விஸ்வரூப செய்திகள் 18/4-2

0
15

♈ *7pm-18-4-2017-tuesday-news* ♈ *vishwarubam news*

♈ திருநெல்வேலி: ஒரே கிராமத்தில் 3 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்டோர் வெவ்வேறு புற்றுநோய்களால் இறந்துள்ளதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது

♈ இங்கிலாந்தில் முன்கூட்டியே பொதுத்தேர்தல்: பிரதமர் அறிவிப்பு

♈ இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2017-ல் 7.2 சதவீதம் : ஐ.எம்.எப்

♈ உ.பி.,யில் 41 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

♈ இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னிலையில் உள்ளது என கவர்னர் வித்யாசாகர்ராவ் கூறியுள்ளார்
உத்தரபிரதேச மாநில அமைச்சர்கள் சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளார்

♈ சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி கோடைகால சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.இதன் படி மே மாதம் 10,17, 24,31 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்பட உள்ளது அதே போல் திருச்சியில் இருந்து சென்னைக்கு மே மாதம் 6,13,20 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்இயக்கப்படுகிறது. திருநெல்வேலி -காந்திதாம் இடையே மே மாதம் 4,11,18,25 ஆகிய தேதிகளில் காலை 7.45 மணிக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்த சந்திரகாசிக்கு மே மாதம் 3,10,17,24,31 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. எர்ணாகுளம்-மும்பை இடையே மே மாதம் , 10,17,24,31 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. என தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

♈ தமிழக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: வெப்பக்காற்று வீசுவதால், வரும் ஏப்ரல் 21ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்க பள்ளி தேர்வுகளை மாற்றியமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஏப்ரல் 21 முதல் 29ம் தேதி முதல் நடைபெற உள்ள தேர்வுகள் வேறு தேதியில் நடத்தப்படும். வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், தனியார் பள்ளிகள் சிறப்பு பயிற்சி வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

♈ முல்லைப்பெரியாறு தமிழக எல்லை பகுதியில் உள்ள வேலிகளை அகற்ற வேண்டும் என்று கேரளா வனத்துறைக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை மே 3 ம் தேதிக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்தது

♈ அசாமில் பாஸ்கா என்ற மாவட்டத்தில் 12 கையெறி குண்டுகள் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

♈ இரட்டை இலை சின்னத்தை மீட்பதே எங்களது குறிக்கோள் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். அதற்காகத்தான் இரு அணிகளும் பேச்சுவார்த்தை வார்த்தை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்

♈ பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்

♈ தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநர் நியமிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் விளக்கத்தை ஏற்று தலைமை நீதிபதிகள் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்தனர். தமிழக ஆளுநர் வித்யாசாகர் நியமனம் கூடுதல் பொறுப்பு கிடையாது என மத்திய அரசு வாதிட்டது. மேலும் ஒன்று மேற்பட்ட மாநிலங்களை கவனிக்க அரசியலமைப்பில் வழிவகை உள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

♈ வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொதிகலன் பழுதுகாரணமாக 810மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு அலகுகளில் ஏற்பட்ட பழுதுகாரணமாக மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

♈ பத்திரிகையாளர்கள் மீது பார் உரிமையாள்ரகள் தாக்குதல்: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் புதிய டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் என்று செய்தி வெளியிட்ட தினகரன், தினமலர் நிருபர்கள் தாக்கப்பட்டனர். அவர்களது ஸ்டுடியோ கடை சூறையாடப்பட்டது. பைக் உடைக்கப்பட்டன. பார் உரிமையாளர் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூவின் தீவிர ஆதரவாளர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பு

♈ very…. useful

Congratulations

Vishwarubam Bro

Long time social service

♈ An Appeal
Parents from private schools
CBSE/ Matrix etc or any other persons who are interested in dealing education issues may pl.give their names and mobile No’s.
Either to Mr. Nanjil Krishnan or me ( Killivalavan mobile no 9444167795 ). We have formed All India Parents Forum for Education and the.issues are being taken up. State / All India Level.

State convention at Chennai Is to be held shortly.

With regards

Killivalavan
Chennai
9444167795

♈ தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் சதத்தை எட்டியுள்ளது. வேலூர்-110, சென்னை-108, நெல்லை, திருச்சி, மதுரை-107, தஞ்சை-106, கரூர், தருமபுரி, சேலம்-105, புதுச்சேரி-103, கடலூர்-102 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது

♈ நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கைதி காளிதாஸ் என்பவர் தப்பி ஓடினார். வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்த நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட கைதி காளிதாஸ் தப்பி ஓடினார். இதனை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

♈ சென்னை மாநிலக் கல்லூரியின் 175வது நிறைவு விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றுள்ளார். 175வது ஆண்டு நிறைவு விழா வளைவுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டி உரையாற்றினார்

♈ நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபூர்வ வர்மா ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. தொடர்ந்த வழக்கில் அபூர்வ வர்மா ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 வாரத்துக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2014ல் டி.ஐ.ஜி. கண்ணனுக்கு சிறை அதிகாரி பதவி உயர்வுக்கு பரிசீலிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது

♈ திருப்பூரில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாமாளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்கள் மீதுதாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

♈ நேபாள அதிபர் பித்யா தேவி பந்தாரி அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்

♈ ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கோவிந்தன் என்பவர் 14ம் தேதி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லபட்டார். கொல்லப்பட்ட கோவிந்தன் மனைவி சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை உள்துறை செயலாளருக்கு பதில் தர உத்தரவிட்டுள்ளது

♈ *vishwarubam* ♈

159total visits.