விஸ்வரூப செய்திகள் 7/4-3

0
22

♈🇮🇳 🌴 *2.30pm-7-4-2017news* 🌴🇮🇳♈🙏📡🙏📡 *vishwarubam news*
-தமிழ்னாட்டுல ஒரே ஒரு கட்சி தலைவர் எது சொன்னாலும் சிரிப்பு, சிரிப்பா வருதுங்க-

♈🇮🇳 டில்லியில் விமானங்கள் மோதல் தவிர்ப்பு

♈🇮🇳 ஆர்.கே.,நகர் தேர்தலை தள்ளிவைக்க கோரும் வழக்கு 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

♈🇮🇳 சிவசேனா எம்.பி., கெயிக்வாட் டிக்கெட்டை ரத்து செய்தது ஏர் இந்தியா

♈🇮🇳 பசு பாதுகாவலர்களுக்கு தடை பா.ஜனதா ஆளும் மாநிலங்கள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

♈🇮🇳 உத்தரகாண்ட் பள்ளியில் ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம் பா.ஜனதா அரசு உத்தரவு

♈🇮🇳 சுடும் கோடை வெப்பத்திற்கு வேலூர் மாவட்டத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.தாகம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும். லேசான ஆடைகள், வெளிரிய ஆடைகள், உடலை இறுக்கி பிடிக்காத, தளர்வான முழு கை ஆடைகள், நூல் துணி பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வீட்டில் செய்யப்பட்ட லஸ்ஸி, சாத நீர், எலுமிச்சை சாறு, மோர், ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல், உப்பு கலந்த கஞ்சி, பழ ரசங்கள் ஆகியவை பருக வேண்டும். இளநீர், நொங்கு, தர்பூசணி, மோர் அதிகமாக உட்கொள்ள வேண்டும். வெளியில் பயணம் மேற்கொள்ளும்போது உடன் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்.கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டி வைத்து அதற்கு தேவையான குடிநீர் மற்றும் தீவனம் அளிக்க வேண்டும். குழந்தைகளையும், வளர்ப்பு பிராணிகளையும் மூடிய வாகனங்களில் தனியாக அமர்ந்திருக்க அனுமதிக்க வேண்டாம்.சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலின் தாக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்படலாம். எனவே அவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.மது, தேனீர், காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதிக புரதம் அல்லது மாமிச கொழுப்பு சத்துள்ள மற்றும் கார வகைகளை தவிர்க்க வேண்டும்-vishwarubam

♈🇮🇳 கேட்டானே ஒரு கேள்வி-போட்டானே நச்சுன்னு ஒரு போஸ்டர –மதுரை போஸ்டர் போட்டவங்களுக்கு விஸ்வரூபதின் பாராட்டுக்கள் -மதுரையில் இரு சக்கர வாகனம் ஒட்டுபவர்கள் கடந்த 1ஆம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை கமிஷ்னர் சைலேஷ் குமார் யாதவ் அறிவித்தார். ஹெல்மெட் அணியாதவர்களிடம் 100 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. இதற்கு மதுரை நண்பர்கள் என்ற இளைஞர் படை சவால் விட்டுள்ளது.நீதித்துறையே, தமிழக அரசே, கால்வதுறையே உங்களின் கனிவான கவனத்திற்கு… ஹெல்மெட் அணிய நாங்க ரெடி? தரமான சாலை அமைத்து தர நீங்க ரெடியா? சாலைகளின் குண்டு குழிகளை அடைக்க மக்களின் ரத்தம் இன்னும் எத்தனை லிட்டர் தேவை? என கண்டனம் தெரிவித்து போஸ்டர்களை மதுரை முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்

♈🇮🇳 நீலகிரியில் தொடரும் யானை மரணங்கள்.. உணவின்றி இறந்து போன மக்னா யானை

♈🇮🇳 கோழி வளர்ப்பு மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் நிலத்தை ஏலம் விட நீதிமன்றம் உத்தரவு-ஈரோடு மாவட்டம், சென்னிமலை

♈🇮🇳 குடிபோதையில் மனைவியைக் கொன்ற கணவருக்கு வாழ்நாள் தண்டணை-கோவை மாவட்டம், இடையர்பாளையம், நேரு நகர்

♈🇮🇳 15-வயது சிறுமி பலாத்காரம்; ரெண்டு பெண்டாட்டிக்காரர் கைது-சேலம் நகரிலுள்ள கிச்சிப்பாளையம், ஒத்தைபிள்ளைக்காடு பகுதி

♈🇮🇳 காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு தொடர்ந்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

♈🇮🇳 ஐ.ஏ.எஸ் அதிகாரி 3பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நிரஞ்சன் மார்டி, டேவிதார், ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோர்களுக்கு தலைமைச்செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கோரி காவல் ஆணையருக்கு வருமானவரித்துறையினர் கடிதம் அனுப்பி உள்ளனர். சென்னை அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்திவரும் வருமானவரித்துறையினர் பாதுகாப்புக்காக கூடுதலாக 50 போலீசார் தேவைப்படுவதாக கடிதம் அனுப்பியுள்ளனர்

♈🇮🇳 இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் மார்ச் 22 ம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ருமேனியா நாட்டை சேர்ந்தவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

♈🇮🇳 டெல்லியில் தமிழக விவசாயிகள் கையை அறுத்து போராட்டம்

♈🇮🇳 ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த சோதனையில் இதுவரை ரூ.27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் கரண் சின்ஹா தெரிவித்தார். மேலும் தேர்தல் பாதுகாப்பிற்கு கூடுதலாக 5 கம்பெனி படைகளை கோரியுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்

♈🇮🇳 சிறந்த நடிகருக்கான தேசிய விருது அக்‌ஷய்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ருஸ்தம் படத்தில் நடித்தற்காக அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 🌴 கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு 7வது முறையாக சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது

♈🇮🇳 சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்

♈🇮🇳 எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் கீதாலட்சுமி மருத்துவ கல்லூரிகளில் பலகோடி ரூபாய் ஊழலில் ஈடுப்பட்டதற்கான ஆவணங்களை ஐடி துறையினர் கைப்பற்றியுள்ளனர்

♈🇮🇳 முன்பே அறியக்கூடிய தமிழிசை எதுவுமே இன்னும் சொல்லவில்லையே –அதுக்குள்ளவா -மோடி அரசின் நோக்கமே நான் ஜெயிச்சிடக் கூடாதுங்கறதுதான்! – புலம்பும் தினகரன்

♈🇮🇳 வயது வித்தியாசம் இல்லாமல் இப்போது பாலியல் தொல்லைகள் அதிகரித்து விட்டன. அந்த வகையில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் 70 வயது மூதாட்டியை பிளம்பர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். அவமானம் தாங்காமல் மூதாட்டி தற்கொலை!!

♈🇮🇳 அப்ப முன்னாள் தலைமை செயலாளர் கதை எப்படியாம்-டுபாகூர் விஸ்வரூபமா-ஒரே சிரிப்பு சிரிப்பா வருது இவங்க எது சொன்னாலும்- தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், இந்த வருமானவரி சோதனை ஆதாரங்களின் அடிப்படையில்தான் நடக்கிறது. பாஜகவுக்கும் இந்த சோதனைக்கும் இந்த தொடர்பும் கிடையாது. கறுப்பு பணம், ஊழலுக்கு எதிரான கொள்கையை கொண்டது பாஜக. எனவே இந்த வருமான வரி சோதனையை பாஜக ஆதரிக்கிறது என்றார்

♈🇮🇳 ரஷ்யாவில் 17 வயது மாடல் அழகியான தனது தங்கையை அக்காவே கொடுரமாக கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

191total visits.