தியங்களிள் பெண் கணக்கெடுப்பாளர்களே இல்லாமலிப்பதாக பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

♈🇮🇳 🌴 தாலிபான்களின் அச்சுறுத்தலையும் மீறி ஆண்கள் உடையணிந்து ஸ்குவாஷ் விளையாட்டில் சாதித்துள்ளார் மரியா தூர்பாக்கி.சிறு வயதில் ஆண்கள் உடையணிந்து வாழ்க்கையை முன்னெடுத்தார் மரியா

♈🇮🇳 🌴 ஜியோ இலவச சேவை அடுத்த மாதம் 15ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 🌴 பெங்களூருவை சேர்ந்த ரேணுகா (19) என்ற அந்த இளம்பெண் அடிக்கடி சளித்தொல்லை, இருமல் ஏற்படுவதாகவும், அவை மிகவும் துர்நாற்றம் வீசும் வகையில் இருப்பதாகவும் கூறி, பெங்களூருவில் உள்ள ராஜீவ் காந்தி மார்பக நோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு சென்றார். இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு அவதிபடுவதாகவும் தெரிகிறது. ரேணுகாவை பரிசோதித்த மருத்துவர்கள் திடுக்கிட்டனர். இதற்கு காரணம் நுரையீரலில் பேனா ஒன்றின் பாகங்கள் சிதைந்த நிலையில் உள்ளதை கண்டுபிடித்தனர். நீண்ட நாட்களாக இந்த பேனா நுரையீரலில் தங்கியதால் உள்ளுறுப்புகள் மிகவும் சிதைந்துபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பெண், சளித்தொல்லை, இருமலால் அடிக்கடி பாதிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, சளி வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவதற்கு இதுவே காரணம் என தெரியவந்தது. இதனால் மருத்துவர்கள் சிகிச்சை செய்து, அந்த பேனாவை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இவர்களது இந்த சாதனை தென்னிந்திய மருத்துவ வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது

♈🇮🇳 🌴 எனக்குச் சொந்த ஊர் சென்னை. மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்குச் சென்றேன். அங்கிருந்து பல நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ளேன். எங்குச் சென்றாலும் கேமராவும் கையுமாக, நல்ல காட்சிகளை சிறை பிடிப்பேன். அப்படித்தான் இந்த கலர் கலர் குடைகளின் புகைப்படத்தை எடுத்தேன் . ஸ்பெயினில் குடைகளைத் திருவிழா காலங்களில் இப்படிப் பயன்படுத்துவார்கள். நம் தமிழ்நாட்டிலும் இப்படிச் செய்தால் நன்றாக இருக்குமே என்று அப்போதே நினைத்தேன். தற்போதுதான் அந்த வாய்ப்பும் நேரமும் கிடைத்தது. மதுரை மாநகராட்சியின் உதவியோடு அமைத்தோம்.மதுரையில் தற்போது மரங்கள் குறைந்துகொண்டே செல்கிறது. சீமை கருவேல மரங்களை ஒழிப்பதில் அரசு தீவிரமாக உள்ளது. நாம் மரங்களை வளர்ப்பது தொடர்பாக ஏதாவது விழிப்புணர்வு செய்யலாமே என்று தோன்றியது. மீனாட்சி அம்மன் கோயில் கார் பார்க்கிங் பகுதியில் இந்தக் குடைப் பந்தலை அமைத்திருக்கிறோம். யானைப் பசிக்கு சோளப்பொறியா என்ற எண்ணம் பலருக்கும் தோன்றும். அங்கே முழுமையான நிழல் கிடைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.முழுமையான நிழலைக் கொடுக்க பல மரங்களை நடவேண்டும் என்ற ஆர்வத்தை மறைமுகமாகத் தூண்டவே இந்த ஏற்பாடு. எல்லா இடங்களிலும் குடைகளால் பந்தல் போட முடியாது. ஆனால், மரங்களை உருவாக்கி நிரந்தர நிழலுக்கு வழி செய்யலாம். விளம்பரம் இருந்தால்தான் எந்த விஷயத்தையும் வெற்றியாக்க முடியும். இன்னும் சில நாட்களில், மரங்கள் வளர்ப்பது தொடர்பான வாசகங்களும் நிழற்குடைகளின் அருகே வைக்கப்போகிறோம். இதுபோன்று இன்னும் சில யோசனைகளை மதுரை மாநகராட்சியிடம் கொடுத்துள்ளேன். அவர்களின் உதவியோடும் பொதுமக்களின் ஒத்துழைப்போடும் பல நல்ல விஷயங்களைச் செய்வேன்” என்று புன்னகையுடன் சொல்கிறார் அபர்ணா ராவ்

♈🇮🇳 🌴 நடிகர், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் மனைவியும், இயக்குனருமான கிருத்திகா உதயநிதி இயக்கிய ‘வணக்கம் சென்னை’ திரைப்படம் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவரது இரண்டாவது படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளிவந்தது. தற்போது இந்த படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதோடு, படத்தின் டைட்டிலும் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்” நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு “காளி” எனவும் பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 1980ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த படம் ஒன்றுக்கு இதே டைட்டில் வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. காளி படம் குறித்த அதிகாரபூர்வ விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது

♈🇮🇳 🌴 மெக்சிகோ மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகமாக நடந்து வருவதால், ரயில் பயணிகளுக்கு இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ரயில் இருக்கைகளில் ஆணுறுப்பு, மார்பகங்கள் உள்பட பல்வேறு டிசைனில் அமைக்கப்பட்டுள்ளன. ஆணுறுப்பு, மார்பகங்கள், இடுப்பு, கால்களின் தொடை ஆகிய டிசைன்களில் அமைந்த இருக்கையில் உட்காருவது எப்படி சங்கடத்தை ஏற்படுத்துகிறதோ அதே சங்கடங்கள் தான் தினந்தோறும் பெண்கள் சந்திக்கும் பாலியல் சீண்டல்கள் என்று ஒப்பிட்டுப் பார்த்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்த்னர்.இந்த வகை இருக்கைகளில் அமர்வதை ஆண்களும், பெண்களூம் தவிர்த்து வருவதாகவும்ம், இந்த இருக்கைகளின் வடிவமைப்புகளுக்கு பின்னர் மெக்சிகோ மெட்ரோ ரயிலில் பாலியல் சீண்டகளின் நிகழ்வுகள் குறைந்திருப்பதாகவும், அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்

♈🇮🇳 🌴 இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 18 நாட்களாக தமிழக விவசாயிகள் போராடி வரும் நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தற்போது மாணவர்கள் களமிறங்கியுள்ளனர். நேற்று சென்னை மெரீனாவில் கடலில் இறங்கி போராட முயன்ற மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கடலூரில் போராட்டத்திற்கு வருமாறு ஃபேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்த 21 மாணவர்கள் அதிரடியாக காவல்துறையினர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர்

♈🇮🇳 🌴 டோரா படத்தின் வெளியீட்டை கொண்டாட நயன்தாராவுக்கு அவரது ரசிகர்கள் 6 அடி உயரத்துக்கு கட் அவுட் வைத்து அசதியுள்ளனர். நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள டோரா திரைப்படம் இன்று வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக 6 அடி கட் அவுட் வைக்கப்பட்ட முதல் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் நயன்தாரா.ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி கதாநாயகர்களுக்கு வைக்கப்படும் பிரம்மாண்ட கட் அவுட் போன்று நயன்தாராவுக்கும் வைக்கப்பட்டுள்ளது.இந்த கட் அவுட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

139total visits.