விஸ்வரூப செய்திகள் 24/3-1

0
42

♈🇮🇳 🌴 *5am-24-3-2017news* 🌴🇮🇳♈🙏📡🙏📡 *vishwarubam news*

*விழிப்புணர்வு வாசகம்-குடி குடியை கெடுக்கும்-புகை, இலை உயிரை எடுக்கும்-திருத்தி கொள்ள நினைப்பவர்கள் திருந்தலாம்.அவரவர் விருப்பம் –பாதிப்பு அவருக்குதான்.வளரும் இளம் சமுதாயம் வாழ்க்கையில் உயர இந்த போதை வஸ்துக்களை தொடாமல் தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும்- விஸ்வரூபம்*
Advice- very very pricelest and easiest way to everyone. Thank u🙏

♈🇮🇳 🌴 *ரிசர்வ் வங்கி கவர்னருக்கு பார்லி., நிலைக்குழு சம்மன். நிலைக்குழுவின் தலைவரும், காங்கிரசை சேர்ந்தவருமான, முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதாவது: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு? செல்லாத ரூபாய் நோட்டுக்கு மாற்றாக, புதிதாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு? என்பது உட்பட, பல விளக்கங்களை கேட்க வேண்டியுள்ளது. இதற்காக, ஏப்ரல் 20ல், பார்லி., நிலைக்குழு முன் ஆஜராக, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு, சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்*

♈🇮🇳 🌴 *உ.பி.,யில் சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதில் மெத்தன போக்கை கடைபிடித்த 100 போலீசார் அதிரடி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.உ.பி., முதல்வராக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யாநாத் நேற்று(23ம்தேதி) லக்னோவில் உள்ள போலீ்ஸ் ஸ்டேஷனுக்கு சென்று தீடீரென ஆய்வு நடத்தினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் உ.பி., மாநில டி.ஜி.பி., ஜாவீத் அகமது சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதில் மெத்தன போக்கை கடைபிடித்ததாக கூறி 100 போலீசாரை சஸ்பென்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். இது பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது*

♈🇮🇳 🌴 *திருச்சி : மணப்பாறை நகராட்சி பெண் கமிஷனர், வீடு வீடாக சென்று வரி வசூலித்து வருகிறார்.திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி கமிஷனராக இருப்பவர், பாப்பம்மாள். நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால், ஒரு மாதமாக, நிலுவை வரிகளை கட்டும்படி, மணப்பாறை நகரம் முழுவதும் அறிவிப்பு செய்யப்பட்டது*

♈🇮🇳 🌴 *கார்ப்பரேட் நிறுவனங்கள், கடந்த மூன்று நிதியாண்டுகளில் ஈட்டிய, சராசரி நிகர லாபத்தில், 7.5 சதவீதம் வரை, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். இந்த வரம்பு, புதிய சட்டத்திருத்த மசோதாவில் நீக்கப்பட்டு உள்ளது. இனி, கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு தாராளமாக நன்கொடை வழங்கலாம். எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விபரத்தை, நிறுவனங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளவும், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது*

♈🇮🇳 🌴 *உண்மையா கண்டு பிடிக்க முடியுமா-அல்லது ரயிலில் பணமா கொள்ளை போச்சே அது மாதிரி இருக்குமா-காரைக்கால்-நாகூர் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் மார்க் தனியார் துறைமுகம் அருகே 20 செமீ அகலத்துக்கு துண்டாக உடைந்து இருந்தது. நேற்று அதிகாலை அவ்வழியாக வேளாங்கண்ணி-காரைக்கால், சென்ைன-காரைக்கால் பயணிகள் ரயில்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன.தண்டவாளம் உடைந்து இருப்பதை இன்ஜின் டிரைவர்கள் பார்த்ததால் அந்த இடத்திலேயே ரயில்களை நிறுத்தி விட்டனர். இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில்வே ஊழியர்களும், அதிகாரிகளும் விரைந்து வந்து தண்டவாளத்தை சரி செய்தனர். தண்டவாளம் உடைந்ததற்கு சதிச்செயல் காரணமா? அல்லது பழுதடைந்து இருந்ததா என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்*

♈🇮🇳 🌴 *தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை திருவொற்றியூர் – எண்ணூர் இடையே அமைக்கப்பட்டுள்ள 4வது ரயில்பாதையில் பெங்களூரில் இருந்து வரும் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மார்ச் 25ம் தேதி சனிக்கிழமை ஆய்வு செய்ய உள்ளார். மேலும் திருவொற்றியூர் – எண்ணூர் ரயில்நிலையங்களுக்கு இடையில் 4வது ரயில்பாதையில் மார்ச் 25ம் தேதி பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை அதிவேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்துகிறார். எனவே இந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் ரயில்பாதையை கடக்க வேண்டாம், ்ரயில்பாதை அருகிலேயே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்*

♈🇮🇳 🌴 *லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் நபர், காலித் மசூத் என்பவர் என்று போலீசார் அடையாளம் தெரிவித்துள்ளனர்*

♈🇮🇳 🌴 *தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86*

♈🇮🇳 🌴 *இலங்கையில் போருக்குப் பிறகு நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டு காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது*
♈🇮🇳 🌴 *கோவை மாவட்டம் கோவனூர் கிராமத்தில், பயன்படுத்தப்படாத 40 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த 10 வயது யானை, வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரால் 30 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது*

♈🇮🇳 🌴 *வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் போன்ற எவையும் இல்லாமல் தனி ஆளாகவே அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதிகள் மாற்றமடைந்து வரும் பின்னணியில், புலனாய்வு அமைப்புகளால் இவர்களால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க முடியுமா என்கிற விவாதம், லண்டன் தாக்குதலைத்தொடர்ந்து மீண்டும் சூடுபிடித்துள்ளது.பிரிட்டனில் 2013 ஆம் ஆண்டு முதல் இதுவரை 13 பயங்கரவாத தாக்குதல்கள் தடுக்கப்பட்டிருப்பதாக பிரிட்டன் பாதுகாப்புப் படையினர் கூறுகிறார்கள்.இத்தகைய தாக்குதல்களுக்கு திட்டமிடுபவர்களை கண்டுபிடிப்பதில் எம்ஐ5 அமைப்பும், காவல்துறையும் பெருமளவு முன்னேறியிருந்தாலும் தாக்குதலாளிகள் தங்களின் வழிமுறைகளை தொடர்ந்து மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். சர்வதேச புலனாய்வாளர்கள் கண்டுபிடிக்க முடியாத வகையில் அவர்கள் தமது தாக்குதல்களை வடிவமைக்கிறார்கள்*
♈🇮🇳 🌴 *பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 8ம் தேதி தொடங்கியது. மொழிப்பாடத் தேர்வுகள், கணக்குப் பாடத் தேர்வு முடிந்துள்ள நிலையில் நேற்று அறிவியல் பாடத் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 10 லட்சத்து 38 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில் பள்ளி மாணவர்கள் 9 லட்சத்து 94 ஆயிரத்து 198 பேர். தனித் தேர்வர்கள் 43 ஆயிரத்து 824 பேர் ஆவர். இந்நிலையில், நேற்று பறக்கும் படையை சேர்ந்த 4 ஆயிரம் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பிட் அடித்ததாக 3 பேர் சிக்கினர். அதில் நாமக்கல் மாவட்டம் 2, கடலூர் மாவட்டம் 1 மாணவர் அடங்குவர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கல்வி அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்*

♈🇮🇳 🌴 *பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு*
♈🇮🇳 🌴 *புதுச்சேரியில் பொறியாளர் முத்துக்கிருஷ்ணன் வீட்டில் 110 சவரன் நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குறிஞ்சி நகரில் வசிக்கும் முத்துக்கிருஷ்ணன் சென்னைக்கு சென்ற நிலையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து லாசுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறது*

♈🇮🇳 🌴 *விருதுநகர்: சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் 300 கட்டு பட்டாசு கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பட்டாசு கருந்திரிகளை கடத்தியதாக வைரபிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டு வேன் பறிமுதல் செய்யப்பட்டது*

♈🇮🇳 🌴 *அசோக மித்திரனின் எழுத்து அவர் காலம் கடந்தும் வாழும்: கமல்*

♈🇮🇳 🌴 *எச்.1.பி., விசா குறித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் கவலைப்பட தேவையில்லை என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் ராஜ்யசபாவில் பேசிய போது: ‛‛ 1990ம் ஆண்வு எச்.1பி., விசா அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்டிற்கு 65,000 பேருக்கான விசா அனுமதி அளித்திருந்தது. 2000 மாவது ஆண்டில் அது 1,95,000 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 2004ம் ஆண்டில் மீண்டும் 65,000 ஆக குறைக்கப்பட்டது. இப்படி அமெரிக்க இரட்டை மன நிலை எடுத்து வருகிறது.மேலும் சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு குடிபுகுந்ததாக 271 பேரின் பட்டியலை அளித்துள்ளது. அந்த 271 பேரின் கூடுதல் தகவல்களை கேட்டுள்ளோம், அவர்கள் உண்மையான இந்தியர்கள் தானா என்ற விசாரணைக்கு பின்பு அவர்கள் இந்தியா வருவதற்காக ஆவணங்கள் அனுப்பி வைக்கப்படும், அவர்கள் அமெரிக்கா சிறைக்கு செல்வதை இந்தியா விரும்பவில்லை,அமெரிக்காவில் ஐ.டி.,துறை பணியில் இருக்கும் இந்தியர்களின் பணி பாதுகாப்பானதாக இருக்கும். அமெரிக்க அரசில் எச்.1.பி., விசா தடை குறித்த 4 மசோதாக்கள் உள்ளன. இந்த மசோதாக்கள் நிறைவேறாமல் இருக்க இந்தியா சார்பில் எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். எச்.1.பி., விசா குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை ” இவ்வாறு கூறினார்*

♈🇮🇳 🌴 *பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை உயர்த்தியதற்கு அனுமதி அளித்து, சட்டசபையில், நேற்று, சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது*

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

222total visits.