விஸ்வரூப செய்திகள் 18/4-1

0
23

♈🇮🇳 🌴 *12.30pm-18-4-2017-day-news* 🌴🇮🇳♈ *vishwarubam news*
♈🇮🇳 🌴 நிலத்தடி நீரில் கழிவுநீர் கலப்பினால் நோய்தாக்குதலில் குழந்தைகள் பெரியவர்கள் அவதி –ராயபுரம் –சென்னை – ராயபுரம் ஆதம் சாகிப் தெருவில் எண் 15 மற்றும் அருகாமை விடுகளில் நிலத்தடி நீரில் கழிவுநீர் கலந்து வருவத்தால் அதை வீட்டு உபயோகத்திற்கு பயன்டுத்தியதால் பெரியவர்கள் சிறியவர்கள் பலரும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக எஸ் எஸ் பாண்டியன் என்பவர் தெரிவித்தார். பாதாள சாக்கடையில் கழிவுநீர் தேங்கி உறி அருகில் உள்ள போர்களில் கசிந்து வருவதால் நிலத்தடிநீர்ல் கலந்து வருகிறதாம் .மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்

♈🇮🇳 🌴 இன்று காலை ராயபுரம் தொகுதி கப்பல் போலு தெருவில் ப்ரியா மருத்துவமனை அருகில் உள்ள மின் பகிர்மான பெட்டி திடிரென தீப்பிடித்து எரிந்தது. அச்சமயம் அருகில் இருந்த யுவராணி ஏலக்ட்ரிகல்ஸ் உரிமையாளர் பொன்னுதுரை ஓடி சென்று பெட்டியை துணிச்சலாக திறந்து மண்ணை அள்ளிப் போட்டு தீ எரிவதை அணைத்தார்

♈🇮🇳 🌴 சென்னை மணலி காவல்நிலையத்தில் நேற்று காலில் காரை ஏற்றிவிட்டு சென்ற ஒருவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பிரச்னையை திசை திருப்பி ஒருசிலர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்ததாக தகவல்

♈🇮🇳 🌴 முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விவசாய சங்க கூட்டமைப்பு பிரநிதிகள் சந்தித்து பேசி வருகின்றனர். சந்திப்பின் போது வறட்சி நிவாரணம், உயிரிழந்த விவாசாயி குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை தலைமைச்செயலகத்தில் விவசாயிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் பல்வேறு மாவட்ட விவசாய சங்க பிரநிதிகள் பங்கேற்றுள்ளனர்

♈🇮🇳 🌴 தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய விவகாரத்தில் மத்திய அரசு இன்றைக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் போட்டியிட தடை வேண்டும் என வழக்கறிஞர் அஸ்வினி உபத்யாய் பொதுநல வழக்கு தொடர்ந்தார். ஜூலை 12 ம் தேதிக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்

♈🇮🇳 🌴 சென்னையில் மதுக்கடையை மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டார். தமிழிசையுடன் பாஜக தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் மதுக்கடையை மூடும் வரை போராட்டம் தொடரும் என தமிழிசை தெரிவித்தார்.

♈🇮🇳 🌴 மதுரை அருகே பொய்கைக்கரைப்பட்டியில் திறக்கப்பட்ட மதுக்கடைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மதுக்கடையை மாணவர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்

♈🇮🇳 🌴 மதுரை அருகே பொய்கைக்கரைப்பட்டியில் திறக்கப்பட்ட மதுக்கடைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மதுக்கடையை மாணவர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்

♈🇮🇳 🌴 மே 14ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு தோறும் வார விடுமுறை விட பங்க் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இன்று நடந்த தமிழ்நாடு பெட்ரோல், டீசல் டீலர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 🌴 இரு அணிகள் இணைவதை டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தின்கரனுடன் ஆலோசனை நடத்திய பின் பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என முதல்வர் கூறியதாக செங்கோட்டையன் கூறியுள்ளார்.

♈🇮🇳 🌴 வேலூரில் வெயில் 110 டிகிரியை தாண்டியது. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வேலூரில் வெயில் 110 டிகிரியை தாண்டியுள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாகும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என வானிலை ஆய்வு மையம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகம் எங்கும் வெயில் வாட்டிவதைக்கின்றது. இதனை அடுத்த திருவள்ளூரில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது

♈🇮🇳 🌴 முன்னாள் டிஐஜி கண்ணனுக்கு பதவி உயர்வு அளிக்காதது தொடர்பான விசாரணையில் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் பதவி உயர்வு அளிக்காததால் முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆஜராக நீதிபதிகள் சசிதரன், முரளிதரன் அமர்வு உத்தரவிட்டனர்

♈🇮🇳 🌴 அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர் பிரதமர் மோடியை டெல்லியில் லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து பேசினார். வெளியுறவு செயலர் எஸ்.ஜெய்ஷங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர்.

♈🇮🇳 🌴 திருவள்ளூர் அருகே அதிகத்தூரில் வழக்கறிஞரும் முன்னாள் கவுன்சிலருமான வேலாயுதம் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து மணவாள நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

♈🇮🇳 🌴 நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தந்தை பெரியார் கழகம், இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என போராட்டம் நடத்தியவர்கள் வலியுறுத்தினர்

♈🇮🇳 🌴 இரட்டை இலைக்காக லஞ்சம்: சுகேசிடம் போலீசார் விசாரணை

♈🇮🇳 🌴 சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு

♈🇮🇳 🌴 சென்னையில் 165 சவரன் நகை கொள்ளை

♈🇮🇳 🌴 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தமிழக விவசாயிகளின் வங்கி கடன் ரூ.6.139.74 கோடி

♈🇮🇳 🌴 இந்திய பங்குச்சந்தைகள் அதிக உயர்வுடன் இருந்த போதிலும், ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது-இந்திய பங்குச்சந்தைகள் அதிக எழுச்சியுடன் காணப்படுகின்றன. ரூபாயின் மதிப்பு சற்று சரிந்தபோதிலும் நாட்டின் முன்னணி நிறுவன பங்குகள் அதிகளவில் உயர்வுடன் காணப்படுவதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் காணப்படுகின்றன. காலை 10.30 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 273.13 புள்ளிகள் உயர்ந்து 29,686.79-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 76.95 புள்ளிகள் உயர்ந்து 9,216.25-ஆகவும் வர்த்தகமானது

♈🇮🇳 🌴 அதிமுக சசி அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் சென்னை வந்துள்ள ஐ.என்.எஸ்., சென்னை போர்க்கப்பலில் பயணம் செய்கின்றனர். இந்த கப்பலை பார்வையிட வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இந்த கப்பலில் செல்லும் போது தற்போது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது

♈🇮🇳 🌴 அமெரிக்காவில் பேஸ்புக் நேரலையில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Ohio பகுதியில் Easter தினமான நேற்று Robert Goodwin(74) என்பவரை Stevie Steve என்பவர் பேஸ்புக் நேரலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். இதனால் அவர் இரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலே துடிதுடித்து இறந்தார்.Stevie Steve அந்த நேரலையில் தன்னுடைய தாக்குதல் தொடரும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

♈🇮🇳 🌴 அமெரிக்காவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், திருமணத்துக்கு பிறகு தாங்கள் இரட்டையர்கள் என்னும் தகவல் அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் பிரபல குழந்தை மகப்பேறு மருத்துவர் ஜாக்சன் என்பவரிடம் ஒரு காதல் தம்பதி குழந்தை பேறு சிகிச்சைக்காக வந்துள்ளனர்.ஜாக்சன் அவர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்துள்ளார். அவர்களின் டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் ஜாக்சனை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த காதல் தம்பதி இரட்டையர்கள் அதாவது ஒன்றாக பிறந்தவர்கள் என்பது டி.என்.ஏ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது

♈🇮🇳 🌴 பிரித்தானியாவில் ஆறு மாத குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு 40 நிமிடங்கள் செயலிழந்த இதயம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. பிரித்தானியாவின் Liverpool நகரை சேர்ந்தவர் Ged Thompson. இவரின் மகன் Buddy Thompson (6). Buddy ஆறு மாத குழந்தையாக இருந்த போது அவனுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அவன் இதயம் 40 நிமிடங்களுக்கு நின்று விட்டது. மருத்துவர்கள் எவ்வளோ முயன்றும் Buddyன் இதயத்தை செயல்படுத்த வைக்க முடியவில்லை. அவன் நாடி துடிப்பும் நின்றிருந்தது, கடைசியாக ஒரு முறை செவிலியர் Buddyன் நாடியை பிடித்து பார்த்த போது அது லேசாக துடிப்பது தெரிந்தது

♈🇮🇳 🌴 ஆய்வகம் ஒன்றில் தேடுதல் வேட்டை நடத்திய ஆஸ்திரேலிய காவல்துறையினர், கிலோ கணக்கான போதைப்பொருட்களையும், போதை மருந்து தயாரிக்கும் கருவியையும், பணக்கட்டுகளையும் கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.அந்த தேடுதல் வேட்டை இன்னொன்றையும் வெளிப்படுத்தியது. அதுதான் போதை மருந்துக்கு அடிமையான அறிகுறிகளுடன் காணப்பட்ட 6 அடி நீளமுடைய மலைப்பாம்பு. .இந்த பாம்பு அதனுடைய தோல் வழியாக போதை மருந்து பொடிகளை உள்ளிழுத்து மயங்கியிருந்தது வெளிப்படையாக தெரிந்தது

♈🇮🇳 🌴 கஜினி திரைப்படத்தில் நடிகர் சூர்யா உடனே எல்லா விடயங்களையும் மறந்து விடுவது போல நிஜத்தில் ஒரு இளைஞர் அப்படி வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.தைவான் நாட்டை சேர்ந்தவர் Chen Hongzhi (25) இவருக்கு 17 வயது இருக்கும் போது இவர் ஒரு வாகன விபத்தில் சிக்கியுள்ளார்.அதில் Chenன் தலையில் பலத்த அடிப்பட்டதையடுத்து அவர் பல நாட்கள் படுக்கையிலேயே இருந்துள்ளார். Chenன் உடல் நிலை பின்னர் சரியானாலும், தலையில் அடிப்பட்டு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதால் தன் ஞாபக சக்தியை அவர் இழந்தார்.அதன் பின்னர் எந்தவொரு விடயத்தையும் 5 நிமிடங்களுக்கு மேல் அவரால் நினைவில் வைத்து கொள்ள முடியாது.Chen தனது தாய் Wang Miao-chiong (60) உடன் வாழ்ந்து வருகிறார். தான் பார்ப்பவர்களின் பெயர்கள், விபரங்கள் போன்றவற்றை அவர் ஒரு நோட் புக்கில் எழுதி வைத்து கொள்கிறார்.தினமும் Chen காலையில் எழுந்திருக்கும் போது தன்னையே மறந்து விடுகிறார். பின்னர் அவர் தாய் தான் அவரிடம் உண்மையை புரிய வைக்கிறார்.இவ்வளவு பிரச்சனையிலும் Chen தன்னால் முடிந்த வேலைகளை செய்து வீட்டுக்கு வருமானம் கொடுத்து வருகிறார்

♈🇮🇳 🌴 பாம்புகள், உடும்புகள் போன்ற விஷ ஊர்வனங்களுடன் விளையாடும் 2 வயது குழந்தையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் Brooke Harrison. இவர் மனைவி Tony இவர்களின் மகன் Jenson Harrison (2)Brookeம், Tonyம் பாம்புகள் பிடிப்பதையே தொழிலாக செய்து வருகிறார்கள். இவர்கள் வீட்டில் மட்டும் 300க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்க்கிறார்கள். இவர்களின் மகன் Brooke மற்ற குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடுவது போல இவன் பாம்புகளுடன் தைரியாக விளையாடுகிறான்.பாம்புகள் மட்டுமில்லாமல் பல்லி, உடும்பு போன்ற உயிரினங்களுடன் Jenson சந்தோஷமாக விளையாடுகிறான். இது குறித்து Jensonன் பெற்றோர் கூறுகையில், எங்கள் மகன் பிறந்த 24 மணி நேரத்துக்குள்ளேயே அவன் பாம்புகளை சுற்றி தான் இருந்தான்.தினமும் அவனை சூழ்ந்து பாம்புகள் தான் உள்ளன.Jenson விஷமில்லாத உயிரினங்களிடம் மட்டுமே விளையாடும் படி நாங்கள் பார்த்து கொள்கிறோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்

♈🇮🇳 🌴 இத்தாலி நாட்டைச் சேர்ந்த மிக வயதான மூதாட்டி என்று கருதப்படும் எம்மா மோரானோ மரணமடைந்துள்ளார்

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

204total visits.